கவிதையென்றால்
பாரதியார் நினைவில் வரவேண்டும்.
பாரதி பிறந்த
நாளில் (11/12/1882) எனக்கொரு செய்தி கிட்டியதே! அதனைத் தங்களுடன் பகிர விரும்புகின்றேன்.
இலங்கை,
யாழ்ப்பாணம், டாண் தமிழ் ஒலி தொலைக்காட்சியில் 05/10/2017 அன்றும் 06/10/2017 அன்றும்
ஒளிபரப்பாகிய 'கவிதைகள் சொல்லவா' நிகழ்வில் மூத்த கவிஞர் சி.ரவீந்திரன் அவர்களுடன்
சின்னப்பொடியன் யாழ்பாவாணன் அவர்களும் பங்குபற்றி இருந்தார். இருவரையும் கவிஞர் முகுந்தன்
அவர்கள் நேர்காணல் மேற்கொண்டார்.
இலக்கிய
உலகில் 1987 இல் நுழைந்தாலும் எனது "உலகமே ஒருகணம் சிலிர்த்தது" என்ற தொடக்க
வரியைக் கொண்ட முதல் கவிதை 25/09/1990 அன்று ஈழநாதம் நாளேட்டில் வெளிவந்தாலும் என்
வாழ்வில் முதலாவது நேர்காணல் இதுவென்பேன். என்னை முதலில் நேர்காணல் செய்த கவிஞர் முகுந்தன்
அவர்களை எனது வலையுறவுகள் எல்லோரும் பாராட்டுவீர்கள் என நம்புகின்றேன்.
'கவிதைகள்
சொல்லவா' நிகழ்வில் என்னையும் ஒரு பொருட்டாகக் கருதி அழைத்துச் சிறப்பித்தமைக்கு இலங்கை,
யாழ்ப்பாணம், டாண் தமிழ் ஒலி தொலைக்காட்சி மேலாண்மைக்கும் கவிஞர் முகுந்தன் அவர்களுக்கும்
உள்ளம் நிறைந்த நன்றி உரித்தாகுக.
05/10/2017
அன்று ஒளிபரப்பாகிய பதிவு
முகநூல் இணைப்பு: https://www.facebook.com/askmedianetwork/videos/490166971367649/
06/10/2017
அன்று ஒளிபரப்பாகிய பதிவு
முகநூல் இணைப்பு: https://www.facebook.com/askmedianetwork/videos/490167281367618/
இந்த நேர்காணலைப்
பார்வையிட்ட பின்னர் - தங்கள்
சொந்த எண்ணங்களை
வெளியிட்டு உதவுங்கள் - அவை
நாளைய எனது
நகர்வுக்கு வழிகாட்டுமே!
கருத்துகள் இல்லை :
கருத்துரையிடுக
வருக அறிஞர்களே! தருக தங்கள் கருத்துகளையே!