கொரோனா (COVID-19) வருகையின்
பின் வீட்டில் முடங்கிய நமது உறவுகள், இணைய
வழிக் (ZOOM) கலந்துரையாடல்
மூலம் அறிவைப் பகிரும் பணியில் ஈடுபட்டனர். நானும் பலரது கலந்துரையாடல்களில்
பங்கெடுத்துப் படித்தேன். பின்னர் 19/06/2020 இல்
தொடங்கி ஒவ்வொரு வெள்ளியும் மாலை ஏழு மணிக்குக் கவிதை பற்றிய கலந்துரையாடல்
நடாத்தி வருகிறேன். 17/07/2020 இல்
தொடங்கி மாணவர்களையும் இணைத்து மரபுக் கவிதைப் பயிலரங்க முயற்சியில்
இறங்கியுள்ளேன்.
17/07/2020 இல் இடம்பெற்ற
மரபுக் கவிதைப் பயிலரங்கக் காணொளியை வலையொளியில் பகிர்ந்தேன். அதனையே இங்கும்
பகிருகிறேன். பாருங்கள், பயனுள்ள
கருத்துகளைப் பகிருங்கள்.
மரபுக்கவிதைப் பயிலரங்கம் - தொகுப்பு - 01
- தொடர் – 01
மரபுக் கவிதைப் பயிலரங்கில் பங்கேற்பவர்களுக்கு யாப்பு இலக்கண நூல்களைப்
பதிவிறக்கக் கீழுள்ள இணைப்பை வழங்கி உள்ளேன்.
மரபுக் கவிதைப் பயிலரங்கச் செய்திகளை எனது முகநூல் பக்கத்தில் பார்க்கலாம். எமது Facebook பக்கத்தில் இணைய
மரபுக் கவிதைப் பயிலரங்கச் செய்திகளை எனது புலனம் குழுவிலும் பார்க்கலாம். எமது WhatsApp
குழுவில் இணைய
இப்பயிலரங்கம் இனி இயல்பாகவே தொடரும். இனி வலைப்பதிவர்களின் பக்கங்களுக்கு
வழமை போல் நான் வருகை தருவேன். என் வலைப்பூவிற்கு வருகை தந்து பின்னூட்டம் வழங்கிய
அறிஞர்களின் ஊக்குவிப்புக்கு நான் பணிகின்றேன். இனி வலைப்பதிவர்களுடனான நல்லுறவைப்
பேணுவதில் அக்கறையாக இருப்பேன்.
அருமையான முன்னெடுப்பு
பதிலளிநீக்குவாழ்த்துகள்
அருமையான முயற்சி. வாழ்த்துகள்
பதிலளிநீக்குதொடரட்டும் தங்கள் பணி.......
பதிலளிநீக்கு