Translate Tamil to any languages.

ஞாயிறு, 26 ஜனவரி, 2014

நல்ல நாடகமெல்லோ...

பெண்ணொருத்தி
என்னோடு கூடி வாழ்ந்துவிட்டதாய்
கதையளக்க - அது
நாடெங்கும் பரவ
திருமணப் பேச்சு நேரம்
இந்த வெடிகுண்டு
என்னைத் தாக்க
அன்பிற்கினிய தோழிகள்
அப்பெண்ணைத் துரத்த
அதெல்லாம்
மூன்றாம் அகவையிலென
அவளும்
அவிட்டுவிட்டிட்டு ஓட
நல்ல நாடகமாயிற்று!
என் காதலி தானென்று
உறவுக்காரப் பெண்
பொய்யுரைக்க
என் மீது
விருப்பம் கொண்ட
பல பெண்கள்
எனக்குத் தெரிவிக்காமலே
ஓடி ஒதுங்க
உறவில்லாத பெண்ணைக் கட்டி
நானும்
குடும்பம் நடாத்த
நல்ல நாடகமாயிற்று!
பெண் தவறு செய்தால்
வரலாறு
ஆண் தவறு செய்தால்
சிறு நிகழ்வென
என் வாழ்வில்
நடந்த நாடகங்கள் செல்ல
தமிழ், தமிழர் பற்றுச் சீமான்
மூன்றாண்டுகள்
தன்னைக் காதலித்துப் போட்டு
மணமுடிக்க மறுக்கிறாரென
பெண்ணொருத்தி
மூக்காலே சினுங்குவது
நல்ல நாடகமெல்லோ...
என்னோடு
படுக்கை விரித்துக் கிடந்தவரென்றோ
என்னைக் காதலித்தவரென்றோ
கூப்பாடு போடும் பெண்களே
நீங்களே
உங்களைக் கெட்டவளெனக் காட்டி
வரலாற்று அடையாளம் குத்தி
நாடகமாடுவதனால்
ஆண்களுக்குக் கேடு
கிட்டாதெனப் படியுங்கள்!

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக

வருக அறிஞர்களே! தருக தங்கள் கருத்துகளையே!