மற்றவர் : கால் கோதிக்க, தலை வெடிக்க வெயிலுக்கு அஞ்சி நிழலை நாடி போகேக்க எவனோ ஒருவன் பின்னால கத்துறான்டா...
மரம் : மரங்களைத் தறிக்காமல் இருந்திருந்தால், இப்படியொரு நிலைமை உங்களுக்கு வருமே?
தமிழ்நண்பர்கள்.கொம் தளத்தில் இப்பதிவு இடம்பெற்ற போது:
"மரம் வெட்டிகளுக்கு இது
ஒரு மரண வெட்டு!" என்று புலவர் இராமாநுசம் அவர்கள் கருத்துக் கூறினார்.
"வெட்டு ஒன்று துண்டு இரண்டாக
போட்டு உடைத்து விட்டியளே..." என்று நான் பதில் கூறினேன்.
"வீதியை (ரோடை) அகலப்படுத்தும் போது இரு பக்கத்திலும் இருக்கும் நன்கு வளர்ந்த மரங்களை தகுந்த உபகரணங்களுடன் பெயர்த்து எடுத்து வேறிடத்தில் நட்டுப் பத்து வருடங்கள் வரை பாதுகாக்க முடியும் என்று கேள்விபட்டிருக்கிறேன். நம் நாட்டில் ஏன் அது போலச் செய்வதில்லை?" என்று நண்பர் ஸுகிரி அவர்கள் கருத்துக் கூறினார்.
"நீங்கள் கேள்விப்பட்ட தகவல் உண்மையானது. ஆயினும், இவற்றுடன் தொடர்புடையவர்கள் இதில் அக்கறை காட்ட வேண்டும்." என்று நான் பதில் கூறினேன்.
கருத்துகள் இல்லை :
கருத்துரையிடுக
வருக அறிஞர்களே! தருக தங்கள் கருத்துகளையே!