Translate Tamil to any languages. |
சனி, 30 மே, 2015
கண்கள் பேசும் மொழி கூட...
கண்களால் காண்க
கண்டதில் நல்லது எதுவென்றே
கண்களால் கண்ணுற்ற
கண்டதெல்லாம் வழி காட்டுமே
கண்களால் வழிந்தோடும்
கண்ணீரும் கூட மருந்தாகுமே
கண்களால் இணையர்கள் தேடுவதும்
கண்கள் தான் தாம் களிப்புறவே
கண்கள் வழியே தான்
கண்ணுற்ற காதலர்களும் - அவரவர்
உள்ளத்தில் நுழைகின்றனரே
உள்ளதைச் சொன்னால் - உண்மையில்
கண்களின் பெறுமதியை எவரறிவார்?
அறிவார் தம் நலன் மட்டுமே
அறியார் கண்ணற்றவர் நிலையையே
பாட்டெழுதும் பாவலரின்
பாட்டின் பாடுபொருளும் கண்ணாகுமே
ஒன்பது வாசல் எம்முடலில்
ஒன்றாம் வாசல் கண்ணாகுமே
கண்கள் பேசும் மொழி கூட
கண்கள் தான் அறியுமாமே
கண்கள் வழியே நுழைந்தவை தான்
எண்ணங்கள் தோன்றத் துணையாமே
எண்ணிப் பார்த்தீர்களா
கண்ணில்லாதவன் எண்ணத்தில்
எண்ணற்ற துயரப் புண்களையே?
கண்ணொன்றைக் கொடுங்கள்
கண்ணுள்ளவன் அடைந்த மகிழ்வை
கண்ணின்றித் தானடைந்த துயரை
எண்ணி எண்ணி எடுத்துச் சொல்வரே!
நல்ல கண்ணுள்ளவர்களே - நீங்கள்
மெல்லச் சாவடைந்தால் - உங்கள்
கண்களை உரித்தே - பிறர்
கண்ணில் ஒட்டிக்கொள்ள உதவுங்களேன்
கண்ணின்றித் துயருற்றவர்
கண்ணுள்ளவன் அடைந்த மகிழ்வை அடையத்தானே!
குறிப்பு:- கண் மாற்றுச் சிகிச்சை என்பது சாவடைந்து சில மணி நேரத்துக்குள்ளே சாவடைந்தவர் கண்ணில் விழிவெண்படலத்தை உரித்து பார்வை இழந்தவர் கண்ணில் ஒட்டிவிடுதலே! கண் கொடை(தானம்) என்பது ஒருவர் சாவடைந்ததும் தனது கண்ணை பிறருக்கு இவ்வாறு வழங்க உடன்படுதல் ஆகும்.
லேபிள்கள்:
2-எளிமையான (புதுப்)பாக்கள்
ஈழத்து (வட இலங்கை), யாழ்ப்பாணம், மாதகலூரில் பிறந்த தபாலதிபர் காசிராசலிங்கம் அவர்களுக்கும் பரமேஸ்வரி அவர்களுக்கும் நடந்தேறிய திருமணத்தின் விளைவாக ஜீவலிங்கம் ஆகிய நான் 07/10/1969 அன்று பிறந்தேன். இலங்கை அரச பாடத் திட்டப்படி க.பொ.த. உயர்தர வகுப்பு வரை படித்திருக்கிறேன். கணினி நுட்பங்கள், இதழியல், உளவியல், மருத்துவமனை முகாமைத்துவம் எனப் படித்துமுள்ளேன். நான், யாழ்பாவாணன் என்ற பெயரில் இலக்கிய மற்றும் இணையத் தள உலகில் உலா வருகின்றேன்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு
(
Atom
)
அருமை அருமை ஐயா...
பதிலளிநீக்குதங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
நீக்குமிக்க நன்றி.
கண்களைக்குறித்த கவி அருமை நண்பரே...
பதிலளிநீக்குதங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
நீக்குமிக்க நன்றி.
ஓ!..சிறப்பு!...சிறப்பு...
பதிலளிநீக்குதங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
நீக்குமிக்க நன்றி.
நன்மை பயக்கும் நல் கவிதை வடித்தீர்...
பதிலளிநீக்குதங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
நீக்குமிக்க நன்றி.
தங்களின் கவி அருமை. அதனின் சொன்ன கருத்து அருமை. வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குதங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
நீக்குமிக்க நன்றி.
அந்தக் கண்கள் அதே கண்கள்தான்... கவிதை அருமை......
பதிலளிநீக்குதங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
நீக்குமிக்க நன்றி.
வணக்கம் சகோதரரே.
பதிலளிநீக்குதங்களின் கண்கள் கவிதை அருமை. ௬டவே கண் தானத்தின் சிறப்பை பற்றிய பகிர்வும் அருமை. ஒரு மனிதனின் வாழ்வில்தான் கண்கள் எவ்வளவு முக்கியம். எடுத்துரைத்தமைக்கு நன்றிகள்.
என் தளம் வந்து கருத்துக்கள் ௬றுவதற்கும் மனமார்ந்த நன்றிகள்.
நன்றியுடன்,
கமலா ஹரிஹரன்.
தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
நீக்குமிக்க நன்றி.
அன்பு வலைப்பூ நண்பரே!
பதிலளிநீக்குநல்வணக்கம்!
இன்று 08/06/2015 அன்று முதலாம் ஆண்டினை நிறைவுசெய்யும் "குழலின்னிசை"க்கு
தங்களது அன்பான ஆதரவும், கருத்தும், அளித்து அகம் மகிழ்வுற செய்ய வேண்டுகிறேன்.
முதலாம் ஆண்டு பிறந்த நாள் அழைப்பிதழ்
அன்பின் இனிய வலைப் பூ உறவுகளே!
"குழலின்னிசை" என்னும் இந்த வலைப் பூ!
உங்களது மனம் என்னும் தோட்டத்தில் மலர்ந்த மகிழ்ச்சிகரமான நாள் இன்று.
ஆம்!
கடந்த ஆண்டு இதே தினத்தன்றுதான் 08/06/2014, "குழலின்னிசை" வலைப்பூ மலர்ந்தது.
http://kuzhalinnisai.blogspot.com/2015/06/blog-post_7.html#comment-form
சரியாக ஓராண்டு நிறைவு பெற்று, இரண்டாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கும் இந்த வலைப்பூவானது, நல் இசையை நாள்தோறும் இசைத்து, அனைவருக்கும் நலம் பயக்குவதற்கு, உள்ளன்போடு உங்களது நல்லாசியைத்தாருங்கள்.
தங்களது வருகையை எதிர் நோக்கும் வலைப்பூ நண்பர்கள்.
மற்றும்!
நட்புடன்,
புதுவை வேலு
www.kuzhalinnisai.blogspot.com
தமிழை விரும்பும் ஒவ்வொருவரையும்
நீக்குதமிழைப் பரப்பும் ஒவ்வொருவரையும்
தமிழே அடையாளப்படுத்தும் - என்னையும்
குழல் இன்னிசை! ஈர்த்தது என்றால் - அந்த
தமிழை தாங்கள் வெளிப்படுத்தும் அழகு தான்!
தொடருங்கள் உங்கள் பணி - நம்
ஆதரவு என்றும் உங்களுக்கு உண்டு!
வலை வழி தமிழ் பேணும்
தங்களுக்கு எனது வாழ்த்துகள்!
அருமை அருமையான கண்ணான கண்ணின் மணியான வரிகள்!
பதிலளிநீக்குதங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
நீக்குமிக்க நன்றி.