Translate Tamil to any languages.

சனி, 11 ஜனவரி, 2014

பொங்கல் பாட்டு


இன்றைக்குத் தைப்பொங்கல் என்றாச்சு!
என்றைக்கும் இனிக்கும் பொங்கலாச்சு!
                                                        (இன்றைக்கு)

மழை தந்தவனுக்குப் பொங்கலாச்சு!
நெல் விளைந்ததுமே பொங்கலாச்சு!
                                                        (மழை)
                                                        (இன்றைக்கு)

பொங்கல் நாளே எங்கள் நாளாச்சு
பொங்கல் நாளே உழவர் நாளாச்சு
பொங்கல் நாளே புத்தாண்டு ஆச்சு
பொங்கல் நாளே தமிழர் நன்நாளாச்சு
                                                         (இன்றைக்கு)
                        
எங்க தையே பிறந்த நாளாச்சு
நம்ம தமிழுக்கு முதல் நாளாச்சு
புத்தரிசி போட்டுப் பொங்கும் நாளாச்சு
ஞாயிற்றுக்கு நன்றி கூறும் நாளாச்சு
                                                          (இன்றைக்கு)
                        
முற்றம் மெழுகுவது அப்பா ஆச்சு
கோலம் போடுவது அம்மா ஆச்சு
பொங்கிப் படைப்பதும் இருவரும் ஆச்சு
ஞாயிற்று வரவோடு நிறைவும் ஆச்சு
                                                          (இன்றைக்கு)
                        
படைத்த பொங்கலை உண்பதும் நாமாச்சு
நன்நாளில் நல்லது செய்வதும் நாமாச்சு
உறவோடு அன்பைப் பகிருவதும் நாமாச்சு
நண்பரோடு சேர்ந்து மகிழ்வதும் நாமாச்சு
                                                           (இன்றைக்கு)

8 கருத்துகள் :

  1. ரசிக்க வைக்கும் பாட்டு ஐயா... இனிய தமிழர் திருநாள் வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் கருத்தை வரவேற்கிறேன்.
      தங்களுக்கும் இனிய தைப்பொங்கல் வாழ்த்துகள்!

      நீக்கு
  2. பாடல் மிக அருமை. தங்களுக்கு இனிய பொங்கல் வாழ்த்து!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் கருத்தை வரவேற்கிறேன்.
      தங்களுக்கும் இனிய தைப்பொங்கல் வாழ்த்துகள்!

      நீக்கு
  3. இனிய தைப்பொங்கல் வாழ்த்து.
    Vetha.Elangathilakam.

    பதிலளிநீக்கு
  4. எளிய இனிய சொற்கள்! கவிதை அருமை! இனிய தைப்பொங்கல் வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வரவும் வாழ்த்தும் மகிழ்வைத் தருகிறது.
      தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் இனிய தைப்பொங்கல் வாழ்த்துகள்.

      நீக்கு

வருக அறிஞர்களே! தருக தங்கள் கருத்துகளையே!