Translate Tamil to any languages.

வியாழன், 21 மே, 2015

அறிஞர் வியாசனிடம் யாழ்பாவாணன் தோற்றுப்போகின்றார்

" 'சிங்களத்தீவு’ அல்ல, அது இலங்கைத்தீவு!" என்ற தலைப்பில்
"மகாவம்சத்தில் எங்குமே சிங்களத்தீவு என இலங்கை அழைக்கப்படவில்லை. வட இந்திய மன்னன்  அசோகனின் புத்த துறவிகளால் சிவனை வழிபட்ட சைவனாகிய நாக அரசன் தேவநம்பியதீசனுக்கு புத்தசமயம் அறிமுகப்படுத்தப்படும் வரை இலங்கையில் புத்தரும் இல்லை, பெளத்தர்களும் இல்லை, சிங்களவர்களும் இல்லை." என்றும்

"சிங்களவர்களின் ஜாதகக் கதைகளில் கூட தமிழர்கள் பற்றிய, தமிழர்களின் நாடு (தெமல ரட்ட) பற்றிய குறிப்புகள் உண்டு, ஆனால் சிங்கள என்ற இனம் பற்றியோ அல்லது மொழி பற்றியோ மகாவம்சம் எழுதப்படுவதற்கு முன்பும், பின்பும் சில நூற்றாண்டுகள் வரை எந்த குறிப்பும் கிடையாது. சிங்கள, சிஹல, ஹேல என்ற எந்தச் சொல்லும் கிடையாது. ஆகவே வரலாற்றின் அடிப்படையில் இலங்கையை சிங்களத் தீவு என அழைப்பது தவறானதொன்றாகும்." என்றும்

முழு இலங்கையுமே தமிழருக்கச் சொந்தமானது எனக் கோடிட்டுக்காட்ட அறிஞர் வியாசன் முனைகின்றார்.
இணைப்பு: http://viyaasan.blogspot.com/2015/05/blog-post.html
 
"இலங்கை சிங்களவருக்குச் சொந்தமானதா?" என்ற தலைப்பில் "இலங்கைச் சிங்களவரின் முதற்குடி அல்லது முதற் தலைமுறை தமிழராகவே இருக்கின்றனர். எனவே, இலங்கை "சிங்களவருடையதா? தமிழருடையதா?" என்று அலசப் பல சான்றுகளைத் தேடினாலும் இறுதியில் ஈரேழு தீவுகளாம் ஈழம் அல்லது இலங்கை தமிழருக்குச் சொந்தமானது என்று முடிவு செய்துவிடலாம்." என முழு இலங்கையுமே தமிழருக்குச் சொந்தமானது எனக் கோடிட்டுக்காட்ட யாழ்பாவாணன் முனைகின்றார்.
இணைப்பு: http://eluththugal.blogspot.com/2014/05/blog-post_8469.html

மேற்படி, இரு பதிவுகளையும் படித்துப் பார்த்தால் "இலங்கை வரலாற்றில் தமிழர் அடையாளங்களே முதலில் இருந்ததாகவும் சிங்கள அடையாளங்கள் இருக்கவில்லை" என்று அறிஞர் வியாசன்  அவர்களும் "இந்தியாவில் நிகழ்ந்த ஆரியப் புரட்சியின் பின் இந்தியாவில் பௌத்தம் பேணிய தமிழ்ப் பௌத்தத் துறவிகள் "சிங்களம் பயின்று தான் வழிபாடுகளை நிகழ்த்தலாம்" என்ற நிலைக்குத் தள்ளப்பட்டனர். இந்த நிலை ஈழத்திற்கும் வந்து சேரச் சிங்களமும் இலங்கையில் காலூன்றியது. பின்னர் சிங்களம் பேசுவோர் சிங்களவராயினர்." என்று யாழ்பாவாணனும் என்ன சொல்ல வருகின்றனர்?

" 'சிங்களத்தீவு’ அல்ல, அது இலங்கைத்தீவு!" என்றாலும் "இலங்கை சிங்களவருக்குச் சொந்தமானதா?" என்றால் இல்லை தமிழருக்குச் சொந்தமானது என்றாலும் இருவருமே முழு இலங்கையுமே தமிழருக்கச் சொந்தமானது எனக் கோடிட்டுக்காட்ட முன்நிற்கின்றனர். ஆயினும், யாழ்பாவாணனை விடச் சுவைமிகு கைவண்ணத்தில் நம்பக்கூடிய தக்க சான்றுகளை முன்வைத்து அறிஞர் வியாசன் அவர்கள் தன் கருத்தை உறுதிப்படுத்துவதைப் பார்த்தால் அறிஞர் வியாசனிடம் யாழ்பாவாணன் தோற்றுப்போகின்றார் என்றே கருதமுடிகிறது.

முடிவு: முழு இலங்கையுமே சிங்களவருக்கல்ல தமிழருக்கே சொந்தமானது.

14 கருத்துகள் :

  1. வணக்கம் நண்பரே இரண்டு இணைப்புகளுக்குமே சென்று செல்கிறேன்.

    பதிலளிநீக்கு
  2. வணக்கம்
    அரிய வரலாற்று குறிப்பு பகிர்வுக்கு நன்றி

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
      மிக்க நன்றி.

      நீக்கு
  3. ஆதி மனிதன் தமிழன் என்ற வரலாற்று தகவல்களுடன் மீண்டும் வருகிறேன்.
    தங்கள் பகிர்வு அருமை. இரண்டையும் படித்து வருகிறேன். நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்று!
      முடிவு தான் முதன்மை!
      தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
      மிக்க நன்றி.

      நீக்கு
  4. பதில்கள்
    1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
      மிக்க நன்றி.

      நீக்கு
  5. அதென்ன 'அறிஞர்'??? என்ன நக்கலா?? எதுக்கெடுத்தாலும் இப்படி ஏதாவது பெயர் சூட்டி பப்பா(சி) மரத்தில் ஏற்றி விடும் தமிழ்நாட்டுப் பழக்கம் உங்களையும் தொற்றிக் கொண்டு விட்டது போலிருக்கிறது. :-)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என்னை விட
      அறிவில் பெரியோரை
      அறிஞர் என்கிறேன்
      அவ்வளவு தான் - இதில்
      நக்கல், நையாண்டிக்கு
      இடமில்லையே!
      பப்பா(சி) மரத்தில் ஏற்றி
      எவரையும் விழுத்திவிடும்
      எண்ணம் எனக்கில்லை!
      தங்கள் வருகைக்கும்
      தங்கள் கருத்திற்கும்
      மிக்க நன்றி!

      நீக்கு
  6. சிங்களத்தீவில் தமிழ் பேசும் அறிஞர் சகோ வியாசன் இருப்பது எமக்கும் பெருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
      மிக்க நன்றி.

      நீக்கு
  7. ஆம் அவர் சொல்லுவது சரிதானே! தமிழர் தானே அங்கு பண்டையிலும் இருந்தார்கள்....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
      மிக்க நன்றி.

      நீக்கு

வருக அறிஞர்களே! தருக தங்கள் கருத்துகளையே!