Translate Tamil to any languages.

சனி, 8 பிப்ரவரி, 2014

என்னை உரிந்து காட்டியும்...


ஒவ்வொரு ஆளுக்கும்
ஒவ்வொரு குறையிருக்கும்
ஒவ்வொரு ஆளும்
எந்தவொரு தவறையும் செய்திருக்கலாம்
என் குறையையும் என் தவறையும்
பொறுக்கித் தொகுத்து
பரப்புகிற எதிரிக்குத் தெரியாதா
இந்த உண்மை!

என்னை உரிந்து காட்டியும்
பார்த்தவர்கள் உணருவது
என்னுடல்
ஆண்டவன் படைப்பென்றும்
அறியாமல் தெரியாமல்
நான் விட்ட தவறுக்கு
ஆண்டவன் மன்னிக்கையில்
எதிரியால் மன்னிக்க முடியாதா!

நானொரு கெட்டவனென்று
ஒதுக்கியோரை ஒதுக்கியும்
நானொரு முட்டாளென்று
முரண்பட்டோரைப் பொருட்படுத்தாமலும்
நானொரு ஊனமென்று
கழித்துவிட்டோரைக் கழித்தும்
நானொரு அறிவிலியென்று
என் சொற் கேளாதோரை விட்டு நீங்கியும்
தன் நம்பிக்கையோடு வாழ்ந்தபடியால்
காலம் - இன்று
எனக்குச் சான்று கூறுகிறதே!

என்னை உரிந்து காட்டியும்
எனது உண்மையைத் தான்
பார்க்கலாம் என்பது
காலத்தின் சான்றென்றால்
நண்பா
என் நிலைமை 
உனக்கு வந்தாலும் சோர்ந்து விடாதே
மக்கள் எப்போதும்
எங்கள்
நல்ல பக்கத்தையே பார்ப்பதால்
கெட்டவர்களென எம்மை
எவரும் அழகுபடுத்தினாலும்
எமக்குத் தீங்கில்லைப் பாரும்!


பதிவர்களுக்கான செய்தி : http://wp.me/pTOfc-9c என்ற இணைப்பைச் சொடுக்கிப் பாருங்கள்.

2 கருத்துகள் :

  1. >> தன் நம்பிக்கையோடு வாழ்ந்தபடியால்
    காலம் - இன்று
    எனக்குச் சான்று கூறுகிறதே!<<
    சிந்தனையில் தேக்கி முன்னேற வழிகூறும் வரிகள்! தொடர்க உங்கள் பணி.

    பதிலளிநீக்கு

வருக அறிஞர்களே! தருக தங்கள் கருத்துகளையே!