Translate Tamil to any languages.

செவ்வாய், 14 ஜனவரி, 2020

குறள் பாவும் விரிப்புப் பாவும் - 2


தைப்பொங்கல் வாழ்த்துகள்


தமிழாண்டின் நல்முதல்நாள் நம்பகல வன்திருநாள்
தைப்பொங்கல் வாழ்த்து உமக்கு! 
                               (இரு விகற்பக் குறள் வெண்பா)

உலகத் தமிழருக்குத் தான்
புத்தாண்டுத் திருநாள்!
உழவரின் உற்ற தோழன் தான்
பகலவனுக்குத் திருநாள்!
ஒற்றுமையாகத் தமிழர் வாழத் தான்
தைத்திருநாளில் பொங்கல் பொங்கி
வாழ்த்துப் பகிருவோம் வாரீர்!


அறிவைப் பெருக்கப் படி

புத்தாண்டு வந்தாலும் எத்தனைதான் சந்தித்தும்
புத்தகம்தான் நீபடிமுன் னேறு
                               (ஒரு விகற்பக் குறள் வெண்பா)

புலன்களால் உணரப்படுவதும்
வாசிப்பதால் உணரப்படுவதும்
அறிவு தான் காண்க.
நூலகம் சென்று அமைதியாக இருந்து
நூல்கள் சில படித்தாலும் - எமக்கு
அறிவு தான் வளரும் காண்!


வாசிப்பே அறிஞர் ஆக்கும்

வாசிக்கத் தான்விரும்பு நீஅறிவைத் தான்பெருக்கு
வாசிப்ப தால்அறிஞர் ஆகு.
                              (ஒரு விகற்பக் குறள் வெண்பா)

வாசிப்புக் குறைந்து செல்வதால் - அச்சு
ஏடுகள் தம்பணியை நிறுத்த முடிவு!
வாசிக்க மறந்த ஏடுகளில் கிடந்த அறிவினை
வாசித்தவர்கள் தான் திரட்டி இருப்பர்!
வாசிக்காமல் இருந்துவிட்டால் - நாம்
அறிஞர் ஆக வாய்ப்பு இல்லைக் காணும்!


ஏமாற்றாதே ஏமாறாதே

ஏமாறும் எண்ணம் இருக்கக்கூ டாதுகாண்நீ
ஏமாற்ற வும்எண்ணா தே
                              (ஒரு விகற்பக் குறள் வெண்பா)

ஏமாறும் எண்ணம் இருக்கும் வரைதான்
ஏமாற்றுவோர் ஏமாற்றலாம்!
ஏமாற்றியதற்காக - நீயும் பிறரை
ஏமாற்றலாமென எண்ணிவிடாதே!
எப்ப ஏமாறும் எண்ணத்தை மாற்றுவியோ
அப்ப நீ வெற்றி பெற்றவராகிறாய்!


4 கருத்துகள் :

  1. "யாசிக்கவே வேண்டாம் நீ நிறையவே வாசித்தால் இதை யோசிக்க வேண்டுமடி பாப்பா" ...
    ஐயா எனக்கு கவிதை வருகிறதா கொஞ்சம் பார்த்து சொல்லுங்க ... >> சயின்டிபிக் ஜட்ஜ்மென்ட் <<

    பதிலளிநீக்கு

வருக அறிஞர்களே! தருக தங்கள் கருத்துகளையே!