எவரெவரோ எதிர்பாராமல் தான்
என்னைச் சந்தித்தனர், பழகினர்...
என்னைக் கெட்டவர் என்று
விலகியோர் சிலர் இருக்கலாம்!
என்னை நல்லவர் என்று
தொடருவோர் சிலர் இருக்கலாம்!
பிரிந்தவர் எவரும் - எனக்கு
எதிரிகள் அல்லர் - ஏதோ
ஒன்றைப் படிப்பித்துச் சென்றவர்!
தொடரும் உறவுகளில்
நம்பிக்கையானவரும் இருப்பர்...
நடிகர்களும் இருப்பர்...
நான் சந்திக்கும் நேருக்கடி நேரம்
நம்பிக்கையானவர்களை இனங்காண்பேன்!
என்னைச் சூழ எத்தனையோ ஆள்கள்
எந்த வேளை ஆயினும்
எவரும் தேவைப்படலாம் - அதற்காக
எனது எதிர்பார்ப்புக்கு ஒத்துப்போகும்
ஆள்களை அரவணைத்துச் செல்கிறேன்!
நான் செத்தாலும்
என் பிணத்தைக் கூட
சுடுகாட்டிற்குக் காவிச் செல்ல
நாலாள் தேவை என்றுணர்ந்தே
எவரையும் முறித்துக் கொள்ளாமல்
ஓடும் பழமுமாக ஒட்டிக்கொள்ளா விட்டாலும்
எல்லோருடனும் உறவைப் பேணுகிறேன்!
குமுகாயத்திற்கு (சமூகத்திற்கு)
நானில்லாத போது
இன்னொருவர் இருக்கக்கூடும் - எனக்கோ
குமுகாயம் (சமூகம்) எப்பவும் தேவையே!
ஆக்கம்:
யாழ்ப்பாவாணன்
(மாதகல்வாசி காசி.ஜீவலிங்கம்)
சிறந்த சிந்தனை. எல்லோரையும் மதிப்பதோடு பாராட்டவும் செய்யும் நல்ல உள்ளம் உடையவர் நீங்கள் .வாழ்த்துகள்
பதிலளிநீக்குஎவரும் வேண்டாமென்று தனித்து வாழ்வதை விட, எப்பவும் எவரும் தேவை என வாழ்வது மேல்.
நீக்குஇந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
பதிலளிநீக்குArumai nanbare...
பதிலளிநீக்குமிக்க நன்றி அறிஞரே!
நீக்குமிக்க நன்றி அறிஞரே
நீக்கு