Translate Tamil to any languages.

சனி, 2 ஜூன், 2018

கவிதையெனக் கிறுக்கிய சில


எவருக்குத் தெரியும்?

பணம் காய்க்கும் மரம் எது?
------------------------
------------------------
"கடுமையான உழைப்பு" என்ற மரமே!
அப்பா, அம்மா பணத்தில
வாழ்வோருக்கும் தெரியாது...
வேலை வெட்டிகளுக்கும் தெரியாது...
பணம் உள்ளவருக்கோ
பிறரை ஒரு போதும் தெரியாது...

பின்னுக்கு எது நிகழும்?

பணம் உள்ள வரை தானாம்
பெண்டாட்டி, வைப்பாட்டி எனப் பலரிருப்பினமாம்!
பணம் இல்லாட்டிப் பாரும் - காலில
கருவாட்டைக் கட்டி வைத்திருந்தால் தானாம்
சாவடைந்தால் நம்முடலை - சுடுகாடு வரை
நாய்கள் கடித்து இழுத்துச் செல்லுமாமே!
உயிரற்ற எம்முடலை
காடு வரை காவிச் செல்ல
நாலு ஆள் தேவை என்றெண்ண
கருவாட்டுக் கதை சொன்னேனே!
நாலு ஆளைத் தேடிப் பிடிக்க
அன்பு தான் முதலீடு - அதை
கையாண்டால் நல்லுறவு மலருமே!

வசதி எப்படி?

சாவு என்பது
ஆண்டவன் கையில் தான் இருக்கிறதே!
வாழ்க்கை என்பது
நம்மாளுங்க கையில் தான் இருக்கிறதே!
காலம் என்பது
கரைந்து கொண்டு தான் இருக்குமே!
வாழ்தல் என்பது
காலம் கரையும் முன் வாழ்ந்துவிட வேண்டுமே!
முடிவாக ஒன்று
காலம் கரைந்து போக இடமளித்தால்
வாழ்வு எட்டப் போய் சாவு கிட்ட வருமே!

தென்றல் விடு தூது!

சீ! தூ! குப்பை நாயே!
என்றெல்லாம் - என்னை
கழித்துவிட்டு ஒதுங்கிய சிலர்
குப்பையில போட்ட
குண்டுமணியைத் தேடுவது போல
என்னையும் தேடி அலைகின்றனராம்...
குப்பையில போட்ட குண்டுமணிக்கு
என்ன நடந்திருக்குமோ - அது தான்
எனக்கும் நடந்திருக்குமெனச் சொல்லாயோ
என் இனிய தென்றல் காற்றே!

வழிகாட்டி

தோல்விகள்
ஒன்றும் கெட்டவை அல்ல
தோல்விகளைக் கண்டு
ஒருபோதும் அஞ்ச வேண்டாம்
தோல்வி அடைந்ததாலே தான்
வெற்றியை
அடைய முடியாமல் போன
கமுக்கம் (இரகசியம்) என்னவென்று
கற்றுக்கொள்ள முடிகிறதே!
வெற்றியை அடைய
தோல்வியும் ஒரு வழிகாட்டியே!

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக

வருக அறிஞர்களே! தருக தங்கள் கருத்துகளையே!