Translate Tamil to any languages.

செவ்வாய், 1 ஜனவரி, 2013

உணர்வுகளோ வலிகளோ கவிதையின் உயிர்



கவிதை எழுதுகிறார்கள்
நீண்ட வரிகளில் - அதனை
வரிக்(வசன) கவிதை எனலாம்...
கவிதை எழுதுகிறார்கள்
ஓரெழுத்தையோ
ஒரு சொல்லையோ
ஒரு வரியையோ(வசனத்தையோ)
அடிகளாகத் தொடுத்து - அதனை
புதுக் கவிதை எனலாம்...
இப்படியே படித்து விட்டு
நல்ல கவிதை என்றேன்...
"அதற்காகவா
நான் எழுதினேன்...
என் கவிதையில்
என் வலிகளைத் தானே
கொட்டி எழுதியுள்ளேன் - அது
உமக்குத் தெரியவில்லையா?" என்று
எனக்குப் பதிலும் கிட்டியதே...
உண்மையைத் தான் சொல்கிறேன்
இலக்கணக் கவிதையாயினும் சரி
இலக்கணம் குறைந்த கவிதையாயினும் சரி
படிக்கும் போது
உணர்வுகளோ வலிகளோ
படிப்பவர் உள்ளத்தில்
மாற்றத்தை உண்டுபண்ணினாலே
கவிதை
இல்லையேல் - அவை
கிறுக்கல்களே!
சிலரது
கிறுக்கல்கள் கூட
கவிதை ஆகிறது என்றால்
நறுக்கென - தங்கள்
உணர்வுகளையோ வலிகளையோ
கொட்டி எழுதியதால் தானே!

2 கருத்துகள் :


  1. வணக்கம்!

    புத்தாண்டு வாழ்த்துக்கள்

    பல்லாண்டு வாழ்க! படா்கின்ற புத்தாண்டை
    நல்லாண்டு வாழ்க நலஞ்சூடி! - வல்லதமிழ்ச்
    சொல்லாண்டு வாழ்க! சொந்தமென நம்மினத்தின்
    தொல்லாண்டு வாழ்க சுடா்ந்து!

    கவிஞா் கி. பாரதிதாசன்
    தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

    01.01.2014

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இனிய புத்தாண்டு வாழ்த்துகள்
      புத்தாண்டில் தளத்திற்கு வருகை தந்து
      கருத்துக்கூறி வாழ்த்துப் பகிர்ந்தமைக்கு
      மிக்க நன்றி.

      நீக்கு

வருக அறிஞர்களே! தருக தங்கள் கருத்துகளையே!