Translate Tamil to any languages.

செவ்வாய், 26 பிப்ரவரி, 2013

பாடுபொருளும் பாவடிகளும்

பா(கவிதை) ஒன்றின் உள்ளே
ஒளிந்திருக்கும் கருப்பொருளே
பாவால்(கவிதையால்)
சொல்ல வந்த செய்தியே
பாடுபொருள் என்பேன்!
பாடுபொருள் ஒன்றை
"பசி" என்கிறேன் கேளும்
"தெருவில் கிடக்கும் எச்சில் உணவை
தேடிப் பொறுக்கித் தின்னும்
ஏழைகளின் பசியைப் பாரும்!" என்பதும்
"பசி வந்தால்
கறி தேவையில்லை என்பார்களே
அதுபோலத் தான்
தெருக்கடைத் தேனீரில்
தோய்த்தெடுத்த பாண்(ரொட்டி) துண்டு
என் வயிற்றை நிரப்பியதே!" என்பதும்
பாக்(கவிதை)கள் தானே!
பசியின் நிலையைச் சுட்டும்
என் கதை கூறும்
ஆறடிப் பாவை(கவிதையை) விட
ஏழைகளின் கதை கூறும்
மூன்றடிப் பாவே(கவிதையே)
அழகாய் மின்னுவதைப் பாரும்!
என்ன தான் இருந்தாலும்
பாடுபொருள்
பாவு(கவிதை)க்கு உயிர் என்றால்
பாவடிகள்
பாவு(கவிதை)க்கு உடல் என்றால்
பாவின்(கவிதையின்) வெற்றி
பாவடிகளின் எண்ணிக்கையில்
இல்லைக் காணும்
பாவலன்(கவிஞன்)
பாடுபொருளை வெளிப்படுத்த வரும்
திறத்தில் தானே தங்கியிருக்கே!
எட்டுத் திக்கும்
பாவி(கவிதையி)லே தமிழ் பரப்ப
எண்ணியிருக்கும் உறவுகளே...
பாக்(கவிதை)களின் வெற்றி
பாடுபொருளிலோ
பாவடிகளின் நீளத்திலோ
இல்லைக் காணும்
பாடுபொருள் எதுவாயினும்
பரவாயில்லைக் காணும்
வள்ளுவனின் குறளைப் போல
குறுகிய பாவடிகளிலே
விரிந்த வெளிப்பாடு இருக்க
நீ
பா புனைந்தால் காணும்
உன்
பா(கவிதை) வெற்றி காணும்
இல்லையேல்
என் தலையைத் துண்டாடு!

குறிப்பு: இதற்கான கட்டுரை விளக்கத்தை http://yarlpavanan.tk இல் பார்க்கலாம்.

4 கருத்துகள் :

  1. இப்படி பாவில் புகுந்து விளையாடினால் நாங்கள் பாவம் அல்லவா

    பதிலளிநீக்கு
  2. இல்லை இல்லை
    எனது தளம், பாவலர்களுக்குப் பயிற்சி அளிக்கும் தளம்.
    நீங்கள் சிறந்த பாவலனாக வரவே இவ்வாறு எழுதினேன்.

    பதிலளிநீக்கு
  3. பாராட்டுக்கள் தொடருங்கள்

    தமிழ்த்தோட்டம்
    www.tamilthottam.in

    பதிலளிநீக்கு

வருக அறிஞர்களே! தருக தங்கள் கருத்துகளையே!