"#ஜல்லிக்கட்டுக்கான ஆதரவாக #யாழ்நல்லூரான் முன்றலில்....
தமிழரின் அடையாளத்தைப் பாதுகாக்கத் தானாய்ச் சேர்ந்த கூட்டம்....
#தமிழண்டா" என முகநூல் நண்பர் 'பிரமிளன் மிலன்' தனது முகநூல்
பதிவில் குறிப்பிட்டிருந்தார்.
"அலங்கா நல்லூரில் தொடங்கிய போராட்டம்; கடல் கடந்து யாழ்
நல்லூர் வரைக்கும் விரிவடைந்து இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது." என முகநூல் நண்பர்
'கரன் டோனி' தனது முகநூல் பதிவில் குறிப்பிட்டிருந்தார்.
மேற்காணும் நண்பர்கள் முகநூலில் பகிர்ந்த ஒளிப்படங்களை இங்கு
காணலாம்.
"இன்றைய ஒன்றுகூடலின்
ஊடக அறிக்கை." என முகநூல் நண்பர் 'கிரிசாந்' தனது முகநூல் பதிவில் குறிப்பிட்டிருந்தார்.
அதனைப் படிக்கக் கீழ்வரும் இணைப்பைச் சொடுக்குக.
உலகெங்கும் தமிழரின் அடையாளங்களை அழிவடைய இடமளித்ததால் தான்,
அரை உலகையே ஆண்ட (ஆபிரிக்கக் கீழ் எல்லை தொட்டு அவுஸ்ரேலியக் கீழ் எல்லை வரையான இந்து
சமுத்திரம் உள்ளடங்கலான குமரிக்கண்டம்-lemuria continent) தமிழருக்கு உருப்படியான தமிழ்நாடு
இல்லாமல் போனது.
தமிழகத் தமிழரை ஈழத்துக்கு போவென
சுப்பிரமணிய சாமிக்கள், கிந்தீக்கள் விரட்டுவதும்
ஈழத் தமிழரைத் தமிழகத்துக்கு ஓடென
அப்புகாமிக்கள், களுபண்டாக்கள் விரட்டுவதும்
எத்தனை நாளைக்கு...?
தமிழரின் தொன்மை, தமிழரின் பண்பாடு,
குமரிக்கண்டம் (lemuria continent) வரலாறு எல்லாம்
உலகத்துக்கு உறைக்க உணர்த்தினால் தான்
ஈழத் தமிழரும் தமிழகத் தமிழரும்
இணைந்து இயக்கும் எழுச்சியாலே
உலகெங்கும் வாழும் தமிழர்
ஒன்றிணைந்து குரல் கொடுப்பதனாலேயே
தமிழரின் அடையாளத்தை உறுதிப்படுத்தலாம்...
வலுவான உறுதிப்படுத்தல் தான்
தமிழர் தலை நிமிர்ந்து வாழ வழி விடுமே!
இனியாவது உலகெங்கும் வாழும் தமிழர் ஒருங்கிணைந்த குரலெழுப்புதலால்
தான் தமிழரின் அடையாளத்தை நிலைநாட்ட முடியுமென உணருவோம்.
கருத்துகள் இல்லை :
கருத்துரையிடுக
வருக அறிஞர்களே! தருக தங்கள் கருத்துகளையே!