நண்பர்கள் பலர்
கருத்துரைத்த போதும்
பதில்க் கருத்தைக் காணாமையால்
"பதில் கருத்துக்கு அஞ்சி
பதிவர் ஓடித் தலைமறைவு" என
நாளேடு ஒன்றில்
செய்தி போடவேண்டி வருகிறதே!
உண்மையும் தான்
திறனாய்வாளரின் கேள்விக்கு
பதிலளிக்கத் தவறினால்
உங்கள் மீது
வாசகர் மதிப்பு வைக்கமாட்டார்களே!
நண்பர்களே!
உங்கள் பதிவுக்கு
பிறர் கருத்துத் தெரிவித்தால்
உடனுக்குடன்
பதில் கருத்தைத் தெரிவியுங்களேன்!
ஒவ்வொருவரும்
தங்கள் பதிவினைப் பதிந்த பின்
ஒதுங்கி இருக்க முடியாதே...
ஒரு பதிவு
எப்போது நிறைவடைகிறது?
அதற்கான
எதிற்கணைகளுக்குப் பதில்
வழங்கப்பட்டிருந்தால் மட்டுமே!
பதிற்கணைகளுக்குப் பொறுப்புக்கூற
அஞ்சும் பதிவர்களே
எப்படித்தான்
உங்கள் எழுதுகோல்
உங்களுக்கு ஒத்துழைக்கிறதோ
எனக்கும் தான் தெரியவில்லையே!
நானொரு பதிவினைப் பதிந்தால்
பதிந்த பதிவுக்குக் கிட்டும்
பதில்களையே பார்த்து
பதில் கூறி மகிழ்வடைவதனாலேயே
எனக்கும்
என் எழுதுகோல் ஒத்துழைக்கிறதே!
(இதழியல் நோக்கில் "எழுதிய எழுத்துக்கு எழுதியவரே பதில் கூற வேண்டும்" என்பதை வெளிப்படுத்தவே இப்பதிவினை மேற்கொண்டேன்.)
அருமையான தகவல் சொல்லாடல் நண்பரே.....
பதிலளிநீக்குதங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
நீக்குமிக்க நன்றி.
சரி தான்...
பதிலளிநீக்கு
நீக்குதங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
மிக்க நன்றி.
ஆஹா ! அண்ணன யாரோ சீண்டிவிட்டார்கள் போலிருக்கிறதே !!!!
பதிலளிநீக்குசிறந்த பதிவராயின் தனது கருத்துக்கு பதில் தருமாறு நண்பர் ஒருவர் கேட்டார்.
நீக்குஅப்ப தான்...
நான் சிக்கிக்கொண்டேன்.
சிக்கிக்கொண்ட வேளை எண்ணிப்பார்த்தேன்.
இப்படி எழுத முடிந்தது.
என்னைச் சீண்டிவிட்டவர்கள் எல்லோருக்கும் நன்றி.
தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
மிக்க நன்றி.
பதிலிட வேண்டியவைகளுக்கு மட்டும் பதில் இடலாம் என்பது என் கருத்து!
பதிலளிநீக்கு
நீக்குஉண்மை தான்
தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
மிக்க நன்றி.
நல்ல பதிவுக் கருத்து! நண்பரெ! ஆனால் சில சமயம் நேரம் கிடைக்காமல் போய்விடுவதால் தற்போது பதில் இட முடியாமல் போய்விடுகின்ரது. இப்போது பதில்கள் கொடுத்துக் கொண்டிருக்கின்றோம்....
பதிலளிநீக்குமிக்க நன்றி!
தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
நீக்குமிக்க நன்றி.