கடந்த 07/10/2019 அன்று எனது 50 ஆவது பிறந்த நாள். அன்றைய நாள் வாழ்த்துத் தெரிவித்த எல்லோருக்கும் மிக்க நன்றி.
எனது 50 ஆவது பிறந்த நாளிலிருந்து புதிய வலைத் தளங்கள் தொடங்கியுள்ளேன். இந்த வலைப்பூவைத் தொடர்ந்து பேணுவேன். புதிய தளங்களில் பிற சிறு தளங்களை ஒருங்கிணைத்துச் செல்லவுள்ளேன். புதிய தளங்கள் மேம்படுத்தப்பட்டதும் எனது புதிய பயணத்தைப் பார்க்கலாம்.
புதிய முகவரிகள்:
https://yarlpubs.com/
https://yarlsoft.yarlpubs.com/
தக்க சூழலில் தலையைக் காட்டு!
உனக்காக
எந்தச் சூழலும் அமைந்துவிடாது!
எந்தச் சூழலையும்
உனக்காகப் பயன்படுத்திக்கொள்...
வெற்றி உன்னை நாடி வருமே!
பிறருன்னை
அறிமுகம் செய்து வைப்பார்களென
நம்பியிருக்காதே!
எவர் முன்னும்
முதலில் உன்னை அறிமுகம் செய்து வை
அதுவே உனது வெற்றி!
பலருக்குள் (மக்களுக்குள்) அறிமுகமாக
சூழலோ (சந்தர்ப்பமோ) பிறரோ தேவையில்லை...
எந்தச் சூழலிலும் எவர் முன்னும்
உன்னை நீயே அறிமுகம் செய்யும் போதே!
உன்னை நீயே
அறிமுகம் செய்யத் தயங்கினால்
இலை மறை காயாகத் தானே
இருக்க முடியும்!
கணக்கு
வாழ்க்கை என்பது கணக்குத் தானம்மா!
காதலன், காதலி சேர்வது
கூட்டல் கணக்குத் தானம்மா!
கணவன், மனைவியாக இணைவது
கூட்டல் கணக்குத் தானம்மா!
காதலன், காதலி பிரிவது
கழித்தல் கணக்குத் தானம்மா!
கணவன், மனைவி பிரிவதும்
கழித்தல் கணக்குத் தானம்மா!
வாழையடி வாழையாகக் குட்டி போடுவது
பெருக்கல் கணக்குத் தானம்மா!
பாடையில போவதற்கு மூச்சை நிறுத்துவது
பிரித்தல் கணக்குத் தானம்மா!
காசைக் கணக்குப் பார்த்து - சேமித்து
செலவு செய்தால் வாழ்வுதானம்மா!
கடனாற்றில் நீந்திக் கடந்தால்
சாவுக் கணக்குத் தானம்மா!
எங்கும் எதிலும் எப்போதும்
வாழ்க்கையில் கணக்குத் தானம்மா!
கைநழுவிப் போனால் பயனேது?
கையில் பொருள் இருந்தால் தானே
விலையைப் பேசிக் கொள்ளலாம்!
உறவுகள் கிட்ட இருந்தால் தானே
அவர்களைப் பாவித்துக் கொள்ளலாம்!
கிட்டாதாயின் வெட்டென மற
கைக்கெட்டாததை எப்படிக் கையாள்வது?
குப்பையில போட்டாலும் கூட
குண்டுமணியும் ஒரு நாள் தேவைப்படலாமென
எண்ணிப்பார்க்காமல்
என்னைக் கழித்து ஒதுக்கிவிட்டவர்கள்
இன்று
என்னைப் பயன்படுத்த முடியாமல்
அழுகின்றனராம் பார்த்தியளே!
காற்றுள்ள போதே
தூற்றிக்கொள்வது போல
கைக்கெட்டியதைக் கையாள்வதே நலம்!
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் நண்பரே...
பதிலளிநீக்குகவிதைகள் ஸூப்பர்
தக்க சமயத்தில் தலையைக் காட்டு என்பதானது அனைவரும் மனதில் கொள்ளவேண்டியது.
பதிலளிநீக்கு