Translate Tamil to any languages.

செவ்வாய், 31 மார்ச், 2020

துயர் தரும் கொரோனாவும் தொல்லை தரும் வதந்திகளும்


கொரானாவால் ஒருவர் சாவு! - எனக்கு
நடைபேசியில் செய்தி வந்தது! - அதில்
உண்மை ஏதுமில்லையென - அந்த
வதந்தியை ??ந்தி பரப்பியதாய் தகவல்!
சாவடைந்ததாகச் சொல்லப்பட்டவர்
உயிரோடு இருப்பதாகவும் - தனக்கு
கொரானா இல்லையென்றும் - அவரே
இணையத்தில் உரிமை கோருகிறாரே!

மதுபானம் குடித்தால் கொரானா தொற்றாதென, பலர் மதுபானம் குடித்துச சாவடைந்ததாகத் தகவல் ஒன்று நடைபேசியில் வந்தது! இவ்வாறான வதந்திகளைப் பரப்பாமல் கொரானா தொற்றாமல் இருக்கப் பாதுகாப்புத் தேடுவதே நல்வழி.

எந்தவொரு நோய்க்கும் மதுபானம் மருந்தாக மாட்டாது. மருந்துக்குக் குடிப்பதாகச் சொல்லி செத்தவர்கள் அதிகம். இந்த ஒளியும் ஒலியும் (வீடியோ) இல் "மதுபானம் குடிக்காதீங்க, அதனைக் குடித்தால் விளைவு என்ன?" என்பதை நகைச்சுவையாகச் சொல்லப்படுகிறது.



கொரோனா பரவாமல் வீட்டில் இருங்கள்

வருது வருது கொரோனா வருது
விலகு விலகு கொரோனா போகும்
                                                                          (வருது)     
ஒதுங்கு ஒதுங்கு கொரோனா விலகும்
முடங்கு முடங்கு கொரோனா சாகும்
                                                                         (ஒதுங்கு)
வீட்டில தான் இருக்கலாம் தான்
ஏட்டைத் தான் படிக்கலாம் தான்
மூக்கு முட்ட உண்ணலாம் தான்
நீட்டி நிமிர்ந்து படுக்கலாம் தான்
கொரோனா வராமல் தடுக்கலாம் தான்
                                                                         (வருது)
                                                                        (ஒதுங்கு)
வீட்டில கிடந்து உருளலாம் தான்
நாட்டு நடப்பை இணையத்தில தான்
பார்த்துப் பார்த்து அறியலாம் தான்
சேர்த்துத் சேர்த்து அறிவைத் தான்
உலகறிய இணையத்தில பரப்பலாம் தான்
கொரோனா வராமல் தடுக்கலாம் தான்
                                                                                       (வருது)
                                                                                       (ஒதுங்கு)
வீட்டிலேயே இருந்திட்டால் கொரோனா தான்
எட்டிப் பார்க்க இடமில்லைக் காண்
நாட்டிலேயே பரவாமல் கொரோனாவைத் தான்
காற்றிலேயே சாகவைத்து உதவலாம் தான்
கொரோனாவை விரட்டுவோர் மக்கள் தானே
                                                                                       (வருது)
                                                                                       (ஒதுங்கு)

உலகை உறுத்தும் கொரோனா தான்
வீதிக்கு வந்தால் உயிர் குடிப்பேனென
வீட்டுக்குள்ள இருக்கவைத்து அழகு பார்க்குதே!
நம்மாளுங்க தெருவில இறங்கி
கொரோனாவைப் பிடிப்பேனெனச் சாகிறாங்க...
வீட்டிற்குள்ள முடங்கியவர் தப்பினரே!

வலை ஊடகங்கள் பற்றிய ஒளியும் ஒலியும் (வீடியோ) இரண்டாம் பகுதியில் வலை ஊடகங்களை எவ்வாறு கவனமாகக் கையாள்வது பற்றி வெளிப்படுத்தி உள்ளேன். அதனை ஒன்பது மணித்துளி (9 Minutes) நேரம் பொறுமையாகப் பாருங்கள். அதனைத் திறனாய்வு செய்யுங்கள். குறை, நிறைகளைப் பகிருங்கள். சிறப்பாக இருப்பின் உங்கள் நண்பர்களுக்கும் பகிர்ந்து உதவுங்கள்.


7 கருத்துகள் :

  1. கொரோனா பற்றி ஒரு அழகிய பாடலோடு நல்ல போஸ்ட்... நம் மக்களுக்கு எது செய்தாலும் ஓவராகச் செய்யோணும் எனும் ஆசை...
    அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சுதானே.

    பதிலளிநீக்கு
  2. நல்ல அறிவுரைகள். கேட்க வேண்டுமே. பொய்களை மெய்யாக நம்புபவர்களே அநேகம்

    பதிலளிநீக்கு
  3. வதந்திகளை பரப்புவதில் சில ஜடங்கள் மகிழ்ச்சி காண்கின்றன...

    பதிலளிநீக்கு
  4. பாடல் மூலம் அருமையான விழிப்புணர்வு பகிர்வு...

    பதிலளிநீக்கு
  5. நல்ல விழிபுணர்வுபதிவு .... அது என்ன "நடைபேசி"? ... செல்போன் - ஐ தான் அவ்வாறு குறிப்பிடுகிறீர்களா? நாங்கள் இந்தியாவில் அதை "கைபேசி" என்றுதான் குறிப்பிடுகிறோம் . கையில் வைத்து பேசுவதால் .... நடந்தபடியே பேசுவதால் கவனம் சிதறுவதோடு விபத்து ஏற்படுவதற்கும் வழி ஏற்படுத்தி கொடுத்துவிடுமே? அதனால் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக கைபேசி என்றே நீங்கள் சொல்லி வரலாமே ? ... >> சயின்டிபிக் ஜட்ஜ்மென்ட் <<

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் கருத்தை வரவேற்கிறேன்.

      Hand Phone - கைப்பேசி
      Mobile Phone - நடைபேசி
      Smart Phone - திறன்பேசி

      நீக்கு
  6. சமூக வலைதளங்கள் மூலமாக எதிர்மறைக்கருத்துகள்தான் அதிகமாகப் பரவுகின்றன. விழிப்புணர்வுப்பதிவுகளே இக்காலகட்டத் தேவை.

    பதிலளிநீக்கு

வருக அறிஞர்களே! தருக தங்கள் கருத்துகளையே!