Translate Tamil to any languages.

ஞாயிறு, 15 மார்ச், 2020

கொரோனா தொற்றில் இருந்து முற்காப்பு எடு!

கத்திரியும் காண்டாவனமும்  கொல்லுமாமே!

கொரோனா கொரோனா  -  நீ
எங்கே பிறந்தாய்  -  நீ
எப்படிப் பிறந்தாய் - நீ
காற்றில பரவி உலகில
ஆள்களை கொல்லுறியாமே!
அமெரிக்காவை அழிக்கவா? -  உன்னை
சீனாவா உருவாக்கியது?  -  அந்த
சீனாவுக்குத் தெரியாதா?  -  நீ
உலக மக்களை அழிக்கவே
உருவெடுத்தாய் என்று! 
கொரோனா கொரோனா  -  நீ
தமிழகம் வந்தால்  -  உன்னை
கத்திரி வெயில் கொல்லுமாமே!
கொரோனா கொரோனா  -  நீ
யாழ்ப்பாணம் வந்தால்  -  உன்னை
காண்டாவன வெயில் கொல்லுமாமே!
கொரோனா கொரோனா  -  நீ
கொழும்புக்கு வந்தால்  -  உன்னை
புலிகளையே அழித்து ஒழித்த
சிங்களப் படையே கொல்லுமாமே!
காற்றிலும் மாற்று வழியிலும்
பரவிய கொரோனாவின் ஆயுளை
கடும் வெயில் குறைத்தாலும்
நமது உடலுக்குள் ஊடுருவ விடாது
நாமே முற்காப்பு எடுக்க வேணுமே!





முகநூலில் பொறுக்கியது
1.நிலவேம்பு (Green Chiretta),    2.பற்படகம் (Fumaria indica),
3.கீழாநெல்லி (Gale of the wind),     4.பிரண்டை (Veld grap),
5.நாயுருவி வேர் (Achyranthes aspera),
6.ஆடாதோடை (Malabar nut),    7.கற்றாழை,  
8.கொய்யா இலை,    9.நெல்லி இலை
10.இஞ்சி,    11.வெள்ளைப்பூண்டு.

ஆகியவற்றை ஒரு கைபிடி வீதம் அளவில் எடுத்து 1000ml நீரில் கொதிக்க வைத்து, சூடு ஆறியதும் 'தேன்' உடன் கலந்து சாப்பாட்டிற்கு முன் ஒரு டம்ளர் (சிறிய) அளவு மூன்று வேளை குடிக்கவும்.
"பழங்காலத்திலிருந்து இன்று வரை பயன்படுத்தி வரும் வைரஸினை எதிர்ப்பதற்கான சித்த மருந்து!" என நண்பர் S.Vinoj Kumar முகநூலில் பகிர்ந்ததை நானுமிங்கு பகிருகிறேன்.

குறிப்பு: நகைச்சுவையாக எவரும் இருந்துவிடாமல் கொரோனா நோய்த் தொற்றில் இருந்து தப்பிக்க முற்காப்பு எடுத்து வாழ முயல்வோம்!


எனது நூல் வெளியீடு
எனது "யாழ்பாவாணன் கவிதைகள்" நூலை இலங்கை, யாழ்ப்பாணம், மாதகல் ஊரில் நான் படித்த பாடசாலையில் வைத்து 2020 மே 08 வெள்ளி வெளியிடவுள்ளேன். இந்நூலுருவாக்கப் பணிகளை இந்திய-தமிழ்நாடு, திருச்சி, இனிய நந்தவனம் பதிப்பகம் நிறைவேற்றித் தந்திருக்கிறது. எனது நூல் வெளியீட்டு விழாவிற்கு வருகை தரவுள்ள தமிழக அறிஞர்கள், நந்தவனம் சந்திரசேகரன் (நடைபேசி: +91 94432 84823) அவர்களுடன் தொடர்புகொண்டு இலங்கைச் சுற்றுலாப் பயணத்தையும் மேற்கொள்ளலாம்.


மேலும், இந்நூலுக்கான அறிமுக விழாவினை 2020 ஜூலை இல் தமிழ்நாட்டில் நடாத்த எண்ணியுள்ளேன். அவ்வேளை வலைப்பதிவர்களைச் சந்திக்கவும் எண்ணியுள்ளேன். வலைப்பதிவர்கள் எல்லோரும் சந்திக்கத் தகுந்த பொது இடம் ஒன்றினைத் தெரிவு செய்து பின்னூட்டத்தில் தாருங்கள்

12 கருத்துகள் :

  1. அருமை
    விழிப்புணர்வுடன் பாதுகாப்பாய் இருப்போம்

    பதிலளிநீக்கு
  2. வெயில் தடுக்குமா என்பது தெரியாது.

    நூல் வெளியீட்டிற்கு வாழ்த்துகள் ஐயா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கொரோனா வைரஸ் பரவும் போது வெளிகளில் (சூழலில்) வெயில் பட்டால் அதன் ஆயுள் (6-12 மணி நேரம்) குறையுமாம். அதனால் பரவல் குறையும். வெயில் குறைந்த இடங்களில் பரவல் அதிகமாக இருக்கும். வெயில், கொரோனா வைரஸை கொல்லும் என்பது உறுதிப்படுத்தப்படவில்லை.

      நீக்கு
  3. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  4. வலைப் பதிவர்கள் சந்திப்பை ஐயப்பன் திருமணமண்டபத்தில் நடத்தலாம்என் வீட்டருகே விருப்பப்பட்டால் தெரியபடுத்தினால்மேற்கொண்டு விவாதிக்கலாம் என்னால் ஓடியாடிஎதுவும் செய்ய இயலாது

    பதிலளிநீக்கு
  5. கொரானோ கவி நன்று
    காணொளி கண்டேன் நண்பரே
    நூல் வெளியீட்டிற்கு மனம் நிறைந்த வாழ்த்துகள்

    வருக சந்திப்போம்

    பதிலளிநீக்கு
  6. பாதுகாப்பாகத் தான் இருக்கின்றோம். எம்மையும் மீறி வருவதை நாம் தடுக்க முடியாது

    பதிலளிநீக்கு
  7. தமிழ் வலைப்பூக்களுக்கு ஆதரவு வழங்க, புதிய வலைத்திரட்டியை உருவாக்கும் புதிய முயற்சி. உருவாகியது புதிய இணையத்தளம்: வலை ஓலை . நமது, வலை ஓலை இணையத்தளத்தில் பரீட்சார்த்தமாக 15 வலைத்தளங்கள் இணைக்கப்பட்டுள்ளன.

    16ஆவது வலைத்தளமாக தங்களது வலைத்தளம் இணைக்கப்பட்டுள்ளது. தங்கள் வலைப்பதிவின் அண்மைய 25 பதிவுகளும் இணைக்கப்பட்டுள்ளன.

    வலைத் திரட்டியை உங்கள் நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள்...

    தற்போது, தங்களது கொரோனா தொற்றில் இருந்து முற்காப்பு எடு! பதிவும் எமது தளத்தில் இணைக்கப்பட்டுள்ளது. அத்துடன், அனைத்து வலைத்தளங்களையும் எமது வலைத்திரட்டியில் இணைக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளோம்.

    உங்கள் மேலான ஆதரவை வழங்க கேட்டுக் கொள்கிறேன். உரிய ஆதரவின்றி இழுத்து மூடப்பட்ட வலைத் திரட்டிகளின் நிலை எமது தளத்துக்கு ஏற்படாது என நம்புகிறோம்.

    உங்கள் வலைப்பதிவை அறிமுகப்படுத்த ஒரு சந்தர்ப்பம். விபரம் இங்கே: நீங்களும் எழுதலாம்

    எமது வலைப் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ள வலைத்தளங்களின் வலைப்பட்டியலைக் காண: வலைப் பட்டியல்

    பதிலளிநீக்கு
  8. கொரோனா முற்காப்புக் கவிதை அருமை சகோ. உங்கள் நூல் வெளியீட்டுக்கு இனிய வாழ்த்துக்கள். சந்திரசேகரன் சார் அவர்களுக்கும். :)

    பதிலளிநீக்கு
  9. ஆஹா காணொளியில் சிவனே சொல்லிவிட்டார் ,,, இனி கொரோனா வை சிவனேன்னு கைகழுவிட வேண்டியதுதான் ... >> சயின்டிபிக் ஜட்ஜ்மென்ட் <<

    பதிலளிநீக்கு

வருக அறிஞர்களே! தருக தங்கள் கருத்துகளையே!