"நம்ம தமிழர் எல்லோரும்
போட்டி, பொறாமை,
வஞ்சகம், சூது, வாது எல்லாம்
எப்படிப் படித்தனர்?" என்று
அறிஞர் ஒருவர் ஐயம் எழுப்பினார்!
இராமாயணத்தில் கூனி மாமியும்
பாரதத்தில் சகுனி மாமாவும்
தமிழருக்குச் சூது, வாது படிப்பித்தார்களே!
போட்டி என்று ஒன்று
வந்துவிட்டால் பாரும் - நம்ம
ஆளுங்க சிங்கங்கள் தான் - ஆங்கே
நெஞ்சு நிறைய
வஞ்சகமும் பொறாமையும்
உயரப் பறக்க விரும்பும் (பதவி ஆசைக்) குணமே
படிப்பித்திருக்கலாம் - அதனைக் கற்ற
தமிழரின் செயலால் தான்
முகவரி இழந்த இனமாயிற்று
எங்கள் தமிழினம்!
இப்பதிவில் கலந்துள்ள பிறமொழிச் சொல்களை நீக்க முடியவில்லை.
ஆயினும், பிறமொழிச் சொல்களுக்கு ஈடான தமிழ்ச் சொல்களை பின்னூட்டத்தில் தந்து உதவுங்கள்.
கருத்துகள் இல்லை :
கருத்துரையிடுக
வருக அறிஞர்களே! தருக தங்கள் கருத்துகளையே!