1
இணையந் தான் வந்த பின்னே
உலகந் தான் ஊராகத்
தான்
சுருங்கிப் போச்சாம்
மாறிப் போச்சாம்
(இணையம்)
ஊருந் தான் கெட்டுப்
போச்சு
நாடுந் தான் கெட்டுப்
போச்சு
நம்மாளுந் தான்
கெட்டுப் போனாங்க...
(ஊருந் தான்)
குழந்தைகளின் அழுகையை
நிறுத்த
ஆராரோ ஆரிவரோ பாடி
நிறுத்தாமல்
திறன்பேசியில்
படங்காட்டி அழுகையை நிறுத்த
குழந்தைகளின்
பார்வையே பின்நாளில் கெட்டுப்போச்சே
(இணையம்)
(ஊருந் தான்)
மணலில் எழுதிப்
படித்தது தெரியுமா
புத்தகம் படித்து
எழுதியது தெரியுமா
இணையத்தில்
நல்லறிவைப் படிக்கப் போய்
இளசுகள் கெட்டறிவைக்
கற்றுக் கெட்டுப்போறாங்க
(இணையம்)
(ஊருந் தான்)
சிலர் தொலைக்காட்சித் தொடரில் மூழ்கவே
சிலர் இணையக்
கலந்துரையாடலில் மூழ்கவே
ஊடலுமின்றிக்
கூடலுமின்றி குடும்பங்கள் சீரழிய
நாளைய தலைமுறைக்கு
நாமெங்கே போவது?
(இணையம்)
(ஊருந் தான்)
இணையம் அறியாமலும்
இணையத்தில் நுழையவே
உலகை வாட்டி
வதைக்கும் கொரோனாவே
தமிழர் பண்பாட்டை நினைவு ஊட்டியதோ
உலகம் எங்கும்
உலாவும் கொரோனாவே
(இணையம்)
(ஊருந் தான்)
2
வாழ்வில் பலரும் வந்துதான் போவார்
வாழ்வில் சிலதும் தந்துதான் போவார்
(வாழ்வில்)
யாரோ வருவார் ஏனோ போவார்
ஏதோ படிக்க வைத்துப் போவார்
(யாரோ)
தெரிந்தவர் வருவார் தெரியாமல் போவார்
உள்ளம் நொந்து கொள்ளப் போவார்
அறிந்தவர் வருவார் சொல்லாமல் போவார்
உள்ளம் வெந்து கொள்ளப் போவார்
(வாழ்வில்)
(யாரோ)
தெரியாதவர் வருவார் பழகியபின் போவார்
உள்ளம் வெந்து நோகப் போவார்
அறியாதவர் வருவார் அறிந்தபின் போவார்
உள்ளத்தில் வெறுப்பை விதைத்துப் போவார்
(வாழ்வில்)
(யாரோ)
உறவுகளாய் வருவார் விறகுகளாய் போவார்
உள்ளத்தைப் புண்ணாக்கிப் பறந்து போவார்
உறவாகிட வருவார் உதவாமல் போவார்
பயன்மிகு சொத்தைப் பொறுக்கிப் போவார்
(வாழ்வில்)
(யாரோ)
எட்டநின்று பழகினால் முட்டாமல் போவார்
உள்ளத்தைத் தொட்டுப் பார்க்காமல் போவார்
கட்டுப்பாடு போட்டுப்பழக உருகித்தான் போவார்
உள்ளத்தைத் தொட்டுப் பார்த்துப் போவார்
(வாழ்வில்)
(யாரோ)
கருத்துகள் இல்லை :
கருத்துரையிடுக
வருக அறிஞர்களே! தருக தங்கள் கருத்துகளையே!