கடன் கடனாக வேண்டும் உறவுகளே!
கடைசியிலே
தூக்குக் கயிற்றில தொங்குவீர்!
கடனை நாடாமல் தேடாமல்
கைக்கெட்டியதைக் கையாள முற்பட்டால்
மகிழ்ச்சி வெள்ளத்தில் மிதக்கலாம் வா!
கடன்பட்டவர் சாவின் பின்னே தான்
கடன்கொடுத்தவனே
தன் நிலையை எண்ணிப் பார்க்கிறான்!
அன்பான கடன்கொடுப்போரே!
மாற்றாருக்குக் கடன்கொடுப்பதை விட
சேமிப்பகத்தில் வைப்பிலிட்டால்
வட்டி குறைந்தாலும் முதலுக்குச் சேதமில்லையே!
ஆனால், ஒரு உண்மை
கடன்கொடுத்தோரும் கடன் பெற்றோரும்
எவர் புத்திமதியும் கேட்டதாக
தகவல் ஏதும் கிடைக்கவில்லையே!
நல்ல ஓட்டுநர்
தேவை!
ஓட்டுநர் விழிப்போடு ஓட்டினால்
பயணிகள் மகிழ்வோடு பயணிக்கலாம்.
ஓட்டுநர் தூக்கத்தில் ஓட்டினால்
பயணிகள் துயரத்தோடு பயணிக்கலாம்.
ஓட்டுநர் ஓட்டும் போது தூங்கிவிட்டால்
பயணிகள் பிணமாகப் பயணிக்கலாம்.
அருச்சுனனுக்கு ஓட்டுநராக
கிருஸ்ணர் வந்தமைந்தாற் போல
எமக்கும் எமது பயணத்தில்
நல்ல ஓட்டுநர் வந்தமையணுமே!
நாலு ஆள் தேவை
அன்பைக்
கொடுத்தால்
அன்பைப் பெறலாம்!
மதிப்புக்
கொடுத்தால்
மதிப்புக்
கிடைக்கும்!
நம்பிக்கை
வைத்தால்
நம்பிக்கை வைக்க
வரலாம்!
உதவி செய்தால்
உதவி கிட்டும்!
பணம் கொடுத்தால்
பொருளோ பணியோ
கிட்டும்!
துயரைச் சொன்னால்
கூட
அன்பளிப்பாக
மதியுரையும் கிட்டும்!
எண்ணிப்
பார்க்கிறேள்...
ஏதோ ஒன்றைக்
கொடுத்துத் தான்
ஏதோ ஒன்றைப் பெற
வேண்டி இருக்கிறதே!
அப்படி
இருக்கையில்
கடவுளை
நினைக்காமல் கடவுளும் வரார்
எவருக்கும்
உதவாமல் எவரும் உதவார்
என்றிரிருக்கையில்
எதையோ கொடுத்து
எதையோ பெற
முயன்றால் தானே
வாழ்க்கை வண்டியை
ஓட்ட முடிகிறதே!
நான் செத்தால்
கூட
என்னுடைய
பிணத்தைக் காவிச் செல்ல
தோள்கொடுக்க நாலு
ஆள் தேவையென
நானும் அன்போடு
ஆள்களை அணைக்க
பணிவோடு இசைந்து
போவதை மறவேன்!
நான் கண்ட சிலர்!
ஒவ்வொருவர்
உள்ளங்களையும்
அறியாமலே
அவரவர்
அடுத்தவரைத்
தங்கள் காலடியில்
வீழ்த்த எண்ணி
தோற்றுப் போகிறார்களே!
ஒவ்வொருவர்
எண்ணங்களையும் எதிர்பார்ப்புகளையும்
அறிய முடியாமலே
அவரவர்
அடுத்தவரை வெற்றி
கொள்ள முடியாமலே
தாமே வீழ்ந்து
விடுகின்றனரே!
தன்னைத் தானே
வளப்படுத்தி, பதப்படுத்தி
முயன்ற
எல்லோருமே
தானும் வீழ்ந்து
விடாமலே
எவரையும்
வீழ்த்தி விடாமலே
வெற்றி நடை
போடுகின்றனரே!
எவரையாவது
வீழ்த்தி விட்டு
எப்படியாவது
அடுத்தவரைத்
தள்ளி விட்டு
வெல்ல முயன்ற
பலர்
தோற்றுத்
தலைக்குனிவோடு போகின்றனரே!
கருத்துகள் இல்லை :
கருத்துரையிடுக
வருக அறிஞர்களே! தருக தங்கள் கருத்துகளையே!