Translate Tamil to any languages.

வெள்ளி, 28 மே, 2021

எழுதுங்க, முடிவை வாசகர் சொல்லட்டும்

 

1, 
எழுதுங்கள் எழுதுங்கள் - உங்கள்
உள்ளத்தில் ஏற்பட்ட நோவை
உடலில் ஏற்பட்ட வலிகளை
எழுதும் போது மறக்காமல்
எதுகை, மோனை அமைய
எழுதுங்கள் எழுதுங்கள் - உங்களுக்கும்
கவிதைகள் எழுதத்தான் வருமே!
பலவாண்டுகள் பக்குவமாய் பழகி
பலரும் பார்க்கத்தான் காதலிப்பதாய்
காலம் கடத்திப் போட்டு
காலமானதும் அண்ணா என்றாளே!
எழுதுங்கள் இப்படித்தான்
எழுதுவது கவிதை ஆகலாம்!

2.
கவிதை என்பதும் பாடல் என்பதும்
வேறுபாடு உள்ளதாய்
எனக்குத் தெரியவில்லை.
"காசுள்ளவரை சூழவிருந்தவர்கள்
காசில்லாத வேளை பார்த்து
எங்கேயோ ஓடிப்போய்விட்டனர்! " என
பணத்துக்காய் உறவுகளென்று
எழுதி முடிப்பது கவிதை!
"பணம் இருந்தால் பறந்து வருவார்
குணம் இருந்தால் பறந்து போவார்
(பணம்)
பணத்தைக் கண்டு உள்ளம் இழுக்குமா
குணத்தைக் கண்டு உள்ளம் வெறுக்குமா
சாவைக் கண்டதும் எண்ணத் தோன்றுமா
(பணம்) "  என
மனித உள்ளத்தை உரித்துக் காட்டினால்
கவிதை என்றாலும் பாடல் என்கிறாங்க.
ஓ! இரண்டிலும்
இசை வேறுபாடு இருக்காம்
எழுதுங்க உறவுகளே!
நல்லது எல்லாம் - அவை
கவிதையா பாடலா
வாசகர் தீர்ப்புக் கூறட்டும்! 

3. 
காசுள்ளவரை சூழவிருந்தவர்கள்
காசில்லாத வேளை பார்த்து
எங்கேயோ ஓடிப்போய்விட்டனர்!
தேடிப் போகத் தான்
எனக்கு விருப்பம் இல்லை
பணம் உள்ளவர் கை தானே
அவர்களை இழுத்திருக்கும்!
என் கை நிறைய
ஒரு நாள் பணம் இருக்கலாம்
அந்த வேளை பார்த்து
என் பக்கம் அவர்கள் திரும்பலாம்!
பணம் பத்தும் செய்யும் என்பது
இந்தத் திருவிளையாடல் தானோ!!

4.
பணம் இருந்தால் பறந்து வருவார்
குணம் இருந்தால் பறந்து போவார்
(பணம்)
 
குணம் இருந்தால் பிணம் என்பார்
பணம் இருந்தால் கடவுள் என்பார்
(குணம்)
 
பணம் எங்கும் பாயும் என்பதா
பணம் பத்தும் செய்யும் என்பதா
குணம் உள்ளவர் வேண்டாம் என்பதா
(பணம்)(குணம்)
 
பணம் உள்ளவரை தான் உறவா
குணம் உள்ளவரை தான் விறகா
நோய் வந்தபின் தான் உணர்வா
(பணம்)(குணம்)
 
மருந்து உண்ணப் பணம் வேண்டுமா
உடலைப் பேணப் பணம் போதுமா
உடல் நொந்த பின்னே தெரியுமா
(பணம்)(குணம்)
 
பணத்தைக் கண்டு உள்ளம் இழுக்குமா
குணத்தைக் கண்டு உள்ளம் வெறுக்குமா
சாவைக் கண்டதும் எண்ணத் தோன்றுமா
(பணம்)(குணம்)
 
==========================================================
தன்முனைக் கவிதைகள் (SELF -ASSERTIVE VERSES)
https://ypvnpubs.blogspot.com/2021/05/self-assertive-verses.html
 

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக

வருக அறிஞர்களே! தருக தங்கள் கருத்துகளையே!