சாவடைந்தவர்கள் 10% தான் வாழ்ந்தார்களாம்...
90% தான் வாழாமலே சாவடைந்தார்களாம்...
இப்படியும் ஒரு தகவல்!
எப்படியோ
90% தான் வாழ்ந்து சாகவேணும்
10% தான் வாழாமலே சாகலாம்
அப்படி என்றால்
எப்படித் தான் வாழ வேணும்?
தானும் தன் வாழ்வுமெனத் தான்
வாழ்ந்து தான் பார்க்கலாம்...
பிறர் வாழ்வைக் கண்காணித்து
பிறரைப் போல வாழ நினைத்தால்
எவரும் 1% தான் வாழ இயலுமோவென
என் இல்லாளும் என்னைக் கேட்கிறாளே!
கெட்டவரை வெட்ட வேணும்
கெட்ட சொல் பாவனை வேண்டாம்.
வெட்ட வேணும் கெட்ட சொல்களையா?
கெட்ட சொல் புனையும் ஆள்களையா?
பட்டுப் பழுத்த கிழங்கள் கேட்குதே!
இழிசொல் பகிர்ந்து - தமிழ்
மொழிக்கு இழிவு ஏற்படுத்தலாமோ?
வேர்த்
தமிழ் சொல்
இனிய நற்றமிழ் சொல்
அன்பைப் பகிரும் சொல்
அறிவைப் பகிரும் சொல் என
அருமையான எத்தனையோ சொல்லிருக்க
இழிசொல் கலந்து புனையும்
பதிவுகளைப் பகிருவது தமிழுக்கு இழுக்கே!
குறிப்பு: சமூக வலைத் தளங்களில் கெட்ட (தூஷணச்) சொல் பாவிப்போரை ஒதுக்கி வையுங்கள். இல்லையேல் நீங்களும் நிர்வாணமாகலாம்.
விடா முயற்சி கெடாதென்பேன்!
ஒதுக்கி விலக்கிக் கழித்துப் போட்டினமென
ஒதுங்கினாலும் - நான்
பயின்றேன்; முயன்றேன்; வென்றேன்; வாழ்கிறேன்!
ஒதுங்கி இருந்தாலும் கூட
ஒதுக்கி வைத்தோரைக் கணக்கில் எடுக்காமல்
நமது இலக்கை எட்ட உழைப்போம்!
ஒரு நாள் - அந்த
நாம் வென்ற நாள் பார்த்து
ஒதுக்கி வைத்தோரும் கூட
எமது காலில் விழலாம் பார்!
தன்னம்பிக்கை வரிகள் அருமை நண்பரே...
பதிலளிநீக்குஅருமை.
பதிலளிநீக்கு