வலை
வழியே அறிவு சார்ந்த படைப்புகளைப் பகிரும் அறிஞர்கள் எல்லோரும் நாளுக்கு நாள் மாறிவரும்
தொழில்நுட்ப வளர்ச்சிப் போக்கிற்கேற்ப தமது பயணத்தில் சில மாற்று வழிகளையும் கையாள
வேண்டியிருக்கிறது. எடுத்துக்காட்டாக Wordpress இல் வலைப்பூ(Blog) நடாத்தியவர்கள்
Blogger(Google) இற்கு மாறிய நோக்கம், விரைவாக கூகிள் தேடுபொறி ஊடாகத் தமது தகவல் விரைவாகப்
பரவும் என்றே! ஆயினும், Wordpress இல் வலைப்பூ(Blog) நடாத்துபவர்கள் என்றும் தாழ்ந்து
விடவில்லை. அவர்களும் பதிவுலகில் வெற்றிநடை போடுகிறார்களே!
வலைப்பூக்களில்(Blog)
அறிவைப் பரப்பிய பலர், இன்று Facebook, Google+ ஊடாகத் தமது பணியைத் தொடருகின்றனர்.
ஏப்படியோ வலைப்பூக்களில் எட்ட முடியாத விருப்புகளை (Likes), பகிர்தலை (Shares) அவற்றில்
பெறலாம் என்பது அவர்களது நம்பிக்கை. ஆயினும், முறைப்படி வலைப்பூக்களை(Blog) நடாத்துவோர்
அதிக விருப்புகளைப் (Likes), பகிர்தலைப் (Shares) பெற்று வெற்றிநடை போடுகிறார்களே!
Facebook, Google+ இல் பதிவுகளை இட்டாலும் ஆவணத் தொகுப்பாகக் காண்பிக்க இயலாத போதும், வலைப்பூக்களில் காண்பிக்க முடியும் என்பதே சிறப்பு.
முறைப்படி
வலைப்பூ(Blog) நடாத்துவது என்பது விரும்பியவாறு விரும்பிய பதிவுகளைப் பதிவு செய்த பின்
படுத்து உறங்குவதல்ல. தமிழர் பண்பாட்டைப் பேணும் பதிவாகவும் வாசகர் விரும்பிப் படிக்கக்
கூடிய அறிவாகவும் இருந்தால் போதாது. வாசகர் வாசிக்க எழுத்து (Text), வாசகர் உள்ளம்
ஈர்க்கப் படம் (Photo) வாசகர் பார்க்கக் கேட்க என ஒலி(Audio) மற்றும் ஒளிஒலி(Video)
போன்ற பல்லூடகப் பதிவுகளாக இருந்தாலும் போதாது. வாசகரை எமது வலைப்பூ(Blog) பக்கம் இழுத்து
வரவேண்டும். இழுத்து வந்த வாசகர் எமது பதிவைப் படித்ததும் நாம் இழுத்து வராமலே அடுத்தடுத்த
பதிவுகளைப் படிக்கத் தாமாகவே வரக்கூடியதான சிறந்த பதிவுகளை நாம் பதிவு செய்து பேணவும்
வேண்டுமே!
வாசகர்
விருப்பறிந்து பதிவெழுது என்கிறாய்... வலைப்பூவை(Blog) நடாத்து என்கிறாய்... வாசகரை
இழுத்து வா என்கிறாய்... இதற்கு அஞ்சியவர்
முகநூலில் விழுந்தனர் என்கிறாய்... இந்தத் தொல்லைகளை எல்லாம் கடந்தவரே சிறந்த தமிழ்
வலைப்பதிவர் என்கிறாய்... சரி! சரி! நானும் முயன்று பார்க்கிறேன். இப்படி முயன்று வெற்றி
பெற்ற வலைப்பதிவர்களைக் கேட்டறிந்தோ கண்காணித்தோ புதிய உள்ளங்கள் எல்லோருமே வலைப்பூக்கள்(Blog)
நடாத்தலாம் வாங்க!
வலைப்பூக்களில்
(Blog) புதிய பதிவுகளை இட்டதும் Google+, Linkedin, Twitter, Facebook, Instagram போன்ற
மக்களாய (சமூக) வலைத் தளங்களில் பகிருவதன் மூலம் வாசகரைச் சென்றடையுமென எதிர்பார்க்கப்பட்டது.
பின்னர் வலைத் திரட்டிகளில் பகிருவதன் மூலம் வாசகரைச் சென்றடையும் என்றும் பகிர்ந்தனர்.
ஆயினும், வலைத்திரட்டிகள் நாளுக்கு நாள் செயலிழந்து வருவதும் பதிவர்களின் பக்கம் திரும்பிப்
பார்க்காமல் இருப்பதும் பதிவர்களை திரட்டிகளில் நம்பிக்கை இழக்கச் செய்துவிட்டது.
திரட்டிகளில்
நம்பிக்கை இழந்த பதிவர்கள் மக்களைய (சமூக) வலைத்தளங்களில் நண்பர்களைத் திரட்டிக் குழு
அமைத்துப் புதிய பதிவுகளைப் பகிருகின்றனர். அவ்வாறே திறன்பேசிகளில் (Smart Phone) கூடக்
குழுக்களை அமைத்துப் புதிய பதிவுகளைப் பகிருகின்றனர்.
தொல்லைப்
பேசிகள் போல தொல்லைக் குழுக்களும் பலருக்கு வெறுப்பை ஏற்படுத்தி விடுகின்றன. இலக்கின்றிச்
சில குழுக்களில் தேவையற்ற பதிவுகளைப் பகிருவதால் பயனர்கள் அதிலிருந்து விலகிவிடுகின்றனர்.
கட்டுப்பாடுகள் நிறைந்த குழுக்கள் வெற்றிநடை போடுகின்றன.
வலைப்
பதிவர்களுக்கான(Bloggers) குழுக்களாக முகநூலில்(Facebook) "தமிழ்ப் பதிவர்களின்
நண்பன்" என்ற குழுவும் Google+ இல் "தமிழ்ப் பிளக்கர்ஸ்" என்ற குழுவும்
செயற்பட்டு வருகின்றன.
Google+
இல் வலைப் பதிவர்களுக்கான கட்டுப்பாடுகள் நிறைந்த குழுவாக "உலகத் தமிழ் வலைப்பதிவர்கள்"
என்ற குழுவும் திறன்பேசிகளில் (Smart Phone) Whatsup செயலியில் "தமிழ் வலைப்பதிவகம்"
என்ற குழுவும் செயற்படுகிறது. இரண்டிலும் புதிய வலைப் பதிவுகளின் தலைப்பையும் இணைப்பையும்
இணைத்தால் போதுமெனக் கட்டுப்படுத்துகின்றனர். இதனை இவர்கள் ஒழுங்காகப் பேணுவார்களாயின்
எஞ்சிய வலைத்திரட்டிகளும் செயலிழந்து விடுமே!
மக்களாய
(சமூக) வலைத்தளங்களில் "யாப்பா சாவு (மரணம்) அடைந்துவிட்டார். பாப்பா, வாம்மா
ஆகியோரின் அருமைப் புதல்வர். ஏறு தழுவுதலுக்கு (ஜல்லிக்கட்டுக்கு) எதிராகக் கூப்பாடு
போட்டவர்." என்றவாறு உயிரோரு வாழும் ஒருவருக்குச் சாவு (மரண) அறிவித்தல் வழங்குவோரை
எவரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். அவ்வாறே, திறன்பேசிகளில் (Smart Phone) கூடப் பாலியல்
சார்ந்த பதிவுகளைப் பகிருவோரை எவரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். இவற்றையும் மீறி இவற்றினூடாகத்
தகவல் பரிமாறி ஏறு தழுவுதலுக்கு (ஜல்லிக்கட்டுக்கு) எதிரான தடைய உடைத்து வெற்றி பெற்ற
தமிழ்நாட்டு மாணவர்களைப் பாராட்டுவோம்
வலை
வழியே தமிழ் பண்பாடுகளை மீறிய கருத்துகள் பரிமாறப்படுவது நல்லது அல்ல. "நல்லதைப்
பொறுக்கிப் படியுங்கள், கெட்டதைத் தவிருங்கள்" என எழுதுவதால் தமிழ் பண்பாடுகள்
சீரழிய வாய்ப்புகள் அதிகம் என்பேன். இதன் அடிப்படையில் சிலர் சில குழுக்களைத் தொல்லைக்
குழுக்கள் என்கின்றனரோ! இப்பவெல்லாம் தொலைபேசி வழிப் பேச்சுகள் கூட தமிழ் பண்பாட்டை
மீறிக் காணப்படுகிறதே. அதனைப் பற்றிய பதிவொன்றைக் கீழே படியுங்க...
தொலைபேசியைக்
கண்டுபிடித்தவர் எவரோ - அவர்
"ஹலோ"
என்று தானாம் முதலில் பேசினாராம்! - இங்கே
தொலைபேசியைக்
கையில் பிடித்தவர்களோ - எப்போதும்
மதிப்பற்ற
சொல்களைப் பாவிப்பதே தொல்லையாச்சு!
"அடியே!
உன்னைக் கட்டிப்பிடிக்க விருப்பமடி
நடியாது
மாலையே கடற்கரைக்கு வாவேனடி" என
எதிரே
தொலைபேசியைத் தூக்கிய மாமியார்
மகளின்
காதலன் சொல்க்கேட்டு மயங்கிவிழுந்தாராம்!
"கொஞ்சிக்
கொஞ்சி நெடுநாள் ஆச்சு
கொஞ்சம்
கோவில் பக்கம் வாவேன்டா" என
எதிரே
தொலைபேசியைத் தூக்கிய மாமனார்
மகனின்
காதலி சொல்க்கேட்டுக் கொதித்தெழுந்தாராம்!
"ஹலோ"
வெனப் பிறமொழியில் பேசினால் பரவாயில்லை
தொலைபேசியில்
பேசுமுன்னெதிரே எவரென்று அறியாது
பறைஞ்சுபோட்டு
முறிந்தவுறவை எண்ணிப் பயனேது
தொலைபேசியில்
நற்றமிழால் பண்போடு பேசலாந்தானே!
மின்னின்றிப்
பணமின்றி பேசமுடியா விட்டால்
பயன்பாட்டு
எல்லைக்கு அப்பால் என்றால் - ஏன்
கடன்காரர்,
தகாதவர் அழைப்பில் வந்தால் கூட
தொலைபேசியும்
தொல்லைபேசியென அஞ்சுவோரைப் பாரும்!
கருத்துகள் இல்லை :
கருத்துரையிடுக
வருக அறிஞர்களே! தருக தங்கள் கருத்துகளையே!