கை கடித்தால்
கைகுலுக்க எவர் வருவார்...
வயிறு கடித்தால்
வாலாட்ட நாயும் வருமா?
கெட்டு நொந்தால்
வழிகாட்ட எவர் வருவார்...
பட்டுத் தெளிந்தால்
உன்னைவிட எவர் வேண்டும்?
"உன்னை நீ அறி"
அன்பு, அறிவு, ஆளுமை, வருவாய் என
என்றும் - இவை
நான்கும் இருந்துவிட்டால்
நலமாய் - உன்
வாழ்வு நகருமே!
உன்னை அறிந்தால் உலகத்தில் போராடலாம் -உண்மைதான் நண்பரே
பதிலளிநீக்குதங்கள் கருத்தை வரவேற்கிறேன்.
நீக்குஆம் அண்ணா ஒரு மனிதனின் வாழ்க்கையில் இந்த நான்கும் இருந்தாலே அவன் சிறந்தவன் என்று உணரமுடியும் கவிதை அருமை அண்ணா
பதிலளிநீக்குதங்கள் கருத்திற்கு மிக்க நன்றி.
நீக்கு