Translate Tamil to any languages.

வெள்ளி, 15 நவம்பர், 2013

பழகுவதும் பிரிவதும்

பழகு முன் பல ஐயங்கள்...
பழகிய பின் பல விருப்பங்கள்...
இறுக்கமான நெஞ்சையும்
நறுக்காக இழகவைத்தே
நெருங்கிப் பழகிய பின்
நெருக்கமின்றி விலகுதல் பிரிவா?
ஓ! உறவே!
ஒரு முறை எண்ணிப்பார்...
பழகுவதை விடப் பிரிவது சுகமா?
என் நிலையில்
பழகுவதும் பிரிவதும் முறையல்ல...
ஓ! உறவே!
பிரிவது சுகம் என்றால்
என்னோடு பழகாதே!
ஏனென்றால் - நான்
பிரிவைச் சுமக்க விரும்பவில்லை!

8 கருத்துகள் :


  1. எதுப்பா என கேட்பதற்கு இடமின்றி புதுப்பா எழுதினீர் !நன்று!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் கருத்துத் தான் என்னை வெற்றி பெற வைக்கிறது.
      மிக்க நன்றி ஐயா!

      நீக்கு
  2. மனம் கவர்ந்த அற்புதமான கவிதை
    பகிர்வுக்கும் தொடரவும் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் பாராட்டுக்கும் வாழ்த்துக்கும்.
      மிக்க நன்றி ஐயா!

      நீக்கு
  3. உண்மைதான் .பிரிய வேண்டி பழக வேண்டாமே

    பதிலளிநீக்கு
  4. வணக்கம்

    கவிதை நல்ல மொழிநடையில் அருமையாக எழுதியுள்ளிர்கள் வாழ்த்துக்கள்
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு

வருக அறிஞர்களே! தருக தங்கள் கருத்துகளையே!