Translate Tamil to any languages.

ஞாயிறு, 22 மார்ச், 2020

கொரோனாவை விட்டுவிலகி நலமோடு வாழ்வோம்.

வலை வழியே கண்ணுற்ற தகவலை ஒளியும் ஒலியும் (வீடியோ) பதிவாகப் பகிர முனைந்துள்ளேன். கீழே எனது ஒரு விகற்ப நேரிசை சிந்தியல் வெண்பாக்களும் விளக்கமும் பதிவு செய்துள்ளேன்.

 

கேடான உணவை விட்டிட்டு வாழப்பார்!


கண்ட உணவுகளும் உண்டு களிக்கலாம்
உண்ட உணவுகளால் நோய்களும் - அண்டவே
கண்ட உணவுந்தான் கேடு!

மருத்துவத் தன்மை இருக்கும் உணவை
விருப்புடன் உண்டுதான் என்றும் - மருந்தை
ஒருபோதும் நாடாது வாழு!


இயற்கை உணவுகளில் நாட்டம் கொள்ளாது, செயற்கைச் சுவையூட்டி உணவுகளை உண்டுகளித்து நோய்களைத் தேடும் உறவுகளே! மருத்துவக் குணமுள்ள இயற்கை உணவுகளில் நாட்டம் கொண்டால் நீடூழி வாழ  வாய்ப்புண்டாம். நீடூழி வாழ்ந்தவர்கள் தம் உடற்பயிற்சியாலும் இயற்கை உணவாலும் தாம் நீடூழி வாழ்ந்ததாகச் சொல்கிறார்களே!

இடமாற்றமும் உளமாற்றமே!
மறக்க முடியல புண்பட்ட உள்ளம்
மறக்க மருந்துமே இல்லை - மறக்க
சிறந்த இடமெங்கே நாடு!

சிறந்த மருந்தாம் மறப்பதற்கு உண்டு
சிறந்த இடத்தில் பழசும் - மறக்க
சிறப்பாய் புதியதை நாடு!

சில இடங்களில், சில சூழ்நிலையில் சிலரது உள்ளம் நோகக்கூடும். பழைய புண்ணில் குத்தினால் வலிப்பது போல அவர்கள் துன்பத்திற்கு உள்ளாகலாம். அவ்வாறானவர்கள் புதிய இடத்தை, புதிய சூழலைத் தெரிவு செய்வதன் மூலம் அமைதியை நாடலாம். பழசுகளைக் கிழறாத இடமோ சூழலோ தான் உள்ளத்தில் அமைதியைத் தோற்றுவிக்கும்.


விழிப்புணர்வும் அறுவடையும்


விழிப்படைய வைக்கத்தான் நல்வழியைச் சொல்ல
விழித்தெழ வேண்டியவர் யார்தான் - விழித்து
எழுந்துமாற் றம்கண்டார் காண்.

விழித்தெழுந்து மாற்றம் மலர்ந்திடக் காண்பார்
விழித்தெழ நல்வழிதான் காட்டின் - விழித்தே
முழுவூரும் மேம்படக் கண்டு.

நம்மவர் பலர், "பிறர் நமக்கேன் அறிவுரை சொல்ல வேண்டும்." என நினைப்பதனால் 2020 இல் தலைகாட்டிய COVID-19 (கொரோனா) வைரல் தொற்றுக்கு உள்ளாகினர். "முற்காப்பு எடுத்து இருந்தால் COVID-19 (கொரோனா) வைரல் தொற்று ஏற்பட்டிருக்காது" என வந்த பின் நொந்து பயனில்லையே! எவரும் (பெரியவரோ சிறியவரோ ஆணோ பெண்ணோ) வழிகாட்டலாம், நாம் நன்மை அடைவதற்கே எனச் சிந்தித்துச் செயலாற்றியவரே பயனடைவர்.

4 கருத்துகள் :

  1. தமிழ் வலைப்பூக்களுக்கு ஆதரவு வழங்க, புதிய வலைத்திரட்டியை உருவாக்கும் புதிய முயற்சி. உருவாகியது புதிய இணையத்தளம்: வலை ஓலை . நமது, வலை ஓலை இணையத்தளத்தில் பரீட்சார்த்தமாக 22 வலைத்தளங்கள் இணைக்கப்பட்டுள்ளன.

    தற்போது, தங்களது கொரோனாவை விட்டுவிலகி நலமோடு வாழ்வோம். பதிவும் எமது தளத்தில் இணைக்கப்பட்டுள்ளது. அத்துடன், அனைத்து வலைத்தளங்களையும் எமது வலைத்திரட்டியில் இணைக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளோம்.

    உங்கள் மேலான ஆதரவை வழங்க கேட்டுக் கொள்கிறேன். உரிய ஆதரவின்றி இழுத்து மூடப்பட்ட வலைத் திரட்டிகளின் நிலை எமது தளத்துக்கு ஏற்படாது என நம்புகிறோம்.

    உங்கள் வலைப்பதிவை அறிமுகப்படுத்த ஒரு சந்தர்ப்பம். விபரம் இங்கே: நீங்களும் எழுதலாம்

    எமது வலைப் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ள வலைத்தளங்களின் வலைப்பட்டியலைக் காண: வலைப் பட்டியல்

    பதிலளிநீக்கு
  2. (நோக்கு:
    காற்றோடு காற்றாய்க் கலந்த கொரோனாவே
    காற்றோடு காற்றாக மூக்கில் நுழைந்தாயே
    மக்கள்தான் நாளும் இறப்பு!
    -------
    பாவினம்: பல விகற்ப இன்னிசை சிந்தியல் வெண்பா)
    https://soundcloud.com/user-931419833-701375967/4y7nvhga515w

    பதிலளிநீக்கு
  3. தற்காப்போடு முற்காப்பும் வேண்டுமென அருமையாக வலியுறுத்தியுள்ளீர்கள் ... நன்றி !!>> சயின்டிபிக் ஜட்ஜ்மென்ட் <<

    பதிலளிநீக்கு

வருக அறிஞர்களே! தருக தங்கள் கருத்துகளையே!