தாய்க்கு நிகராக
இன்னொருவள் இங்கில்லை
தாய் இல்லாமல்
நானும் இங்கில்லை - அந்தத்
தாய்க்குலம்
அடைகின்ற துயரிற்கு அளவில்லை
தாய்மைக்குத்
துணைபோன ஆணிற்கும் உணர்வில்லை
பிள்ளையைச்
சுமந்தீன்ற பெண்ணிற்கு மதிப்புமில்லை
பெண்களென்றால்
ஆணிற்குப் பணிந்தவள் என்றில்லை
முயன்றால்
பெண்களாலும் முடியாதது ஒன்றுமில்லை
சமவுரிமை
கேட்டுப் புறப்படு பெண்ணே பொங்கியெழு!
வீட்டிற்குவீடு
வாசல்தான் இல்லாமல் இல்லை
வீட்டுக்காரி
வீடுவாசல் கூட்டாமல் இருந்ததில்லை
வீடுகழுவி
மெழுகியவளை ஆண்கள் நினைப்பதில்லை
தேனீர், சாப்பாடு பிந்தினால் பெண்ணைத் திட்டாதவரில்லை
சமையலுக்குத்
துணைக்கு வாவென்றால் ஆண்களில்லை
துணைக்குப்
படுக்கப்பெண் இன்றியாண் தூங்கவில்லை
ஆணுக்குப்
பெண்ணென்றும் நிகராகஎழு அழிவில்லை
சமவுரிமை
கேட்டுப் புறப்படு பெண்ணே பொங்கியெழு!
ஆண்களுக்கு மீசைவைச்சாலும்
எப்பனும் அழகில்லை
கறுப்பியானாலும்
பெண்ணழகிற்கு ஈடான ஆணில்லை
என்னவோ வீடுகளில
பெண்ணுக்குத் தொடரும்தொல்லை
வீட்டுக்காரரின்
உடுப்புக் கழுவாட்டிலும் கணவர்தொல்லை
வழிநெடுகப்
பெண்களை மேய்கின்றவரால் வழித்தொல்லை
செயலகத்தில்
ஆளுமைகளின் மேய்ச்சலால் உளத்தொல்லை
தொல்லையின்றி
விடுதலைபெறப் பெண்கள் எழாமலில்லை
சமவுரிமை
கேட்டுப் புறப்படு பெண்ணே பொங்கியெழு!
பெண்வயிற்றில்
பிறந்தவங்க பெண்ணைப் புரிவதில்லை
பெரியவளானால்
வீட்டில நெருக்கடி கொஞ்சமில்லை
அழகியானால்
தெருப்பொடியள் தொல்லை எல்லையில்லை
ஈர்பத்தானால்
திருமணமெனப் பெற்றவருக்கு ஓய்வில்லை
திருமணமானால்
புகுந்தவீடு சிறையைவிடத் தோற்றதில்லை
படுக்கையறையில
கணவனின் தொல்லைக்குக் குறைவில்லை
பிறப்புக்கும்
இறப்புக்கும் இடையில பெண்ணுக்கு ஓய்வில்லை
சமவுரிமை
கேட்டுப் புறப்படு பெண்ணே பொங்கியெழு!
இறைவனிடம் சென்றிட மதங்கள் வழிகாட்ட வேண்டும்!
மதங்கள் புனிதமானவை!
மதங்கள் மக்களுக்கு வழிகாட்டுவன.
மதங்களின் பெயரால் மக்கள் முரண்பட
மதத் தலைவர்களே மூலகாரணம்!
"மதம்
மக்களை ஐக்கியப்படுத்தவே
மக்களை முரண்படவைத்துப் பிரிக்கவல்ல!
மதம்
இடத்துக்கு இடம்
உரிமை கோரப் போராட வைப்பதல்ல
மக்களை ஆற்றுப்படுத்தி
நெடுநாள் வாழ வழிகாட்டுவதே!" என்பதை
மதத் தலைவர்களே
அடியவருக்கு உணர்த்தி இருந்தால்
இடங்களிற்கான
உரிமை கோரல் போர் நிகழாதே!
"ஆண்டவர் ஒருவர் தான் - அந்த
ஆண்டவரை அடையும் வழி தான்
மதங்கள்!" என்பதை
மதத் தலைவர்களே
அடியவருக்கு உணர்த்தி இருந்தால்
மதமாற்றச் செயற்பாடுகளும்
இடம்பெற வாய்ப்பு இல்லையே!
தெளிவு தேவை!
ஒரு நல்லவரையோ
ஒரு கெட்டவரையோ
அவரைச் சூழவுள்ள
மக்களே
கண்டுபிடித்துவிடுவார்கள்
என்றால்
எவரெவர்
எப்படித்தான் தப்புவார்?
உள்ளத்தில்
இருப்பதே
சொல்லாகவோ
செயலாகவோ
மனித வெளியீடாக
மின்னுமாமே!
அவரவரது
நடை, உடை, பாவனை தான்
அவரவரை
அடையாளப்படுத்துமாமே!
எதைச் செய்தாலும்
தப்பிக்கத் தான்
எப்படியாயினும்
கற்றுக்கொள்ள
மறந்துவிடாதே!
அருமை
பதிலளிநீக்குஅருமை ஐயா...
பதிலளிநீக்கு