Translate Tamil to any languages.

புதன், 27 நவம்பர், 2013

ஆண்கள் அடுப்பு ஊதலாம் போல...

மாணவர் : தமிழ் நாடெங்கும் பெண் பிள்ளைகள் தான் அதிக மதிப்பெண்கள் பெற்றிருக்கிறார்களே!

ஆசிரியர் : அப்படி என்றால், ஆண்கள் அடுப்பு ஊதலாம் போல...


குறிப்பு:- 2011 வைகாசி மாதம் யாழ்ப்பாணப் பத்திரிகை ஒன்றில்
"சென்னைப் பெண் பிள்ளை ஒருவர் 1200 இற்கு 1180 புள்ளிகள் பெற்றுள்ளார்." என்ற செய்தியைப் படித்த பின் "ஆண் பிள்ளை ஒருவரால் அப்படி ஏன் பெறமுடியாது?" என்று சிந்தித்த போது இப்பதிவை எழுத முடிந்தது.

8 கருத்துகள் :

  1. ஆம் அடுப்பூதலாம்தான்
    சொல்லியவிதம் அருமை
    வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  2. படிப்பிலேயே பின் தங்கும் ஆண்பிள்ளைகள் அடுப்பூத உதவார்!

    பதிலளிநீக்கு
  3. ஒரு காலத்தில் படிக்காவிடில் மாடு மேய்க்கத்தான் லாயக்கு என்பார்கள். இப்போ அடுப்பூத என்கிறார்களா?
    மாடுமேய்த்தல், அடுப்பூதல் அவ்வளவு இலகுவா!
    மக் டொனால்டுக்கு இறைச்சிக்கு மாடு வளர்க்கும் பிரேசில் முதலாளி ,உலகில்
    குறிப்பிட்டுச் சொல்லக் கூடிய பணக்காரரில் ஒருவர்.அவர் அந்நிலைக்கு சும்மா படிக்காமல் வரவில்லை.
    இங்கு ஒரு பிரபல சமையல்காரர் பெறும் சம்பளம், வசதி , புகழ் மெத்தப் படித்தவர்களென நாம் கருதுபவராலும் பெறமுடியாது.அதையும் அவர்கள்
    புதிய உத்திகளுடன் கூடிய சிந்தனையினாலே பெறமுடிகிறது.
    அதற்குப் படிப்பு வேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தாங்கள் நல்ல எடுத்துக்காட்டுகளுடன் சிறப்பாக விளக்கினீர்கள்.
      படிப்பின்றி எந்தத் தொழிலையும் செய்ய இயலாது.
      தங்கள் கருத்தை வரவேற்கிறேன். ஐயா!

      நீக்கு
  4. வணக்கம் ஐயா
    மதிப்”பெண்” என்று இருப்பதால் அது பெண்களுக்கே உரியது என்று ஆண்கள் நினைத்துக் கொண்டு ஒதுங்கி நின்று விடுகிறார்கள் போலும். கண்டிப்பாக நிலைமை இப்படியே போனால் ஆண்கள் அடுப்பூதுவதைத் தடுக்க முடியாது. அப்பவே சிந்தித்து இருக்கிறீர்கள். பகிர்வுக்கு நன்றீங்க ஐயா.

    பதிலளிநீக்கு

வருக அறிஞர்களே! தருக தங்கள் கருத்துகளையே!