Translate Tamil to any languages.

வியாழன், 15 ஜனவரி, 2015

தைப்பொங்கல் குறித்துப் பாப்புனைக

பாப்புனைதலும் சரி
கவிதை ஆக்குதலும் சரி
எம் கற்பனைக்கேற்ப எழுதிவிட்டால்
பா/ கவிதை ஆகாதே!
நூலைப் போல சேலை
தாயைப் போல மோளை
பாலைப் போல வெள்ளை
கடுகைப் போல காரம்
என்றடுக்கினால் போல
பா/ கவிதை ஆகாதே!
"பாலைப் போல
வெள்ளைச் சேலை உடுத்த அம்மா
குந்தியிருக்கக் கற கறவென
கிழிஞ்சு போகத் தானே தெரிந்தது
நூலைப் போல தானே
சேலை இருக்குமென்றே!" என்றால்
பா/ கவிதை போலத் தெரிகிறதே!
"தாயைப் போல
மோளைப் பார்த்தால் அழகி - அவளோ
சின்னப் பிள்ளை என்றாலும்
கடுகைப் போல காரமாய் - தன்
அறிவை வெளிப்படுத்தினாளே! என்றால்
பா/ கவிதை போலத் தெரிகிறதே!
தைப்பொங்கல்
குறித்துப் பாப்புனைக என்றதும்
"வளமுள்ளவர் வீடுகள் தோறும்
பொங்கல், படையல் என்றிருக்க
வீடு வீடாகச் சென்று
வளமற்றவர் கையேந்தி நிற்பதையும்
பகலவன் பார்ப்பாரே!" என்றால்
பா/ கவிதை போலத் தெரிந்தாலும்
"பொங்கின புக்கையை (பொங்கல்) விட
தண்டின புக்கையே (பொங்கல்) மேல்..." என்ற
தமிழ் முதுமொழியே நினைவிற்கு வருகிறதே!
பாப்புனைய விரும்பும் உறவுகளே
தைப்பொங்கல் குறித்துப் பாப்புனைய
எழுத்து, அசை, சீர், தளை, அடி, தொடை,
உவமை, எதுகை, மோனை என
எல்லாம் தெரிந்தாலும் கூட
பா/ கவிதை புனையும் திறன் வேண்டுமே!
அதற்குத் தானே
சித்திரமும் கைப்பழக்கம்
செந்தமிழும் நாப்பழக்கம் என்பார்களே
அது போலத் தானே
ஏற்றதொரு பா/ கவிதை புனைய
தேடலும் பயிற்சியும் வேண்டுமே!





14 கருத்துகள் :

  1. வாழ்த்துக்களோடு கவிதைத் திறன்
    வளர்க்கும் வகை சொல்லிப் போனவிதம் இரசித்தோம்

    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    இனிய பொங்கல் திரு நாள் நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  2. நன்றாகவே சொன்னீர்கள். ஆனைக்கு அர்ரம் என்றால் குதிரைக்கு குர்ரம் என்று கவிதை பாடும் இந்நாளில் கவிதைக்கு ஓர் இலக்கணம் எளிமையாகச் சொன்னீர்கள்.

    கவிஞருக்கு, எனது உளங்கனிந்த பொங்கல் நல் வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  3. தங்களுக்கும், குடும்பத்தாருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  4. நன்று! நலமா!

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  5. பொங்கல் திருநாளில் நீங்கள் கற்று தந்த பாடத்தை மறக்க முடியாது !

    பதிலளிநீக்கு
  6. நல்லதொரு பாடம் நண்பரே,,,,, நன்றி, வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு

வருக அறிஞர்களே! தருக தங்கள் கருத்துகளையே!