Translate Tamil to any languages. |
ஞாயிறு, 23 பிப்ரவரி, 2014
எதுகை, மோனை விளையாட்டு
"முந்தி முந்தி முன்னேறிப் பார்" என
எழுதப் போகையில தெரியுது பார்
"முந்தி முந்தி" என்ற சீர்களில்
முதலெழுத்துப் பொருந்தி வருவதே
மோனையாம் என்றெழுதப் பழகு!
"கத்திக் கத்திப் படித்துப் பார்" என
எழுதப் போகையில தெரியுது பார்
"கத்திக் கத்திப்" என்ற சீர்களில்
ஈராமெழுத்துப் பொருந்தி வருவதே
எதுகையாம் என்றெழுதப் பழகு!
"பாலைப் போல வெள்ளை" என
"நூலைப் போல சேலை" என
எழுதப் போகையில தெரியுது பார்
வெள்ளைக்குப் பாலையும் ஒப்பிட்டு
சேலைக்கு நூலையும் ஒப்பிட்டு
அழகு பார்ப்பதே உவமையாம்!
எதுகை, மோனை, உவமை எல்லாம்
புதுக் கவிதை எழுதும் எல்லோரும்
கற்றுக்கொண்டால் வெற்றுக் கவிதை
எழுதும் காலம் இனிக் கிட்டாதே!
மோனைக்கு எடுத்துக்காட்டாக
"நாணால் உயிரைத் துறப்பர் உயிர்ப்பொருட்டால்
நாண்துறவார் நாணாள் பவர்." என்ற
வள்ளுவர் ஆக்கிய குறளில்
அடியிரண்டிலும் முதற்சீரைப் பாரும்
'நா' என்ற எழுத்து ஒன்றியிருக்கே!
எதுகைக்கு எடுத்துக்காட்டாக
"பணியுமாம் என்றும் பெருமை சிறுமை
அணியுமாம் தன்னை வியந்து." என்ற
வள்ளுவர் ஆக்கிய குறளில்
அடியிரண்டிலும் முதற்சீரைப் பாரும்
'ணி' என்ற எழுத்து ஒன்றியிருக்கே!
உவமைக்கு எடுத்துக்காட்டாக
"தொட்டனைத்து ஊறும் மணற்கேணி
மாந்தர்க்கு கற்றெனத் தூறும் அறிவு" என்ற
ஈரடிப் பாவரிகளைப் படித்தால் புரியும்
"மணற்கேணியானது
எவ்வளவு ஆழமாகக் கிண்டுகிறோமோ
அவ்வளவுக்கவ்வளவு நீர் சுரக்கும்.
அதே போல மனிதர்
எவ்வளவுகெவ்வளவு கற்கிறார்களோ
அவ்வளவுக்கவ்வளவு
அவர்களது அறிவு பெருகும்." என்றொரு
உவமை விளக்கத்தையும் புரிந்திடுவீரென
தளமொன்றில் பொறுக்கித் தந்தேனே!
(சான்று: http://ta.wikipedia.org/s/9or)
உவமை என்று புளிக்கும் கல்வியை
நான் பொறுக்கிச் சொல்வதை விட
"தேசிப் பழத்தழகி
தேங்காய் முலையழகி
பாசிப் பழத்தழகி
பக்கத்தில் நான் வந்திடுவேன்." என்ற
நாடறிந்த நாட்டார் பாவரிகளைப் படி
உவமையறி பாபுனையப் புறப்படு!
உவமையறிந்தால் பாபுனையப் போதுமா?
கொஞ்சம் எதுகை, மோனையோடு விளையாடு
கொஞ்சம் எதுகை, மோனையைப் படிக்க
"ஒரே எழுத்து
ஒன்றுக்கு ஒன்று ஒத்து வரலாம்
ஒரே இன எழுத்துக்கள்
ஒன்றுக்கு ஒன்று ஒத்து வரலாம்" என்பது
அடிப்படை எண்ணக்கரு என்பேன்!
எதுகை, மோனையோடு விளையாடத் தேவை
எழுத்துகள் பற்றிய தெளிவே - அவை
"அ, ஆ, இ, ஔ என்பனவும்
இ, ஈ, எ, ஏ, யா என்பனவும்
உ, ஊ, ஒ, ஓ என்பனவும்
உயிர்களில் இன எழுத்துகளாம்
ஞ், ந் என்பனவும்
ம், வ் என்பனவும்
த், ச் என்பனவும்
மெய்களில் இன எழுத்துகளாம்" என
வலைத் தளமொன்றில் படித்தேன்!
பாபுனைய விரும்புவோர் எல்லோரும்
எழுத்தறிந்து இடமறிந்து சீரமைத்து
எதுகை, மோனை, அடி, தொடையாக்கி
பாபுனையச் சிறு குறிப்பைத் தந்தேன்
தமிழை வாழ்த்திப் பாபுனையுங்களேன்!
லேபிள்கள்:
5-பா புனைய விரும்புங்கள்
ஈழத்து (வட இலங்கை), யாழ்ப்பாணம், மாதகலூரில் பிறந்த தபாலதிபர் காசிராசலிங்கம் அவர்களுக்கும் பரமேஸ்வரி அவர்களுக்கும் நடந்தேறிய திருமணத்தின் விளைவாக ஜீவலிங்கம் ஆகிய நான் 07/10/1969 அன்று பிறந்தேன். இலங்கை அரச பாடத் திட்டப்படி க.பொ.த. உயர்தர வகுப்பு வரை படித்திருக்கிறேன். கணினி நுட்பங்கள், இதழியல், உளவியல், மருத்துவமனை முகாமைத்துவம் எனப் படித்துமுள்ளேன். நான், யாழ்பாவாணன் என்ற பெயரில் இலக்கிய மற்றும் இணையத் தள உலகில் உலா வருகின்றேன்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு
(
Atom
)
அழகாக விளக்கியுள்ளீர்கள் நன்றி! இவற்றை பின் பற்ற முயற்சிக்கிறேன்.
பதிலளிநீக்குதொடர வாழ்த்துக்கள்...!
தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி.
நீக்குவிரிவான விளக்கமான குறிப்பு... வாழ்த்துக்கள்...
பதிலளிநீக்குநன்றி ஐயா...
தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி.
நீக்குMikka nanry.
பதிலளிநீக்குVetha.Elanagthilakam.
தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி.
நீக்கு#பாபுனையச் சிறு குறிப்பைத் தந்தேன்#
பதிலளிநீக்குகோடு போட்டு விட்டீர்கள் ,நாங்க ரோடு போட்டுக்கிறோம் !
வோட்டு போடலாம் என்றால் இணைய வில்லையே ,ஆவணச் செய்யுங்கள் ..இது அனைவரின் பார்வைக்கும் செல்லவேண்டிய அருமையான பதிவு !
அடுத்த பதிவுடன் விசாகப்பெருமாளின் யாப்பிலக்கணம் தொடர் முடிவுற, எனது "யாப்பறிந்து பாபுனைய வாருங்கள்" தொடரின் அடுத்த பதிவைத் தரவுள்ளேன். எதுகை, மோனை பற்றி இன்னும் பல இருப்பதால் தான் "பாபுனையச் சிறு குறிப்பைத் தந்தேன்" என எழுதினேன். யாப்பிலக்கணம் பற்றிய அலசல் இன்னும் தொடரும். g+ இல் மட்டும் பகிர்ந்தால்(share) போதும். தங்கள் கருத்துகளை ஏற்றுக்கொண்டு விரைவில் தளத்தில் மாற்றம் செய்ய முயற்சி செய்கிறேன். தங்கள் மதியுரைக்கு மிக்க நன்றி.
நீக்குவணக்கம்
பதிலளிநீக்குஅண்ணா.
எல்லோருக்கும் பயன் பெறும் சிந்தனைத் துளிகள்களை மிக அருமையாக கவிதை வரியில் சொல்லி விதம் சிறப்பு வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
தங்கள் கருத்துக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி.
நீக்குவணக்கம்
பதிலளிநீக்குத.ம 1வது வாக்கு
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
தங்கள் 'த.ம 1வது வாக்கு' இட்டமைக்கு நன்றி.
நீக்குஎதுகை, மோனை விளக்க்ங்களும், உவமைக்கு மாதிரி குறள்களும் மிக அருமை. பக்ர்வுக்கு நன்றி.
பதிலளிநீக்குதங்கள் கருத்துக்கு மிக்க நன்றி.
நீக்குஇதுவரை இதுபோன்ற முயற்சியில் ஈடுபட்டதில்லை. தங்களின் பதிவு ஆர்வத்தைத் தந்துள்ளது. முயற்சிப்பேன். நன்றி.
பதிலளிநீக்குwww.drbjambulingam.blogspot.in
www.ponnibuddha.blogspot.in
தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
நீக்குமிக்க நன்றி.