“பழையன கழிதலும்
புதியன புகுதலும்
வழுவல
கால வகையினானே”
என்ற
நன்னூல்
நூற்பா(462) வழியே
தமிழர் பண்பாட்டைப்
பேணும் நோக்கில்
நல்லவற்றை
ஏற்பதில் தவறில்லையே!
ஆங்கில மொழிப்
பேச்சு வழக்கான
Welcome
- 'வணக்கம்' எனவும்
Hand
Shake - 'கை குலுக்கல்' எனவும்
Thanks
- 'நன்றி' எனவும்
Bye - 'போயிட்டு
வாறேன்' எனவும்
தமிழர் செயல்களில்
வரினும் - அவை
நன்னெறி
காட்டிப் பாவிப்பதைப் பாரும்!
நிகழ்வாயினும்
சரி
அரங்கப்
(மேடைப்) பேச்சாயினும் சரி
"வணக்கம்"
என்று தொடங்கி
"நன்றி"
என்று முடிக்கிற
பண்பாட்டை
வழக்கப்படுத்தியாச்சு!
ஆளை ஆள்
சந்திக்கையில்
"வணக்கம்"
என்று கைகுலுக்கி
உறவை உருவாக்கி/
புதுபித்து - பின்
"நன்றி"
என்று கைகூப்பி
மலர்ந்த/
பழகிய உறவைப் பேணி
'போயிட்டு
வாறேன்' என விடைபெறுவதும்
தமிழர் உறவு
முறையில் பழகியாச்சு!
நன்னெறி
காட்டி
பழக்கப்படுத்தியதையும்
வழக்கப்படுத்தியதையும்
மாற்றிக்கொள்ள
முயன்றால் - விளைவாக
நல்ல தமிழ்ப்
பண்பாடு சீரழியுமே!
எப்படி இருப்பினும்
'வணக்கம்'
என்கிற 'Welcome' உம்
'நன்றி'
என்கிற 'Thanks' உம்
தமிழில்
தேவையே இல்லை!
பிறமொழிச்
சொல் பயன்பாட்டை
தமிழில்
இருந்து அகற்றாத வரை
தமிழ்ப்
பண்பாடு தான்
உலகில் சிறந்தது
என்று முழங்கி
பயன் ஏதாச்சும்
கிட்டுமா?
பயன் கிட்டப்
பக்குவமாக
பிறமொழிச்
சொல் நீக்கி
நற்றமிழ்
சொல் பொறுக்கி - அழகுற
எழுத்திலும்
பேச்சிலும் வாழ்விலும்
பழக்கப்படுத்தி,
வழக்கப்படுத்திப் புழங்க வேண்டுமே!
"ஆரியப்
பழக்கம் வந்த பின்னர் தான் நமஸ்ஹாரம் என்று ஒருவரை ஒருவர் பார்த்து சொன்னார்கள். அதைத்
தமிழில் எப்படி சொல்வது என்று கேட்டார்கள். அதைத் தொடர்ந்து தான் வணக்கம் நம்மை தொற்றிக்
கொண்டது." எனத் தமிழகத் தமிழறிஞர் பேராசிரியர் நன்னன் அவர்கள் தெரிவித்ததாக 'எனது
எண்ணங்கள்' வலைப்பூவில் அறிஞர் தி.தமிழ் இளங்கோ பகிர்ந்திருந்தார். அப்பதிவுக்குக்
கருத்துரைத்த அறிஞர் ஜீவி அவர்கள் "நமஸ்காரம் வெகுதிரள் மக்களின் பயன்பாட்டில்
இல்லாத நேரத்தும் 'குட்மார்னிங்' பார்த்து இதற்கு தமிழில் என்ன சொல்லலாம் என்ற யோசனையின்
அடிப்படையில் வந்ததே 'வணக்கம்' என்று நினைக்கிறேன்." எனப் பகிர்ந்திருந்தார்.
https://tthamizhelango.blogspot.com/2017/12/blog-post.html
இக்கருத்துகள்
என்னைச் சித்திக்கவைத்தது. அதனால், என்னுள் எழுந்த எண்ணங்களை எனது வழமையான கிறுக்கலில்
உங்களுடன் பகிருகின்றேன்.
கருத்துகள் இல்லை :
கருத்துரையிடுக
வருக அறிஞர்களே! தருக தங்கள் கருத்துகளையே!