Translate Tamil to any languages.

சனி, 7 மே, 2016

நான் கற்பிக்க ஏது இருக்கு?

(படம் கூகிள் தேடலில் சிக்கியது)

"படம் பார் பாடம் படி" என
தொடக்கக் கல்வி ஆசிரியர்
சொல்லித் தந்த படி - நான்
சொல்லிக் கொடுக்க ஏதுமிருக்காது...
ஏனென்றால்
நாளுக்கு நாள் நடப்பது
தெரு விபத்து - அதில்
ஓரிரு உயிர்கள் பிரிந்து போக
எஞ்சியோர்
கையுடைந்து காலுடைந்து என...
எல்லாவற்றையும் கண்ட பின்னும்
தெரு விபத்துத் தொடருகிறது
என்றால்
"படம் பார் பாடம் படி" என
விபத்துப் படம் காட்டி
விபத்திற்குள் சிக்காதே என
நான் கற்பிக்க ஏது இருக்கு?
விபத்துப் படம் என்ன
விபத்திற்குள் பல முறை சிக்கியும்
விபத்திற்குள் சிக்குவோருக்கு
நான் கற்பிக்க ஏது இருக்கு?

14 கருத்துகள் :

  1. சூடுபட்டும் திருந்தாதவர்களை திருத்துவது சிரமம்தான்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் கருத்தை வரவேற்கிறேன்.
      மிக்க நன்றி.

      நீக்கு
  2. வணக்கம்

    திருந்தாத மனிதர்கள் அபாயம் என்றால் ஒருதடவை தடவிப்பார்க்கும் மனிதர்கள் அதிகம்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் கருத்தை வரவேற்கிறேன்.
      மிக்க நன்றி.

      நீக்கு
  3. விபத்து என்பதற்கு விளக்கம் சொல்ல முடியாது.ஆனால் சட்ட திட்டங்களுக்கும் சாலை விதிமுறைகளுக்கும் உட்பட்டு வாழ்ந்தால் விபத்துகள் குறையலாம்.நல்ல புகைப்படம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் கருத்தை வரவேற்கிறேன்.
      மிக்க நன்றி.

      நீக்கு
  4. ஒவ்வொரு முறை பாடம் கற்றாலும் திருந்துவதாகத் தெரியவில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் கருத்தை வரவேற்கிறேன்.
      மிக்க நன்றி.

      நீக்கு
  5. எவ்வளவு பட்டாலும் திருந்தாத மனிதர்கள் தான் அதிகம் சார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் கருத்தை வரவேற்கிறேன்.
      மிக்க நன்றி.

      நீக்கு
  6. சட்டங்கள் கடுமையாக்கப் படவேண்டும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் கருத்தை வரவேற்கிறேன்.
      மிக்க நன்றி.

      நீக்கு
  7. பதில்கள்
    1. விபத்துக்கு மூல காரணம் போக்குவரவு நடைமுறைகளைப் பின்பற்றாமையே
      தங்கள் கருத்தை வரவேற்கிறேன்.
      மிக்க நன்றி.

      நீக்கு

வருக அறிஞர்களே! தருக தங்கள் கருத்துகளையே!