Translate Tamil to any languages.

வியாழன், 20 ஆகஸ்ட், 2020

Zoom ஆல தான் எனக்குச் சாவு!


17/07/2020 இல் தொடங்கி மரபுக் கவிதைப் பயிலரங்கம் நடத்திவருகிறேன். அடுத்த பயிலரங்கம் 21/08/2020 வெள்ளி இடம்பெறும். பாடசாலை மாணவர்கள், பல்கலைக்கழக மாணவர்கள் பங்கெடுக்க உதவுங்கள்.

Zoom ஆல தான் எனக்குச் சாவு!


இப்பவெல்லாம்

இணையக் கலந்துரையாடல் தான்...

Teams என்கிறாங்க... Meet என்கிறாங்க...

அடிக்கடி Zoom என்கிறாங்க...

தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கோ

(Data குடிப்பதால்) வருவாய் என்கிறாங்க...

எவரும் எம்மைச் சிந்தித்தார்களோ

எங்களுக்குத் தெரிவதில்லை...

(Covid -19) கொரோனா வந்தபின்

வீட்டுக்காவல் போல முடக்கிவிட

இணையக் கலந்துரையாடல் தான்

ஆற்றுப்படுத்த உதவினாலும் கூட

Zoom ஆல தான் உனக்குச் சாவு என்று

என் பெண்டாட்டி திட்டித் தீர்ப்பதை

கடவுள் தான் கண்டிருப்பார்...

உண்ணாண உண்மை தான்!

மூன்று மணிக்குக் கவிஞர் சந்திப்பு

நான்கு மணிக்குப் பாடகர் சந்திப்பு

ஐந்து மணிக்கு வெளியீட்டாளர் சந்திப்பு

ஆறு மணிக்கு எழுத்தாளர் சந்திப்பு

ஏழு மணிக்கு வாசகர் சந்திப்பு

இப்படியே நீண்டு செல்கிறது...

 நாளுக்கு நாள்

ஓய்வின்றி ஒன்றுக்கு மேற்பட்ட

இணையக் கலந்துரையாடல் தான்...

இதைப் பார்க்கிற பெண்டாட்டி

தன்னைக் கட்டியதை விட

Zoom ஐக் கட்டியிருக்கலாமே என்கிறாள்...

எல்லோரும் தேவை தான்

எல்லாமும் தேவை தான்

Zoom இல தலையைக் காட்டாட்டி

உள்ளத்தில அமைதியில்லை என்போர்க்கு

Zoom ஆல தான் சாவு போல...

எனக்கு இப்ப Zoom ஆஅ

என் பெண்டாட்டியா தேவை?

எனக்கே தலையைச் சுற்றுகிறதே!

யாழ்பாவாணன் ஏன் இப்படி எழுதினார் என்று பலரும் கேட்கலாம். இணையக் கலந்துரையாடல் எனப் பலர் படையெடுக்கின்றனர். அக்கலந்துரையாடல்கள் ஆவணப்படுத்தப்பட்டுப் பேணப்பட்டால் நன்மையுண்டு. அதேவேளை குடும்பம் பற்றியும் சிந்திக்க வேண்டுமே! அதனை எண்ணிப் பார்த்தேன்; அதனால் எழுதியதை அப்படியே பகிர்ந்தேன்.


வியாழன், 13 ஆகஸ்ட், 2020

மரபுக் கவிதைப் பயிலரங்கச் செயற்பாடுகள்

 


17/07/2020 இல் தொடங்கி மரபுக் கவிதைப் பயிலரங்கம் நடத்துவதாகக் கடந்த பதிவில் தெரிவித்து இருந்தேன். அதன்படிக்கு 24/07/2020 , 03/08/2020 நடந்த பயிலரங்கப் பதிவுகளை வலையொளியில் பகிர்ந்தோம். அவற்றைத் தங்களுடன் பகிருகிறேன். தங்கள் கருத்துகளைப் பின்னூட்டத்தில் பகிர்ந்து உதவலாம்.

மரபுக்கவிதைப் பயிலரங்கம் - தொகுப்பு - 01 - தொடர் - 02


மரபுக்கவிதைப் பயிலரங்கம் - தொகுப்பு - 01 - தொடர் - 03

07/08/2020 வெள்ளி அன்று மரபுக்கவிதைப் பயிலரங்கம் இடம்பெறவில்லை. அன்றைய நாள் யாழ்பாவாணனின் நகைச்சுவைப் பயிலரங்கம் இடம்பெற்றது. அதனை வலையொளியில் பகிர்ந்தோம். அவற்றைத் தங்களுடன் பகிருகிறேன். தங்கள் கருத்துகளைப் பின்னூட்டத்தில் பகிர்ந்து உதவலாம்.

இனி இயல்பாகவே மரபுக்கவிதைப் பயிலரங்கம் தொடரும். தங்களுக்குத தெரிந்த மரபுக்கவிதை பயில விரும்பும் எல்லோருக்கும் இந்தப் பயிலரங்கம் பற்றிய தகவலப் பகிர்ந்து உதவுங்கள் இவ்வாறான பயிலரங்குகள் பலருக்கு நன்மை தர வேண்டும் என்பதே எமது நோக்கு அதனை நாம் தொடர்ந்து செய்வோம்.


வியாழன், 23 ஜூலை, 2020

மரபுக் கவிதைப் பயிலரங்க முயற்சிகள்


கொரோனா (COVID-19) வருகையின் பின் வீட்டில் முடங்கிய நமது உறவுகள், இணைய வழிக் (ZOOM) கலந்துரையாடல் மூலம் அறிவைப் பகிரும் பணியில் ஈடுபட்டனர். நானும் பலரது கலந்துரையாடல்களில் பங்கெடுத்துப் படித்தேன். பின்னர் 19/06/2020 இல் தொடங்கி ஒவ்வொரு வெள்ளியும் மாலை ஏழு மணிக்குக் கவிதை பற்றிய கலந்துரையாடல் நடாத்தி வருகிறேன். 17/07/2020 இல் தொடங்கி மாணவர்களையும் இணைத்து மரபுக் கவிதைப் பயிலரங்க முயற்சியில் இறங்கியுள்ளேன்.


17/07/2020 இல் இடம்பெற்ற மரபுக் கவிதைப் பயிலரங்கக் காணொளியை வலையொளியில் பகிர்ந்தேன். அதனையே இங்கும் பகிருகிறேன். பாருங்கள், பயனுள்ள கருத்துகளைப் பகிருங்கள்.

மரபுக்கவிதைப் பயிலரங்கம் - தொகுப்பு - 01 - தொடர் – 01

மரபுக் கவிதைப் பயிலரங்கில் பங்கேற்பவர்களுக்கு யாப்பு இலக்கண நூல்களைப் பதிவிறக்கக் கீழுள்ள இணைப்பை வழங்கி உள்ளேன்.

மரபுக் கவிதைப் பயிலரங்கச் செய்திகளை எனது முகநூல் பக்கத்தில் பார்க்கலாம். எமது Facebook  பக்கத்தில் இணைய

மரபுக் கவிதைப் பயிலரங்கச் செய்திகளை எனது புலனம் குழுவிலும் பார்க்கலாம். எமது WhatsApp குழுவில் இணைய


இப்பயிலரங்கம் இனி இயல்பாகவே தொடரும். இனி வலைப்பதிவர்களின் பக்கங்களுக்கு வழமை போல் நான் வருகை தருவேன். என் வலைப்பூவிற்கு வருகை தந்து பின்னூட்டம் வழங்கிய அறிஞர்களின் ஊக்குவிப்புக்கு நான் பணிகின்றேன். இனி வலைப்பதிவர்களுடனான நல்லுறவைப் பேணுவதில் அக்கறையாக இருப்பேன்.

புதன், 15 ஜூலை, 2020

புதுக்கவிதையா? வசனகவிதையா? கட்டுரை வரிகளா? – மூன்றும்நான்கும்

நீங்களும் மரபு கவிதைப் பயிலரங்கில் பங்குபற்றலாம்.

வலை வழியே அதிகம் உலா வருவது புதுக்கவிதையா? வசனகவிதையா? கட்டுரை வரிகளா? என்ற கலந்துரையாடல் 03/07/2020 வெள்ளி மாலை 7pm மணிக்கு (இல. இந். நேரம்) Zoom செயலி ஊடாக இடம் பெற்றது.

கனடா, இந்தியா, இலங்கை அறிஞர்கள் பேச்சுத் தொடுக்கப் பல கேள்விக் கணைகள் வீசிக் கொள்ள நிகழ்ச்சி சிறப்பாக இடம் பெற்றது. எமது நிகழ்ச்சிப் பதிவினை வலையொளியில் (Youtube) பகிர்ந்தோம். அதனைப் பார்த்துத் தங்கள் பின்னூட்டத்தினைப் பகிருமாறு பணிகின்றேன்.


வலை வழியே அதிகம் உலா வருவது புதுக்கவிதையா? வசனகவிதையா? கட்டுரை வரிகளா? என்ற கலந்துரையாடல் 10/07/2020 வெள்ளி மாலை 7pm மணிக்கு (இல. இந். நேரம்) Zoom செயலி ஊடாக இடம் பெற்றது.

கடந்த நிகழ்வுகளில் பேசிய அறிஞர்கள் பேச்சுத் தொடுக்கப் பல கேள்விக் கணைகள் வீசிக் கொள்ள நிகழ்ச்சி சிறப்பாக இடம் பெற்றது. எமது நிகழ்ச்சிப் பதிவினை வலையொளியில் (Youtube) பகிர்ந்தோம். அதனைப் பார்த்துத் தங்கள் பின்னூட்டத்தினைப் பகிருமாறு பணிகின்றேன்.


ஞாயிறு, 5 ஜூலை, 2020

புதுக்கவிதையா? வசனகவிதையா? கட்டுரை வரிகளா? – இரண்டு


வலை வழியே அதிகம் உலா வருவது புதுக்கவிதையா? வசனகவிதையா? கட்டுரை வரிகளா? என்ற கலந்துரையாடல் 26/06/2020 வெள்ளி மாலை 7pm மணிக்கு (இல. இந். நேரம்) Zoom செயலி ஊடாக இடம் பெற்றது. இந்தியா, மலேசியா, இலங்கை அறிஞர்கள் பேச்சுத் தொடுக்கப் பல கேள்விக் கணைகள் வீசிக் கொள்ள நிகழ்ச்சி சிறப்பாக இடம் பெற்றது. எமது நிகழ்ச்சிப் பதிவினை வலையொளியில் (Youtube) பகிர்ந்தோம். அதனைப் பார்த்துத் தங்கள் பின்னூட்டத்தினைப் பகிருமாறு பணிகின்றேன்.





வலைப்பதிவர்களை, அறிஞர்களை, கலைஞர்களை ஒளிஒலி (Video) மூலம்  நேர்காணல் செய்து வலையொளியில் (Youtube)  பகிரும் பணியில் முதலாவதாகத் தமிழகத் தமிழறிஞர் ஒருவரைச் சந்தித்தேன். அவர் மணிவானதி வலைப்பூ (Blog), வலையொளி (Youtube) நடாத்துகிறார். அவரைப் பற்றி முழுவதும் அறியக் கீழுள்ள காணொளியைப் (Video) பார்க்கவும். அதனைப் பார்த்துத் தங்கள் பின்னூட்டத்தினைப் பகிருமாறு பணிகின்றேன்.