மரபுக் கவிதையில் நான்கு சீர்களை(சொல்களை)க் கொண்ட அடியை முழு அடி அல்லது நிறை அடி என்பர். திருக்குறளில் முதலாம் அடி நான்கு சீரையும் இரண்டாம் அடி மூன்று சீரையும் கொண்டிருக்கிறது. அப்படியாயின் திருக்குறள் ஒன்றே முக்கால் அடி என்பதில் தவறில்லையே!
திருக்குறளை ஆக்கித் தந்த திருவள்ளுவர் அவர்களின் இல்லாள் வாசுகி அம்மையார் ஆவார். வாசுகி அம்மையாரின் இழப்பைத் தாங்க முடியாத திருவள்ளுவரோ நான்கடியில் தன்துயரை இவ்வாறு விவரிக்கிறார்.
"அடியிற்கினியாளே அன்புடையாளே
படிசொல் தவறாத பாவாய்- அடிவருடி
பின்தூங்கி முன்னெழும்பும் பேதாய்- இனிதா(அ)ய்
என் தூங்கும் என்கண் இரவு''
அதாவது, "அடியவனுக்கு இனியவளே! அன்புடையவளே! என் சொல்படி நடக்கத் தவறாத பெண்ணே! என் பாதங்களை வருடி தூங்கச் செய்தவளே! பின் தூங்கி முன் எழுபவளே! பேதையே! என் கண்கள் இனி எப்படித்தான் இரவில் தூங்கப் போகிறதோ!'' என்பது பாட்டின் உருக்கமான பொருள்.
இவ்வாறு இணையத் தினமலர் ஆன்மீகப் பக்கத்தில் (http://www.dinamalar.com/aanmeegamNews_Detail.asp?news_id=1766) படித்ததும் திருவள்ளுவர் திருக்குறளைத் தவிர எத்தனையோ நூல்கள் எழுதியிருப்பார் என எண்ணினேன். உடனே கூகிள் தேடுபொறியில் "திருவள்ளுவரின் நூல்கள்" என்று தட்டச்சுச் செய்து தேடினேன். "தமிழின் குரல்" என்ற பக்கத்தில் (http://tamilcause.blogspot.com/2010/06/blog-post_08.html) திருவள்ளுவர் எழுதிய நூல்களின் விரிப்பைக் கண்டேன்.
திருவள்ளுவர் திருக்குறளை மட்டும் அருளவில்லை. அய்யன் வள்ளுவப்பெருமான் அருளிய நூல்கள் எண்ணற்றவை. இனி வரும் ஞானச்சித்தர் காலத்தில் இவை மக்கள் பயன்பாட்டிற்கு வரும். அய்யன் வள்ளுவப்பெருமான் அருளிய நூல்களில் சில :
1. ஞானவெட்டியான் - 1500
2. திருக்குறள் - 1330
3. ரத்தினசிந்தாமணி - 800
4. பஞ்சரத்தனம் - 500
5. கற்பம் - 300
6. நாதாந்த சாரம் - 100
7. நாதாந்த திறவுகோல - 100
8. வைத்திய சூத்திரம் - 100
9. கற்ப குருநூல் - 50
10. முப்பு சூத்திரம் - 30
11. வாத சூத்திரம் - 16
12. முப்புக்குரு - 11
13. கவுன மணி - 100
14. ஏணி ஏற்றம் - 100
15. குருநூல் - 51
(இவர்கள் அருளிய நூல்கள் இன்னும் இருக்கலாம்)
மேலும்,
16. சிற்ப சிந்தாமணி (ஜோதிட நூல்)
என்ற நூலையும் வள்ளுவர் தானாம் எழுதினார்.
சான்று: http://vidhai2virutcham.wordpress.com/2012/12/18/திருவள்ளுவர்-அருளிய-நூல்/
ஆக மொத்தத்தில் பதினாறு நூல்களை திருவள்ளுவர் எழுதியதாக மேற்படி தளங்களில் பொறுக்கினேன். இன்னும் எத்தனை நூல்களை எழுதியிருப்பாரோ எனக்குத் தெரியாது.
மேற்படி தளங்களில் எழுதப்பட்டிருப்பதைப் பார்த்ததும் திருவள்ளுவர் ஒன்றே முக்கால் அடியில் ஆக்கிய திருக்குறளைத் தவிர பல அடிகளில் பல நூல்கள் எழுதியிருக்கிறார் என்பது தெரியவருகிறது.
இந்தத் தகவலை எத்தனை ஆள்கள் நம்புவர்? ஒன்றே முக்கால் அடித் திருக்குறளைத் தானே நூற்று முப்பதுக்கு மேற்பட்ட மொழிகளில் உலகெங்கும் மொழி பெயர்த்துள்ளனர். ஏனையவை அவ்வாறு மொழி பெயர்க்கப்படாமையால் எம்மால் படிக்க முடியவில்லையா? எம்மால் படிக்க முடியாமையால் ஏனையவை அவ்வாறு மொழி பெயர்க்கப்படவில்லையா?
ஒன்றே முக்கால் அடித் திருக்குறளைப் படித்த எங்களுக்கு ஏன் ஏனைய அடிகளில் இருந்த திருவள்ளுவரின் ஏனைய நூல்களைப் படிக்க முடியாமற் போனது. இதுவே, நான் சொல்ல வந்த செய்தி ஆகும்.
திருவள்ளுவர் ஏனைய நூல்களை இயற்றினார் என்பது ஒரு கட்டுக்கதை, அவற்றின் எழுத்து முறை, சொற் பயன்பாடு, காலநிலை முதலானவை அவை யாவும் வேறு வேறு மனிதர்களால் எழுதப்பட்டவை என்பதைக் கூறுகின்றன. சைவ சித்தாந்தவாதிகள் சிலரால் புனையப்பட்டவையே இந்த ஞான வெட்டியான் திருவள்ளுவர் ஒன்று என்னும் கதை. ஆகவே பதிவுகளில் சற்று தக்க தரவுகளுடன் பகிர்வதன் மூலம் போலித்தனமான செய்திகள் பரவாமல் இருக்கும் என நினைக்கின்றேன். நன்றிகள் !
பதிலளிநீக்குதங்கள் கருத்துகளை வரவேற்கிறேன்.
பதிலளிநீக்குசில தளங்களில் வெளிவந்த தகவலையே சான்றுகளுடன்(அத்தளங்களின் இணைப்புகள் பதிவில் இணைத்துள்ளேன்) தந்தேன்.
"அடியிற்கினியாளே அன்புடையாளே" என்ற பாடலும் வள்ளுவர் இயற்றவில்லை என ஒரு தளத்தில் படித்தேன்.
இப்பதிவினைத் தமிழுலகம் படித்து உண்மையறிய உதவும் என நம்புகிறேன்.