Translate Tamil to any languages.

ஞாயிறு, 24 மே, 2015

வாங்க, யாப்பறியாமலும் பாப்புனையலாம் வாங்க!


கண்டேன் அறிஞர் ஒருவரின் பதிவை
(அந்நியன் கணக்கு - ஆக்கம் அறிஞர் கீதா
http://thillaiakathuchronicles.blogspot.com/2015/05/ANNIYAN-KANAKKU.html)
கண்டதும் படித்ததும் - என்
எண்ணத்தில் மீள மீள
எண்ணிப் பார்க்க வைத்த
அடிகளை அப்படியே தருகின்றேன்!

அஞ்சு பைசா திருடினா தப்பா?”
‘‘தப்பில்லைங்க’’
“அஞ்சு கோடி பேர்
அஞ்சு பைசா திருடினா தப்பா?”
‘‘தப்பு மாதிரிதாங்க தெரியுது...’’
“அஞ்சு கோடி பேர்,
அஞ்சு கோடி தடவை
அஞ்சு பைசா திருடினா தப்பா?”
‘‘அய்யோ... பெரிய தப்புங்க...’’  



பதிவைப் படித்த பின்னர் - அந்த
பதிவிற்கான கருத்தாக - நான்
பா/கவிதை போல எழுதிய வரிகளில்
மாற்றம் செய்து பலருக்குக் காண்பித்து
உங்களாலும் பா/கவிதை புனைய முடியுமென
உங்கள் ஆற்றலை வெளிக்கொணர
கடுகளவு முயற்சி எடுக்கிறேன்!
"வாங்க,
யாப்பறியாமலும் பாப்புனையலாம் வாங்க!" என்று
எல்லோரையும் அழைத்திங்கே - அந்த
அறிஞரின் பதிவைப் படித்த பின்
நான் கிறுக்கும்
பா/கவிதை போன்ற வரிகளாயினும் சரி
துளிப்பா, குறும்பா, புதுப்பாவாயினும் சரி
யாப்பறிந்த (மரபுப்) பாக்களில் எதுவாயினும் சரி
உங்கள் கைவண்ணங்களில் ஆக்கி
பின்னூட்டங்களில் இட்டு உதவுங்கள்!

இஞ்சாருங்கோ - எங்களால
பா/கவிதை புனைய முடியாதென
ஒரு போதும்
மறுப்புக் கூற வேண்டாமுங்கோ...
"மிச்சக்காசு கிட்டாமையால் வயிறு கடிக்குதே!" என்றோ
"மிச்சக்காசைச் சுருட்டி வீடு வாசல் கட்டுவாங்களோ!" என்றோ
"மிச்சக்காசுக்கு இனிப்பை இடிக்கிறவங்களால
நம்மாளுங்க நீரிழிவால துன்பப்படுறாங்களே!" என்றோ
"மிச்சக்காசாக
ஒரு உரூபாவாயினும் நடத்துனர் தந்திருந்தால்
ஒரு முடர் தேத்தண்ணி குடித்திருப்பேனே!" என்றோ
உள்ளத்தில் தோன்றிய எண்ணங்களையாவது
வெளிக்கொணர்ந்தால் பா/கவிதை ஆகுமே - அதில்
பா/கவிதை இயல்பு வெளிப்பட்டு விட
யாப்பில் கூட இயல்புத் தொடை என்பாங்க - இனி
உங்களால பா/கவிதை புனைய முடியும் தானே!

இஞ்சாருங்கோ - உங்கள்
யாழ்பாவாணனின் பா/கவிதை போன்ற கிறுக்கலை
கொஞ்சம் படித்துப் பாருங்களேன்...

மிச்சக் காசு கொடுக்க முடியாமைக்கு
மாற்று வழியாக
வேண்டாம் வேண்டாமென
இனிப்பை இடிக்கிறாங்க...
இதெல்லாம்
எப்ப இருந்து என்றால்
அந்தக் காலத்து
கலைஞர் கருணாநிதி ஆட்சியில் இருந்து
என்கிறாங்க,,,
ஈழத்தில இப்படி
இனிப்பை இடிக்கிற வழக்கம்
தொடங்கின காலத்தில
கருணாநிதி ஆட்சிக் காலச் செய்தி என
நாளேடு ஒன்றில் படித்த நினைவு!
இப்ப என்னவென்றால்
இனிப்பை இடிக்கிற வழக்கம் போய்
எங்கள் வயிற்றிலடிக்கிற கதை
தொடங்கிற்று...
சில்லறை இல்லை - அடுத்த
வருகையின் போது தரலாமென
சிலர் சுருட்டுறாங்க...
சில்லறை இல்லை என்றால்
மலடியைப் பிள்ளை பெற வைக்க ஏலுமே என்று
என் பெண்டாட்டியையும் அழவைச்சு
(எமக்குக் குழந்தைகள் இல்லை)
எங்கட வயிற்றிலடிப்பவங்க
பெருகிக் கிட்டே இருக்காங்க!
வணிக நிலையங்களில்
இனிப்பை இடிப்பாங்க என்றால்
தெருக்கோடியிலும் (தெருவெளி வணிகர்கள்) சரி
ஊர்திப்பயணங்களிலும் (நடத்துனர்கள்) சரி
சில்லறை இல்லை என்றெல்லோ
பகற் கொள்ளை அடிக்கிறாங்க!
ஈழத்தில... இந்தியாவில... உலகத்தில...
இது உலாவுவதாகத் தகவல்!

என்னங்கோ - உங்கள்
யாழ்பாவாணனின் கிறுக்கலைப் படித்தாச்சோ
இனி என்னங்க இழுபறி - யாழ்பாவாணனின்
பாவண்ணத்தைத் தோற்கடிக்கவாவது - உங்கள்
கைவண்ணங்களாலே பாப்புனைந்து வெளியிட்டு
எல்லோரையும் யாப்பறிந்து பாப்புனைய
விரும்ப (ஆசை) வைக்க முன்வாருங்களேன்!

18 கருத்துகள் :

  1. பதில்கள்
    1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்.
      மிக்க நன்றி.

      நீக்கு
  2. நினைப்பது நிறைவேறும்
    நித்திய தமிழ் உம்மோடு இருக்கையிலே!
    செந்தமிழ் தேன் கவிதை!
    தேனாறாய் பெருகட்டுமே!
    நட்புடன்,
    புதுவை வேலு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்.
      மிக்க நன்றி.

      நீக்கு
  3. தங்களின் தளத்திற்கு தற்போதுதான் வந்துள்ளேன். பா புனைவு இனிமை.

    தொடர்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்.
      மிக்க நன்றி.

      நீக்கு
  4. அருமையானகொரு பகிர்வு நன்றி நண்பரே...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்.
      மிக்க நன்றி.

      நீக்கு
  5. ஏனுங்கோ ஒரு ரூபா திருடினா...தப்புங்கோ ... 66 கோடி திருடினா..அது திறமையுங்கோ.....--இதை நான் சொல்லவில்லைங்கோ... அய்யா....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கணக்குக்கு கணக்குக் காட்டி
      காசுக்கு காசு வெட்டி
      திருடினா..திறமையுங்கோ

      தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்.
      மிக்க நன்றி.

      நீக்கு
  6. அருமைப்பா விரைவில் தனிமரமும் முயற்ச்சிக்கின்றேன் ஐயா!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாழ்த்துகள்
      தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்.
      மிக்க நன்றி.

      நீக்கு
  7. “அஞ்சு கோடி பேர்,
    அஞ்சு கோடி தடவை.....சும்மா ஒரு கணக்கு போட்டு பார்த்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சிக்கல்
      கணக்கிலா? கணக்காளரிலா?
      அதைத் தான் - முதலில்
      கண்டுபிடிக்க வேண்டுமே!

      நீக்கு
  8. தங்கள் தளத்திற்கு வருவது இதுவே முதல் தடவையாகும். அருமையான பதிவு. எனது வலைப்பூவுக்கும் நேரம் கிடைக்கும் போது பார்வையிட்டு கருத்து சொல்லுங்கள். எனது பதிவு திருநெல்வேலி அல்வா !

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வரவு இனிய வரவாகட்டும்
      திருநெல்வேலி அல்வா! சாப்பிட வருவேன்

      தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்.
      மிக்க நன்றி.

      நீக்கு
  9. முதலில் நன்றிகள் பல. இப்போதுதான் வருகின்றோம் நீண்ட நாள் கழித்து...எங்கள் தள இடுகையைச் சுட்டிக் காட்டி தாங்கள் பா அமைத்ததை நினைத்து மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது நண்பரே!

    அருமையாகப் புனைந்துள்ளீர்கள். எங்களுக்கு கவிதை என்பது கொஞ்சம் எட்டா கனி. முயற்சி செய்கின்றோம்....அருமை...

    மிக்க நன்றிகள் பல மீண்டும்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஒரு நல்ல கவிதை
      கவிஞரின் பாப்புனையும் ஆற்றலை விட - அவர்
      தேர்ந்தெடுக்கும் பாடுபொருளில் தான்
      தங்கியிருக்கிறது! - ஆகையால்
      தங்கள் தளப் பதிவு
      கவிஞர்களுக்கு
      சிறந்த பாடுபொருளைத் தந்திருக்கிறதே!
      அதனால்,
      பாப்புனைய விரும்புவோர் பயனீட்ட
      அறிமுகம் செய்திருக்கிறேன்!

      நீக்கு

வருக அறிஞர்களே! தருக தங்கள் கருத்துகளையே!