Translate Tamil to any languages.

திங்கள், 8 ஆகஸ்ட், 2016

குழுப் (வாட்ஸ் அப், வைபர்) பகிர்வு, பதிவர்களுக்குப் பயனுள்ளதா?

ஒரு காலத்தில வலைப் பூ (Blog), கருத்துக் களம் (Forum), வலைப் பக்கம் (Website) வழியே கலைப் படைப்புகளைப் பகிர்ந்த நம்மாளுங்க; பின்னர் மக்களாய (சமூக) வலைத்தளங்களில் (Linkedin, Twitter, Facebook, Google+) கலைப் படைப்புகளைப் பகிர்ந்தனர். ஆனால், இன்றோ குழுப் (வாட்ஸ் அப், வைபர்) பகிர்வு ஊடாகக் கலைப் படைப்புகளைப் பகிருகின்றனர்.

1. வலைப் பூ (Blog), கருத்துக் களம் (Forum), வலைப் பக்கம் (Website) ஊடாகக் கலைப் படைப்புகளைப் பேணுவதால் ஒருவரது எல்லாப் பதிவுகளையும் ஒரே நேரத்தில் பார்க்கக் கூடியதாக இருக்கும். ஆனால், மக்களாய (சமூக) வலைத்தளங்களில் (Linkedin, Twitter, Facebook, Google+) அப்படிக் காண்பிக்க இயலாதே!

2. வலைப் பூ (Blog), கருத்துக் களம் (Forum), வலைப் பக்கம் (Website) ஊடாகக் கலைப் படைப்புகளைப் பேணுவதால் ஒரு படைப்பாளியின் முழு (A to Z) ஆற்றலையும் ஒரே நேரத்தில் ஒப்புவிக்கலாம். ஆனால், மக்களாய (சமூக) வலைத்தளங்களில் (Linkedin, Twitter, Facebook, Google+) அப்படி ஒப்புதல் அளிக்க முடியாதே!

இப்படிப் பல ஒப்பீடுகள் உள்ளன. அது பற்றி, எனது கீழ்வரும் பதிவுக்கு அறிஞர்கள் வழங்கிய கருத்துகளை படித்துத் தெளிவு பெறுவீர்கள் என நம்புகின்றேன்.
கருத்து மோதலில் பங்கெடுக்க வாரும்!

குழுப் (வாட்ஸ் அப், வைபர்) பகிர்வு, பதிவர்களுக்குப் பயனுள்ளதா? என்றால்; அதுவும் மக்களாய (சமூக) வலைத்தளங்களில் (Linkedin, Twitter, Facebook, Google+) பகிருவதை விட கீழ்நிலைக்குத் தள்ளப்படுகின்றது என்பதைத் தாங்கள் அறிவீர்களா? அதாவது, கையெழுத்துச் சஞ்சிகை ஆக்கிய பின் தெரிந்த நட்புகளுடன் பகிருவது போல குழுவில் (வாட்ஸ் அப், வைபர்) உள்ளவர்களுடன் பகிருவதாக இருக்குமே! கையெழுத்துச் சஞ்சிகை ஆவது ஆவணப்படுத்தலாக இருக்கும்; குழுவில் (வாட்ஸ் அப், வைபர்) பகிருவது அப்படி இருக்காதே! எப்படியோ ஒரு படைப்பாளியின் முழு (A to Z) ஆற்றலையும் வெளிப்படுத்த வலைப் பூ (Blog), கருத்துக் களம் (Forum), வலைப் பக்கம் (Website) போன்றன சிறந்தது எனலாம்.

இதன் காரணமாகவா குழுவில் (வாட்ஸ் அப், வைபர்) இணைந்தவர்கள்; இணைந்த வேகத்திலேயே குழுவை விட்டு ஓடுகிறார்கள்? இல்லை! கீழுள்ள சூழ்நிலைகளும் பலரைக் குழுவை விட்டு விலக வைக்கலாம்.
1. அடிக்கடி தகவல் வர நடைபேசி விரைவாக மின்னிறக்கம் அடைகிறது.
2. நீண்ட பதிவுகளை நடைபேசி வழியே படிக்கக் கண் வலிக்கும்.
3. ஒளிப்படங்கள் (Photo), ஒளிஒலிக் கோப்புகள் (Video) நடைபேசிச் சேமிப்பகத்தை நிரப்பிவிட; நடைபேசியின் வேகம் குறைகின்றது.
4. எல்லோரும் தெரிந்தவர்கள் தானே என எண்ணி நற்றமிழ் பேணாது, பெறுமதியற்ற சொல்கள், வரிகள் பாவிப்பதும் பலருக்கு வெறுப்பை ஏற்படுத்துகிறது.

கலை ஆற்றலை வெளிப்படுத்த வலை ஊடகங்களை விட்டு, நடைபேசி வழியே குழுப் (வாட்ஸ் அப், வைபர்) பகிர்வைப் பலர் நாடுகின்றனர். ஆங்கே நடப்பதென்ன? "கலையின் பெயரில் வார்த்தை ஆபாசம் பேசும் ஐந்தறிவு மிருகங்கள் (http://palainet.com/?p=2208)" என்ற பதிவைப் படித்துப் பாருங்கள். குழுப் (வாட்ஸ் அப், வைபர்) பகிர்வின் ஊடாகத் தேவையற்ற சொல்களைக் கையாள்வது கலையை மதிக்காமை எனலாம். இந்தச் செயலை உங்கள் உள்ளத்தில் நிறுத்தி, எடை போட்டுத் தங்களது உண்மைக் கருத்துகளைப் பகிர முன்வாருங்கள். அவை கருத்து மோதலை ஏற்படுத்தினாலும் சிறந்த முடிவுக்கு வர உதவுமே!


முடிவாகச் சொல்வதாயின் வலைப் பூ (Blog), கருத்துக் களம் (Forum), வலைப் பக்கம் (Website) ஆகியவற்றில் பதிவுகளை இட்ட பின்னர், அதற்கான இணைப்பை மக்களாய (சமூக) வலைத்தளங்களில் (Linkedin, Twitter, Facebook, Google+) மற்றும் குழுப் (வாட்ஸ் அப், வைபர்) பகிர்விலோ வெளிப்படுத்தி வாசகர்களைப் பெருக்கலாம். அதேவேளை ஒவ்வொரு படைப்பாளியின் முழு (A to Z) ஆற்றலையும் வெளிக்கொணர ஆளுக்கொரு வலைப் பூ (Blog) போதுமென்பேன்.


வலைப்பூ உறவுகளே! சில மாதங்களாகத் தங்கள் தளங்களுக்கு வராது இருந்த போதும் எனது தளத்திற்கு வருகை தந்து கருத்திட்டு ஊக்கமளித்த பதிவர்களுக்கு மிக்க நன்றி. தங்கள் தளங்களுக்கு இனி அடிக்கடி வருவேன் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். எமது உறவு என்றென்றும் தொடரும்.

8 கருத்துகள் :

  1. வாட்ஸாப்பை அளவாகவும், உபயோகிக்கும் வகையிலும் உபயோகித்தால் நன்றாக உபயோகிக்கலாம்!

    பதிலளிநீக்கு
  2. எதையுமே அளவோடு தேவைப்படும்போது நல்ல வழிகளுக்காக உபயோகித்தல் நன்றுதானே ஐயா

    பதிலளிநீக்கு
  3. அருமையான பகிர்வு நன்று பாராட்டுகள்

    பதிலளிநீக்கு
  4. தற்காலிக தகவல்களுக்கு மட்டுமே மக்களாய வலைத்தளங்கள் சிறந்தது. நிரந்தர சேமிப்புக்கு வலைப்பூக்களே சிறந்தது.
    நல்ல அலசல்.

    பதிலளிநீக்கு
  5. நல்ல எழுத்தாளனுக்கு தேவையானது வலைப்பூ என்பது எனது கருத்து நண்பரே

    பதிலளிநீக்கு
  6. என் அனுபவத்தில்...எமக்கு வலைப்பூதான் பிடித்தமானது..சலிப்பு இல்லாதது

    பதிலளிநீக்கு
  7. உங்களுடைய ஆழ்ந்த வலைத்தள அனுபவங்கள், கட்டுரையில் அப்படியே எதிரொல்லிக்கின்றன.

    // ஒவ்வொரு படைப்பாளியின் முழு (A to Z) ஆற்றலையும் வெளிக்கொணர ஆளுக்கொரு வலைப் பூ (Blog) போதுமென்பேன். //

    உண்மைதான் கவிஞரே. வாட்ஸ்அப்பிலும் ஃபேஸ்புக்கிலும் அப்படியே பல படங்களையும், வீடியோக்களையும் பதிவேற்றி நண்பர்களை நோகடிப்பதைவிட, அவரவர் வலைப்பூவின் இணைப்பைக் கொடுத்தல் நல்லதுதான். நேரமும் மிச்சம்.

    பதிலளிநீக்கு

வருக அறிஞர்களே! தருக தங்கள் கருத்துகளையே!