Translate Tamil to any languages.

ஞாயிறு, 26 ஜனவரி, 2014

கவிதை என்றால் என்ன?

நான் கவிதை பற்றிக் கூற எனக்குப் பெரிய தகுதி கிடையாது. ஆனாலும் கதை, கட்டுரை, நகைச்சுவை, நாடகம், தொடர்கதை, நாடகத்தொடர்கதை என எழுதுவோரை விட கவிதை எழுதுவோரே அதிகம் என்பேன். அப்படி இருப்பினும் 'கவிதை என்றால் என்ன?' என்பதைத் தெரிந்துகொண்டு எழுதுவோரே வெற்றி பெறுகின்றனர். என் அறிவிக்கெட்டியவரை, எனக்குத் தெரிந்த சில குறிப்புகளை எனது கிறுக்கல் நடையிலே கீழே தருகின்றேன்.

உண்மையில்
'கவிதை என்றால் என்ன?' என்று
எனக்குள்ளே - நான்
கேட்டுப்பார்த்தேன்...
உணர்வு வரிகளால்
தொடுக்கப்பட்ட மாலை என்றே
எனக்குப்பட்டது!
அசை, சீர், அடி, தொடை,
எழுத்து, அணி, நடை,
பா, பாவினம் எனப் பல
யாப்பிலக்கணம் என
இருந்தாலும் கூட
இன்றைய இளசுகள்
மூ.மேத்தாவின் நடையிலே
(நானும் அப்படியே)
உணர்வுகளால் ஆன
அடிகளை அடுக்கி
படிக்கச் சுகமளிக்கும் படி
ஆக்குவது புதுக்கவிதையாம்!
எழுத்தெண்ணி அசை பிரித்து
சீராக்கித் தொடையமைத்து
அடி அமைத்துப் பாவாக்கல்
மரபுக் கவிதை என்றாலும் கூட
படித்தால் தான்
உள்ளத்தில் மாற்றத்தைத் தான்
தந்தால் போதுமென்று தான்
வாசிக்க எழும் ஓசையிலே
இசை எழுப்பும் அடிகளால்
ஆக்குவதும் கவிதையே!
பாலைப் போல வெள்ளை
நுலைப் போல சேலை
தாயைப் பொல வாலை
என்றெல்லோ ஒப்பிட்டு
'உமாவின் உள்ளம்' என
மோனை அமைய
'பெண்ணின் அழகு
கண்ணில் தெரியுமே' என
எதுகை அமைய
புதுக்கவிதையிலும்
இலக்கணம் இறுக்கியே
நல்ல கவிதை ஆக்கலாமே!

என்னங்க... கவிதை எழுதத் தொடங்குவோமா? அது தானுங்க சற்று இலக்கணம் சேர்த்து இறுக்கமான நல்ல கவிதை ஆக்குவோமே! பாபுனைய விரும்பும் உறவுகளே! இப்பதிவு உங்களுக்குப் பெரிதும் உதவுமென நம்புகிறேன்.

12 கருத்துகள் :

  1. பயனுள்ள பகிர்வு
    சொல்லிச் சென்றவிதம் அருமை
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  2. ஊக்கமளிக்கும் தங்களின் பதிவு அருமை

    பதிலளிநீக்கு
  3. குறிப்புகள் பலருக்கும் உதவும்... பயனுள்ள பகிர்வு ஐயா... விளக்கத்திற்கு நன்றி...

    வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  4. யாமறிந்த புலவரிலே யாரும் இப்படி கவிதை மூலமாய் கவிதை எழுத கற்றுத் தரவில்லை !

    பதிலளிநீக்கு
  5. பயனுள்ள பதிவு அய்யா... இலக்கணம் ஏதும் தேவையில்லை, உணர்சிகள் இருந்தால் போதும் என்று புதுக்கவிதையின் இலக்கணத்தை அழகாக கூறியுள்ளீர்கள்... நன்றி...

    பதிலளிநீக்கு

வருக அறிஞர்களே! தருக தங்கள் கருத்துகளையே!