இனிய
உறவுகளே!
விருப்பத்துக்குரிய
இணைய வானொலியை உங்கள் வலைப்பூக்களில் இணைப்பது எப்படி எனச் சற்று எண்ணிப் பார்ப்போம்.
எடுத்துக்காட்டாக
http://shakthifm.com/ என்ற தளத்திற்குச் செல்லுங்கள். அத்தளத்தில் இடது பக்கக் கீழ்ப்
பகுதியில் ஒலிக்கும் ஒலிப் பட்டை (Sound Player Bar) தென்படும். அதன் மேல் வலது சுட்டெலி
அழுத்தியை (Right Mouse Button) அழுத்தியதும் தோன்றும் பட்டியில் (Menu) Copy
Audio Address என்பதனைத் தெரிவு செய்து ஒலி இணைப்பு முகவரியைப் படி (Copy) எடுத்துக்கொள்க.
அந்த
இணைப்பு:
பின்னர்
HTML இணைய மொழியிலுள்ள iframe கட்டளையைப் பயன்படுத்திக் கீழ்வருமாறு நிரலை (Code) ஆக்குங்கள்.

இந்த
எளிமையான நிரலை (Code) வலைப்பூவில் (Blog) எப்படி இணைப்பது?
வழமை
போல வலைப்பூ வழங்குநர் (Blogger) பகுதிக்குள் நுழையுங்கள். பின் தங்கள் வலைப்பூவைச்
(Blog) சொடுக்குங்கள். அவ்வேளை
Yarlpavanan Publishers · Overview என்பது போல தோன்றும் பகுதியில் Layout என்பதனைத்
தெரிவு செய்க. பின்னர் விரும்பிய (Side Bar) நிரலில் Add a Gadget என்பதனைச் சொடுக்குக.
அவ்வேளை HTML/JavaScript என்பதனைத் தெரிவு செய்க. பின்னர் தோன்றும் பகுதியில்,
Title பெட்டிக்குள் உங்கள் விருப்ப வானொலிப் பெயரை இடலாம்; Content பெட்டிக்குள் மேலுள்ளவாறு
உங்கள் விருப்ப வானொலிக்கான நிரலை (Code) இட்டுச் Save அழுத்தியை அழுத்தவும். பின்
Save Arrangement அழுத்தியை அழுத்தவும்.
இனி
உங்கள் வலைப்பூவை (Blog) விரித்துப் பார்த்தால் நீங்கள் விரும்பிய வானொலி இயங்கிக்
கொண்டிருக்கும். உங்கள் வலைப்பூவில் (Blog) உங்கள் நாட்டு உங்கள் விருப்ப வானொலியை
இணைக்க இச்சிறுகுறிப்பு உதவுமென நம்புகிறேன். இப்பகுதியை எழுத உதவிய தளத்தின் முகவரியைக்
கீழே தருகின்றேன். மேலும், அத்தளம் தங்களுக்கு வழிகாட்டுமே!
இந்த
வலைப்பூவில் (Blog) இணைக்கப்பட்டுள்ள இலங்கைச் சக்தி பண்பலை (FM) வானொலி இணைப்புக்
கருவியை (Gadget) தங்கள் தளத்தில் இணைக்க விரும்பினால் கீழ்வரும் நிரலைப் (Code) பயன்படுத்துக.

Wordpress வலைப்பூவில்
இணைக்க

[audio
autoplay="autoplay"
src="http://76.164.217.100:7012/;stream.mp3" /]

நன்றி.
வானொலி இணைக்கலாம்தான்... நம்ம வலைப்பக்கம் எல்லாம் சும்மாவே திறக்க திணறுது... இதுல இதையும் போட்டால்...... சரியான பின் இணைக்கிறேன் ஐயா...
பதிலளிநீக்குபுதிய உத்தி. வாய்ப்பு கிடைக்கும்போது முயன்று பார்ப்பேன்.
பதிலளிநீக்குகுமார் சொல்லி இருப்பதையேதான் நானும் சொல்ல நினைத்தேன். வரும் வாசகர்களுக்கு பொறுமை போய்விடும்!
பதிலளிநீக்குநல்லது எனது சாதனத்தில் கேட்பு ஒலி சாதனம் இல்லை..அதுவும்போக வானொலி கேட்க நேரமும் கிடைப்பதில்லை...
பதிலளிநீக்குவணக்கம்
பதிலளிநீக்குயாவரும் பயன் பெறும் தகவல் நிச்சயம் செய்து பார்க்கிறோம் பகிர்வுக்கு நன்றி
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
நல்ல தகவல், விரைவில் பயன்படுத்துகிறோம்
பதிலளிநீக்கு