மக்கள் முன்னிலையிலும் அச்சு ஊடகங்களிலும் உங்கள் மூஞ்சியை காட்டாமல் வலைப்பூ, வலப்பக்கம், குமுகாய (சமூக)த் தளம் போன்ற மின் ஊடகங்களில் தங்கள் ஆற்றலை வெளிப்படுத்துவது ஏன்?
ஈழத்துப் போர்க்காலச் சூழலில் பள்ளிக்கூடம் போகாமல் வீட்டில் இருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. அக்காலகட்டத்தில் நாளேடுகள்(ஞாயிறு இதழ்), சஞ்சிகைகள் (மாதாந்த, காலாண்டு இதழ்), பொத்தகங்கள் படித்துப் பொழுது போக்கி அறிவை வளர்த்துக் கொண்டிருந்த காலமது. அப்போது "நானும் எழுதிப் பார்க்கலாம் தானே!" என்று முயன்று பார்த்த்தேன். அம்முயற்சியின் வெற்றியாக முதலில் நாடகம் எழுதி இயக்கினேன். அடுத்து 25/09/1990 யாழ் ஈழநாதம் நாளேட்டில் எனது முதற்கவிதை வெளியாகியது. இவ்வாறு தான் இணையவழி இலக்கியப் பயணத்தைத் தொடருகிறேன்.
நான் கணித ஆசிரியராகவும் கணினி விரிவுரையாளராகவும் கனணி நிகழ்நிரலாக்குனராகவும் பணியாற்றினேன். அவ்வேளைகளில் அச்சு ஊடகங்களில் எனது பதிவுகள் வெளிவந்தன. நான் கற்பிக்கும் போது எனது மாணவர்களை வைத்து எனது நாடகங்களை நானே எழுதி இயக்கி அரங்கேற்றி உள்ளேன்.
கணினி நுட்பங்களில் சிறந்து விளங்கியதால் இணைய வழி நற்றமிழைக் கொண்டு செல்லும் பணியைச் செய்ய முயன்றேன். அதனால், இணைய வழி ஊடாக எனது படைப்பாற்றலை வெளிக்கொணர நாட்டம் ஏற்பட்டது. அதுவும் நானே எனது அனைத்து ஆற்றல்களையும் தனித்து உருவாக்கி அரங்கேற்றி விட முடியும் என்ற நம்பிக்கையும் இருந்தது.
எனது தனிமையான முயற்சியாக மின் ஊடக இலக்கிய வெளியீடுகளை வெளியிட விரும்புகிறேன். அச்சு ஊடகங்களையும் அச்சு ஊடகங்கள் சார்ந்த வெளியிட்டு நிகழ்வுகளை மக்கள் முன்னிலையிலும் நடத்தும் வேளை பங்கெடுப்பேன்.
மென்பொருள் தயாரிக்கிறதுக்கு குழுத் தேவை. அதுபோல் நாடகம் எழுதி, இயக்குவதற்குக் குழுத் தேவை. அதுபோல பாடல், நடனம், இசை நிகழ்வுகளை அரங்கேற்றக் குழுத் தேவை. ஆகவே எழுத்தை மட்டும் அல்லது என்னால் நிகழ்வை இயக்க முடியும் என்பதை மட்டும் தகுதியாக வைத்துக் குழு அமைத்து நான் மக்கள் முன்நிலையில் தலைநிமிர முடியாது. பிறரது பங்களிப்புக்கு எனது சிறு பங்களிப்பை வழங்க முடியும் என்பதை உறுதி செய்கிறேன். ஆனால் எனது எதிர்கால இலக்கு இணைய வழி மின் ஊடக வெளியீட்டு முயற்சியாகவே இருக்கும்.
யாழ்ப்பாவாணன் (காசி.ஜீவலிங்கம்)
மாதகல் கிழக்கு, யாழ்ப்பாணம்,
வட மாகாணம், இலங்கை.

கருத்துகள் இல்லை :
கருத்துரையிடுக
வருக அறிஞர்களே! தருக தங்கள் கருத்துகளையே!