https://seebooks4u.blogspot.com/2017/10/2017.html
மதுவை விரட்டினால் கோடி
நன்மை!
தமிழ் இலக்கியத்திலே
"ஆடிப்
பாடி வேலை செய்தால்
களைப்புத்
தெரியாதே" என
தொழில் சார்
நாட்டுப் பாடல்
அதிகமாக
அன்றிருந்தது!
20 ஆம்,
21 ஆம் நூற்றாண்டிலே
"களைப்புத்
தெரியாமல் வேலை செய்ய
காலும் அரையும்
அடித்தால் போதும்" என
முதலாளி
சார் நாட்டு நடப்பு
அதிகமாக
இன்றிருக்கிறதே!
தமிழ் இலக்கியத்திலே
வீட்டிலே
கொண்டாட்டம் என்றால்
ஆட்டமும்
பாட்டும் போட்டுக் கூடி
உண்டு களித்து
மகிழ்ச்சியைப் பகிர
நாட்டுப்
பாடல் நிறைய இருந்தது!
20 ஆம்,
21 ஆம் நூற்றாண்டிலே
வீட்டிலே
கொண்டாட்டம் என்றால்
மகிழ்ச்சியைப்
பகிர்ந்து சாவைக் காண
கூடிக் குடித்துக்
கும்மாளம் போடவே
குடி (மது)
வகைகள் நிறைய இருக்கிறதே!
தமிழ் இலக்கியத்திலே
சாவீட்டிலும்
கூடத் துயரைப் பகிர
மார்பிலடித்து
அழுது புலம்ப
ஒப்பாரி
(நாட்டுப்) பாடல் கூடவே இருக்கும்!
20 ஆம்,
21 ஆம் நூற்றாண்டிலே
சாவீட்டிலும்
கூடத் துயர (சோக) இசையும்
துயரைப்
பகிரக் குடி (மது) வகையும்
எட்டிப்
பார்க்கும் இழிநிலை தொடருகிறதே!
மதுப் (அற்ககோல்)
பாவனை எங்கும் நுழைந்து
தமிழ் இலக்கியமும்
தமிழர் பண்பாடும்
நாளுக்கு
நாள் சாவடைய வைக்கிறதே!
மதுப் (அற்ககோல்)
பாவனை எங்கும் நுழைந்து
வீட்டுக்
வீடு மகிழ்வற்றுத் துயருற்று
ஆளை ஆள்
சாகடிக்க வைக்கிறதே!
எம்மினமே!
எம்உறவுகளே!
எம்மையே
எண்ணிப் பாருங்கள்!
எங்கள் எதிர்காலம்
என்னவாகுமென
எள்ளளவேனும்
எண்ணிப் பாருங்கள்!
முகநூலில்
(Facebook) "இராவணன் பாலம்" என்ற உறவின் பதிவில் வெளியாகியிருந்த படம் இது.
உயிரோவியம் வரைந்தவரைப் பாராட்டுவோம்.
உங்களுக்குக்
கவிதை எழுத வருமா? - அப்படியாயின்
மேற்காணும்
தகவலை வைத்து, படத்தைப் பார்த்து
"மதுவை
விரட்டினால் கோடி நன்மை!" என
அழகான கவிதை
எழுதிக் காட்டுங்க...
கவிதைக்கான
தலைப்பு எதுவாயினும் - அது
உங்கள் விருப்பத்
தெரிவாக இருக்கட்டும்!
மக்கள் உள்ளங்களில்
(சமூகத்தில்) மாற்றத்தை விதைக்கும்
இனிய கவிதைகளைப்
பணிவோடு தொகுத்து - நாம்
மின்நூலாக
வெளியிட்டுப் பகிர்ந்துதவ எண்ணியுள்ளோம்!
மரபுக் கவிதையாயினும்
சரி
புதுக் கவிதையாயினும்
சரி
பத்திலிருந்து
இருபது வரிகளுக்குள் - உங்கள்
எண்ணங்களில்
மலர்ந்த கவிதைகள் அமையணும்!
சிறந்த கவிதைகளுக்குப்
பரிசில் வழங்குவோம்! மின்நூல் வெளியிடும் வேளை பரிசில் விரிப்பு வெளியிடுவோம்! உங்கள் கவிதைகளை
wds0@live.com என்ற மின்னஞ்சலுக்கு 31-12-2017 இற்கு முன்னதாக அனுப்பிவைக்கவும்.
கருத்துகள் இல்லை :
கருத்துரையிடுக
வருக அறிஞர்களே! தருக தங்கள் கருத்துகளையே!