Translate Tamil to any languages.

புதன், 25 செப்டம்பர், 2019

பிள்ளையாரே காவல்



பிள்ளையார் எமக்கு என்றுமே இறைவன்
பிள்ளையார் அரசடி நிழலிலும் இருப்பார்
பிள்ளையார் குளத்தடிக் கரையிலும் இருப்பார்
பிள்ளையார் எதுக்குமே துணையாய் நிற்பார்
பிள்ளையார் எமக்குத் தீர்வினைத் தருவார்
பிள்ளையார் எதிலுமே நிறைவையே தருவார்
பிள்ளையார் எமக்கு வெற்றியைத் தருவார்
பிள்ளையார் எமக்கென அமைதியைத் தருவார்
பிள்ளையார் எமக்கென மகிழ்வினைத் தருவார்
பிள்ளையார் எமக்கு நல்வினை அளிப்பார்
பிள்ளையார் எமக்குத் தீவினை களைவார்
பிள்ளையார் எமக்கெனக் குறைகளைக் களைவார்
பிள்ளையார் எமக்கெனத் துயரினைக் களைவார்
பிள்ளையார் எமது துன்பமே களைவார்
பிள்ளையார் எமது சிக்கலை விரட்ட
எல்லாம் நன்மையில் முடிய
பிள்ளையார் எமக்கு என்றும் காவலே!


புத்தரை இழிவு படுத்தாதீர்கள்!



புத்தர் உண்மையில் புனிதம் மிக்கவர்
புத்தரின் பயணம், வாழ்வது அறியார்
புத்தரின் புனிதமாம் மிதிபட
புத்தரை இழிவு செய்வது பிழையே!


வெற்றி


எந்த வெற்றியும் தமது பக்கமாய்
சொந்தமாய் கதையளப் பதில்தான் கிட்டும்
மாற்றான் தன்கதை அளந்தால்
ஆற்றா மையால் வெற்றி கிட்டாதே!


அம்மாவை நினை

அன்பால் உன்னை அன்னை என்றும்
தன்பால் ஈர்ப்பார் தானாய்
அன்னை யைநீ நினையேன் என்றுமே!


ஆணே ஏமாறதே!

அறிவே நீதான் அன்பே நீதான்
என்னைக் காக்கவே எனவல் லான்நீ
உன்சொல் என்றும் உற்றுக் கேட்பேன்
என்றே உந்தன் காசைப் பார்ப்பாள்
ஏழை என்றால் போதும்
உன்னை விட்டு ஓடு வாளே!


பெண்ணே ஏமாறதே!

அன்பே நீதான் அழகாம் என்பான்
அன்பே நீதான் அறிவாம் என்பான்
கழுத்தில் மின்னும் சங்கிலியைப் பார்ப்பான்
கழுத்தான் மின்னா தாயின்
நீயே ழையெனத் தள்ளிப் போவானே!

*மேலுள்ள பாக்கள் யாவும்  நேரிசை ஆசிரியப்பா ஆகும்.

2 கருத்துகள் :

வருக அறிஞர்களே! தருக தங்கள் கருத்துகளையே!