Translate Tamil to any languages. |
செவ்வாய், 6 ஜனவரி, 2015
தைப்பொங்கலா? சிறுகதைப் போட்டியா?
தைப்பொங்கலா? சிறுகதைப் போட்டியா? என்பது பதிவர்கள் பக்கமாய்க் கிளம்பும் கேள்விக்கணை இதுதான். உழவர் பெருநாள், ஞாயிற்றுப் பொங்கள், தமிழர் புத்தாண்டு எனப் பல சிறப்புக்களைக் கொண்ட தைப்பொங்கலே முதல் தேவை! அப்படியெனின் சிறுகதைப் போட்டியை என்ன செய்யலாம்? இரண்டாம் இடத்தில் வைக்கலாம். ஆயினும் முதலாம் இடத்துத் தைப்பொங்கலைப் பற்றி உலகம் எங்கும் படிப்பிக்க இரண்டாம் இடத்துச் சிறுகதைப் போட்டி உதவலாம் என்பதை; எவரும் மறக்கமாட்டார்கள் என்பதை நான் நம்புகின்றேன். ரூபன் குழுவினரின் பெரிய மதியுரைஞர்கள் பண்டிகை நாட்களில் போட்டி நடாத்துவதை இப்படித்தான் எண்ணிச் செயலில் இறங்கி இருப்பார்கள் என நம்புகின்றேன்.
உங்க நாட்டு, உங்க ஊரு, உங்க வீட்டு, சிலருக்கு காதலன்/ காதலி வீட்டுப் பொங்கல் பற்றி இழையோடி அப்பண்டிகை நாளில் நள்ளிரவின் பின் ஞாயிற்றுக் கதிர்கள் முற்றத்தில் வந்து விழ பொங்கல் பானை பொங்கி வழியும் வரை நடந்ததென்ன? அதனை ஒரு சிறுகதை ஆக்கி அனுப்பலாமே! 2015 பொங்கல் நாள் என்றதும் கடந்த காலப் பொங்கல் நாட்களில் நிகழ்ந்த சுவையான செய்திகளையும் சிறுகதை ஆக்கி அனுப்பலாமே!
என்னங்க சிறுகதைப் போட்டிக்கு நீங்கள் தயாராகி விட்டீர்களா? அப்ப நான், நீங்கள் வெற்றி பெற வாழ்த்துகிறேன். ஆனால் எனக்கு ஒரு உதவி செய்யுங்கள் உங்கள் கூகிள்+, லிங்டின், டுவிட்டர், பேஸ்புக் சுவர் பகுதிகளில் கீழ்வரும் இணைப்பை அறிமுகம் செய்து உதவுங்கள்.
http://www.trtamilkkavithaikal.com/2015/01/31.html
அல்லது உங்கள் வலைப்பூக்களில் இடது/வலது பட்டை விட்ஜற் ஆக கீழ்வரும் இணைப்பைப் புகுத்தி விடுங்கள்.
<a target="_blank" href="http://www.trtamilkkavithaikal.com/2015/01/31.html" title="உலகம் தழுவிய மாபெரும் சிறுகதைப் போட்டி">
<img src="http://yarlpavanan.files.wordpress.com/2015/01/2015-01-01_074945.jpg" height="200" width="200" alt="உலகம் தழுவிய மாபெரும் சிறுகதைப் போட்டி"></img>
</a>
“எப்படி இருப்பினும் எனக்குச் சிறுகதை எழுத வராது” என்று பின்னடிப்பவர்களும் இருக்கிறார்கள் பாருங்கோ! அவர்கள் சின்னப் பொடியன் யாழ்ப்பாவாணன் எழுதிய கீழ்வரும் பதிவுகளைப் படித்த பின்னர் தானும் இப்போட்டியில் கலந்து கொள்ளலாமே!
கதைகள் புனையலாம் வாருங்கள்! (http://wp.me/pTOfc-aP)
என்னங்க நீங்கள் சிறுகதை எழுதக் கூடியவரா? “சிறுகதை எழுதுவது எப்படி?” என எதாவது பதிவு செய்திருக்கிறீர்களா? இந்தச் சிறுகதைப் போட்டியில் ஆகக் குறைந்தது நூறு பதிவர்களைப் போட்டியில் இணைக்கவல்ல பதிவுகளை உங்கள் வலைப்பூக்களில் ஆக்கி உதவுங்கள். அதற்குக் கீழ்வரும் இணைப்பைப் பாவிக்கலாம். இதனையே எனது பதிவின் தொடக்கத்தில் இட்டேன்.
<a target="_blank" href="http://www.trtamilkkavithaikal.com/2015/01/31.html" title="உலகம் தழுவிய மாபெரும் சிறுகதைப் போட்டி">
<img src="http://yarlpavanan.files.wordpress.com/2015/01/2015-01-01_074945.jpg" height="480" width="640" alt="உலகம் தழுவிய மாபெரும் சிறுகதைப் போட்டி"></img>
</a>
தைப்பொங்கல் நாளை முன்னிட்டு நடைபெறும் சிறுகதைப் போட்டியில் அதிகமானோர் பங்குபற்ற ஒவ்வொருவரும் உதவுங்கள். போட்டியில் சிறப்படைய எல்லோரும் பங்குபற்றலாம். இப்போட்டியின் வெற்றியே அடுத்து வரும் போட்டிகளாக நகைச்சுவைப் போட்டி, நாடகப் போட்டி, பாட்டுப் போட்டி, மரபுக் கவிதையாக அந்தாதிப் போட்டி எனப் பல நடாத்த உதவுமென நம்புகிறேன்.
லேபிள்கள்:
7-போட்டிகளும் பங்குபற்றுவோரும்
ஈழத்து (வட இலங்கை), யாழ்ப்பாணம், மாதகலூரில் பிறந்த தபாலதிபர் காசிராசலிங்கம் அவர்களுக்கும் பரமேஸ்வரி அவர்களுக்கும் நடந்தேறிய திருமணத்தின் விளைவாக ஜீவலிங்கம் ஆகிய நான் 07/10/1969 அன்று பிறந்தேன். இலங்கை அரச பாடத் திட்டப்படி க.பொ.த. உயர்தர வகுப்பு வரை படித்திருக்கிறேன். கணினி நுட்பங்கள், இதழியல், உளவியல், மருத்துவமனை முகாமைத்துவம் எனப் படித்துமுள்ளேன். நான், யாழ்பாவாணன் என்ற பெயரில் இலக்கிய மற்றும் இணையத் தள உலகில் உலா வருகின்றேன்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு
(
Atom
)
தரணி போற்றும் தமிழ்த் தொண்டு
பதிலளிநீக்குசிறக்க நல் வாழ்த்துக்கள் அய்யா!
அரிய முயற்சி ஆகாய வளர்ச்சி காணட்டும்!
நன்றியுடன்,
புதுவை வேலு
உலகெங்கும் தமிழைப் பரப்பிப் பேண உதவுமென இப்போட்டிகளுக்கு ஒத்துழைப்பது என் எள்ளளவு முயற்சி.
நீக்குதங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
மிக்க நன்றி.
கலந்துக்க முயற்சிக்கிறேன்...
பதிலளிநீக்குநல்ல முயற்சி... வாழ்த்துக்கள்.
உலகெங்கும் தமிழைப் பரப்பிப் பேண உதவுமென இப்போட்டிகளுக்கு ஒத்துழைப்பது என் எள்ளளவு முயற்சி.
நீக்குதங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
மிக்க நன்றி.
தங்களது முயற்சிக்கு எமது வாழ்த்துகளும்.......
பதிலளிநீக்குஉலகெங்கும் தமிழைப் பரப்பிப் பேண உதவுமென இப்போட்டிகளுக்கு ஒத்துழைப்பது என் எள்ளளவு முயற்சி.
நீக்குதங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
மிக்க நன்றி.
போட்டிகளில் கலந்துகொண்டு
பதிலளிநீக்குபரிசுகளை பெறும் நோக்கிலாவது
தமிழனின் தமிழார்வம் வளரட்டும்
உங்கள் முயற்சி
வெற்றி பெற வாழ்த்துக்கள்
தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
நீக்குமிக்க நன்றி.
வணக்கம்
பதிலளிநீக்குஅண்ணா.
அருமையான விளம்பரம் மட்டும்மல்ல சிறப்பான முறையில் கருத்து சொல்லியுள்ளீர்கள் வாழ்க தமிழ் வாழர்க தமிழ்த்தொண்டு.. பகிர்வுக்கு நன்றி த.ம1
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
நீக்குமிக்க நன்றி.
போட்டு நடத்தி தமிழ் வளர்க்கும் தங்களின் ஆர்வத்திற்கு வாழ்த்துக்கள்! கலந்து கொள்பவர்களுக்கும் வாழ்த்துக்கள்! தொடரவும்!
பதிலளிநீக்குதங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
நீக்குமிக்க நன்றி.
போட்டிகள் சிறக்க வாழ்த்துக்கள். !தங்கள் அனைவரது ஆர்வத்திற்கும் அளப்பரிய சேவைக்கும் வாழ்த்துக்கள் ! சகோ மேலும் மேலும் சிறக்கட்டும் தமிழ் மேன்மையுறட்டும்.
பதிலளிநீக்குதங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
நீக்குமிக்க நன்றி.
பொங்கலா...போட்டியா...? யோசிக்கிறேன்...
பதிலளிநீக்குதங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
நீக்குமிக்க நன்றி.
சிறந்த விளம்பரம்...
பதிலளிநீக்குகண்டிப்பாக செய்கிறேன் ....
தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
நீக்குமிக்க நன்றி.
சிறப்பாக அமையும்...
பதிலளிநீக்குதங்கள் ஒத்துழைப்பே எமது பலம்.
நீக்குமிக்க நன்றி.
This comment has been removed by the author.
பதிலளிநீக்குமதிப்புக்குரிய விசுAwesome அவர்களே!
நீக்குதைப்பொங்கலா? சிறுகதைப் போட்டியா?" என்ற தலைப்பில் தாம் நடத்தும் இந்த போட்டி மாபெரும் வெற்றி பெற என் வாழ்த்துக்கள்.
என்கிறீர்கள்.
மிக்க நன்றி
தங்கள் மதியுரையை ரூபன் குழுவினரின் பார்வைக்கு அனுப்பிவிட்டேன்.
தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
மிக்க நன்றி.
இன்னும் பொதுக்குழு கூட்டப்படவில்லை என்ற தகவல் தெரிவிக்கப்படுகிறது.
பதிலளிநீக்குபொதுக்குழு கூட்டப்பட்டால் முடிவு வெளிவந்துவிடுமே!
நீக்குவாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குமிக்க நன்றி.
நீக்குபோட்டியில் கலந்து கொள்ளும் எல்லோருக்கும் எனது வாழ்த்துகள்.
பதிலளிநீக்குதங்களுக்கும் தங்கள் இல்லத்தாருக்கும் இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குதைப்பொங்கல் வாழ்த்துகள்
நீக்குவணக்கம் சகோதரரே!
பதிலளிநீக்குதங்களின் தமிழ் வளர்க்கும் முயற்சி வெற்றியடைய ஆண்டவனை பிரார்த்திக்கிறேன்.
நன்றி.!
தங்களுக்கும், தங்கள் உற்றார், உறவினருக்கும், என் இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்….
நட்புடன்,
கமலா ஹரிஹரன்.
தைப்பொங்கல் வாழ்த்துகள்
நீக்குதைமகள் வருகை புரிந்திடல் வேண்டும்
பதிலளிநீக்குகைகளைக் கூப்பி வணங்கிடல் வேண்டும்
தையலை உயர்வு செய்திடல் வேண்டும்
பைந்தமிழ் பூமி செழித்திடல் வேண்டும்
தங்களுக்கும் தங்களது குடும்பத்தினருக்கும்
எனது மனம் நிறைந்த
இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.
புதுவை வேலு
www.kuzhalinnisai.blogspot.fr
தைப்பொங்கல் வாழ்த்துகள்
நீக்கு