Translate Tamil to any languages.

புதன், 13 மார்ச், 2013

பாவலர்(கவிஞர்)களின் விளையாட்டு


மங்கலம், அமங்கலம் என்பது
தமிழ் கூறும் இலக்கணம்
என்னவென்று தெரியுமா?
ஒருவர் செத்துப் போனால்
'செத்துப் போனார்' என்றுரைக்காமலே
'காலமாகி விட்டார்' என்றழைப்பது
மங்கலம் ஆகுமாம்!
ஒருவர் திருமணம் செய்தால்
'நல்ல துணையைக் கைப்பிடித்தார்' என்றுரைக்காமலே
'சனியனைப் பிடிச்சிட்டார்
இனிச் சீரழியப் போகிறார்' என்றழைப்பது
அமங்கலம் ஆகுமாம்!
பாவலர்(கவிஞர்)களின் விளையாட்டோ
இவ்விரண்டையும் இணைத்தே
கூடற் சுவை(அங்கதச் சுவை)
சொட்டப் பாபுனைவதே!
ஒருவரை
புகழ்வது போல இகழ்வதும்
இகழ்வது போல புகழ்வதும்
கூடற் சுவை(அங்கதச் சுவை) என்றறிவோம்!
எடுத்துக் காட்டாக
"வாருங்கள் மது அருந்தலாம்
போதை தலைக் கேறினால்
நிர்வாணமாய் நடைபோடலாம்!" என
புகழ்வது போல இகழலாமே!
எடுத்துக் காட்டாக
"பண்ணையாருக்குப் பெருஞ்சோர்வு(நட்டம்)
கையிருப்பைக் கிள்ளி விசுக்கிறார்
ஊரெல்லாம் பசியாறுகிறது!" என
இகழ்வது போல புகழலாமே!
படிப்பவர் மூளைக்கு வேலை கொடுக்கும்
பாவலர்(கவிஞர்)களின் விளையாட்டைக் கையாண்டு
பா புனைவோம் வாருங்கள்!

4 கருத்துகள் :

  1. அருமை...

    வலைச்சரம் மூலம் உங்கள் தளத்திற்கு வருகை… Followers ஆகி விட்டேன்… தொடர்கிறேன்... இந்த வார வலைச்சர ஆசிரியருக்கு நன்றி...

    உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

    மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/03/blog-post_20.html) சென்று பார்க்கவும்...

    நேரம் கிடைத்தால்... என் தளம் வாங்க... நன்றி…

    பதிலளிநீக்கு
  2. எனது தளத்தை அறிமுகம் செய்த வலைச்சரம் தள மேலாண்மைக்கும் கருத்துத் தெரிவித்த மதிப்புக்குரிய அருணா செல்வம் அவர்களுக்கும் தங்கள் பாராட்டுக்கும் நன்றி. தங்களுடன் இணைந்து செயற்படுவேன்.

    பதிலளிநீக்கு
  3. ஐயா வனக்கம்.
    வலைச்சரத்தில் உங்கள் அறிமுகம் கண்டு இங்கு வந்தேன்.
    நல்ல பல விடயங்கள் கண்ணுற்றேன்.

    வாழ்த்துக்கள்!
    தொடர்கிறேன்...

    பதிலளிநீக்கு
  4. தங்கள் இனிய பாராட்டுக்கு நன்றி. தங்களுடன் இணைந்து செயற்படுவேன்.

    பதிலளிநீக்கு

வருக அறிஞர்களே! தருக தங்கள் கருத்துகளையே!