Translate Tamil to any languages.

வெள்ளி, 8 மே, 2015

மின்நூல்கள் என்றால் இலகுவாய் வெளியிடலாமா?

ஒரு நூல் வெளியீட்டையும் ஒரு தாயின் மகப்பேற்றையும் ஒப்பிட்டு தாயின் மகப்பேற்று வலி போலத் தான் ஒருவரது நூல் வெளியீட்டு வலியும் இருக்குமென்பர். தாயானாவள் தன் குழந்தையைச் சுமந்து ஈன்றெடுக்கம் நாள் வரை பட்ட துயர் எழுத்தில் எழுதிவிட முடியாது. அது போலப் படைப்பாளியின் உள்ளத்தில் கருவுற்ற எண்ணம் எழுதி,  தொடராக வெளியாகி. தொகுத்து நூலாக உருவாகி வெளியிடும் வரை படைப்பாளி பட்ட துயரும் அதை விட அதிமாகத் தானிருக்கும்.

நம்மாளுகள் சிலரின் தவறான எண்ணங்கள் பல படைப்பாளிகளின் உள்ளத்தை நோகடித்து இருக்கிறது.
உவர்களுக்கென்ன
எம்.எஸ்.வேர்ட்டில் தட்டிப்போட்டு
போட்டோசொப்பில் வெட்டிப்போட்டு
பிடிஎஃப் இல ஒட்டிப்போட்டு
வலையில காட்டிப்புட்டால்
மின்னூல் என்பாங்க!

இப்படி மின்னூல் ஆக்கியோரைச் சொல்லால் அடித்தால் உங்களுக்கு எப்படி இருக்கும்? ஒரு படைப்பாளி தனது மின்நூலை வெளிக்கொணர எவ்வளவு துன்ப, துயரங்களைச் சந்தித்திருப்பார். நான் கூட மின்னூல் ஒன்றை ஆக்கி வெளியிட்ட வேளை பட்ட துயரை உணர்ந்தே இவ்வாறு மின்னூல் வெளியிடுவோரை நோகடிக்க வேண்டாம் எனப் பணிவோடு கேட்டுக்கொள்கின்றேன்.

இத்தனைக்கும் மத்தியில் எப்படியோ பல அறிஞர்கள் தங்கள் மின்னூல்களை வெளியிடுகிறார்கள். அவர்களை நாம் பாராட்டியே ஆகவேண்டும். அந்த வகையில் அறிஞர் ஜோதிஜி திருப்பூர் அவர்களின் மின்னூல் விரிப்பைப் பார்க்க முடிந்தது. அதிலும் தமிகத்தில் இருந்து "ஈழம் – வந்தார்கள் வென்றார்கள்" என்றொரு ஈழம் சார்ந்த கட்டுரைகளையும் மின்னூல் ஆக்கியுள்ளார். அவரது மின்னூல்களைப் பதிவிறக்கிப் படித்துப் பாருங்கள்.

ஈழம் – வந்தார்கள் வென்றார்கள்
"ஈழம் சார்ந்த கட்டுரைகள்" என்று தொடருகிறார்.
இணைப்பு: http://freetamilebooks.com/ebooks/ezham-vandhargal-vendrargal/

தமிழர் தேசம்
"நானும் எங்க ஊரும்" என்று தொடருகிறார்.
இணைப்பு: http://freetamilebooks.com/ebooks/tamilar-desam/

வெள்ளை அடிமைகள்
"என் நாடு இந்தியா. நான் இந்தியன்" என்று  தொடருகிறார்.
இணைப்பு: http://freetamilebooks.com/ebooks/white-slaves/

ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள்
"திருப்பூர் பின்னலாடைத் தொழிலை அலசும் தொடர்" என்று தொடருகிறார்.
இணைப்பு: http://freetamilebooks.com/ebooks/factory-notes/

பயத்தோடு வாழப் பழகிக் கொள்
"நடுத்தரவர்க்கத்தின் அங்கத்தினரான நாம் ஏதோ ஒன்றுக்காக பயந்து தினந்தோறும் நம் இருப்பை காப்பாற்றிக் கொள்ளத்தான் போராடிக் கொண்டே இருக்கின்றோம்." என்று  தொடருகிறார்.
இணைப்பு: http://freetamilebooks.com/ebooks/live-with-fear/

படம் - அவரது நூலறிமுகத்தில்...

கொஞ்சம் சோறு கொஞ்சம் வரலாறு
"நான் தமிழ்நாட்டில் பார்த்த, பார்த்துக் கொண்டிருக்கும் மாசுபட்ட சுற்றுச்சூழல் சார்ந்த பல வற்றையும், சந்தித்த அனுபவங்களையும் எழுதி உள்ளேன்." என்று  தொடருகிறார்.

படம் - அவரது நூலறிமுகத்தில்...

அறிஞர் ஜோதிஜி திருப்பூர் அவர்களின் முயற்சிகளைப் பாராட்டுகிறேன். இவற்றைவிட டொலர் நகரம் என்றொரு நூலையும் அறிஞர் வெளியிட்டுள்ளார். அறிஞரின் மின் நூல்களைப் பதிவிறக்கிப் படித்த பின், தங்கள் எண்ணங்களைப் பகிருமாறு பணிவாகக் கேட்டுக்கொள்கிறேன். 
18 கருத்துகள் :

 1. அண்ணன் ஜோதிஜி அவர்களுக்கு வாழ்த்துக்கள்...

  பதிலளிநீக்கு
 2. படைத்தவனுக்குத்தான் தெரியும் அதன் அருமை என்பார்கள். எனவே எந்த ஒன்றையும் சட்டென குறை கூறி விடக் கூடாது. மின்னூல் பற்றிய தங்களது கருத்துக்கள் யாவும் அனுபவ முத்திரைகள்.

  வலையுலகில் நான் விரும்பிப் படிக்கும் எழுத்தாளர்களில் திருப்பூர் ஜோதிஜி அவர்களும் ஒருவர். இங்கே நீங்கள் குறிப்பிட்ட மின்னூல்களில், ”ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள்” மட்டும் படிக்க இயலாமல் போய்விட்டது. ”தமிழர் தேசம்” குறித்து எனது வலைப் பதிவில் நூல் விமர்சனக் கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளேன்.

  இன்னும் ரஞ்சனி நாராயணன், ராஜலக்ஷ்மி பரமசிவம் ஆகியோரது மின்னூல்களையும் படித்து ரசித்துள்ளேன்.

  பதிலளிநீக்கு
 3. ஜோதிஜி அவர்கள் பாராட்டிற்கு உரியவர்
  பாராட்டுவோம்

  பதிலளிநீக்கு
 4. அழகாக படைப்பைப்பற்றி விவரித்தீர்கள் நண்பரே ஜோதிஜி அவர்களுக்கு வாழ்த்துகள்

  பதிலளிநீக்கு
 5. நல்ல பதிவு....
  அருமையான விவரம் கூறினீர்கள்.

  பதிலளிநீக்கு
 6. மின்னூல் உருவாக்கம்பற்றி சிரமத்தை கூறி சிறந்த மின்நூல்களையும் அதன் ஆசிரியர் அவர்களையும் வாழ்த்தி அறிமுகப்படுத்தியதற்கும் நன்றியும் வாழ்த்துக்களும்.

  பதிலளிநீக்கு
 7. நாங்கள் மிகவும் மதிக்கும், போற்றும் எங்கள் மதிப்புற்குரிய நண்பர் ஜோதிஜி அவர்களின் எழுத்துகளை இங்கு பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி! நாங்களும் வாசித்துக் கொண்டே இருக்கின்றோம் அவரது நூல்களை.....வேலைப்பளு அதிகமானதால் இன்னும் முடித்த பாடில்லை. வாசித்து எங்கள் கருத்தை இட வேண்டும் என்ற எண்ணம் உள்ளது. பகிர்வுக்கு எங்கள் மனமார்ந்த நன்றிகள்!

  பதிலளிநீக்கு
 8. உண்மையில் மின்நூல் என்பது பெரும் பணி என்பதை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். அருமையான விளக்கத்துடன் ஜோதிஜியின் மின்நூல்கள் பட்டியல் பகிர்ப்வுக்கு நன்றிகள்.பயத்தோடு வாழப் பழகிக் கொள், கொஞ்சம் சோறு கொஞ்சம் வரலாறு,வாசித்தவை மற்றவை இனி மேல்தான்!

  பதிலளிநீக்கு

வருக அறிஞர்களே! தருக தங்கள் கருத்துகளையே!