வாழ்க்கை என்பது
பணத்திலோ படிப்பிலோ
தங்கியிருக்கவில்லை...
வாழ்க்கை இனிக்கிறது
என்றால்
இணையர்கள்
இருவருக்குமிடையே
இருக்கின்ற காதலால்
தானே!
வாழ்க்கை என்பது
இணையர்களின் நல்லுறவில்
மட்டுமில்லை...
வாழ்க்கையில்
வெற்றிகிட்ட
சூழவுள்ளோருக்கும் நமக்குமிடையே
இருக்கின்ற நல்லுறவில்
தானே!
வாழ்க்கை என்பது
நாம் பேணும்
சூழவுள்ளோரது
நல்லுறவில் மட்டுமில்லை...
வாழ்க்கையில் மகிழ்வைப்
பெருக்க
படித்தறிவை, பட்டறிவை
சூழலுடன் பகிரும்
முறையில் தானே!
வாழ்க்கை என்பது
நாம் சூழலுடன்
அறிவைப் பகிரும்
முறையில் மட்டுமில்லை...
வாழ்க்கையில்
நம்பிக்கையைச் சுவைக்க
வற்றாத பொருண்மியம் (பணமும்
சேமிப்பும்) வேண்டுமே!
வாழ்க்கை என்பது
எவரும் சொல்லித்தராத
ஒன்றே...
இன்றே எண்ணிப்பாருங்கள்
எண்ணிப் பார்ப்பதாலேயே
எதிர்வுகளை எட்ட வழி பிறக்கிறதே!
எதுவரினும் முகம்
கொடுக்க
மாற்றார் வாழ்வின்
வரலாற்றை
சற்றுப் படித்தால் தானே தெரியவருகிறது
இன்னும் எண்ணமுடியாதளவு
வாழ்க்கையைப் பற்றிப்
படிக்க இருப்பதை!
கருத்துகள் இல்லை :
கருத்துரையிடுக
வருக அறிஞர்களே! தருக தங்கள் கருத்துகளையே!