அகவை ஐம்பது தான்
ஆனாலும் கூட
ஆளைப் பார்த்தால்
இருபது மதிக்கலாமாம்
எனக்கிருக்கிற
நோய்களைக் கணக்கெடுத்தால்
அகவை எண்பதைத்
தாண்டியிருப்பேன்!
அகவை
பதினெட்டையும் தாண்டாத வாலை
மொட்டை என்றாலும்
அழகாய் இருக்கிறியள்
கட்டையர்
என்றாலும் மிடுக்காய் மின்னுறியள்
சட்டைப்
பைக்குள்ளே காசும் தலைகாட்டுது
தனக்குத் தாலி
கட்டினால் வாழலாமென
தெருத்தெருவாய்
பின்தொடர்ந்து அலைந்து வந்தாள்!
மொட்டைத் தலையில
மயிரை நட்டாலும் கூட
முளைக்க வாய்ப்பு
இல்லைப் பிள்ளை...
கட்டையரானாலும்
கட்டையில போகிற அகவையணை
சட்டைப்பைக் காசு
காற்றில பறந்தால்
தெருவில வெள்ளைச்
சேலை விரித்து
பிச்சை எடுத்தாலும்
கூட நாலு காசு தேறாது
பெட்டைப்
பிள்ளாய் உனக்கெங்கே ஏறப்போகுது
நானென்ற விறகுக்
கட்டை சுடலைக்கே
விடலைப் பெட்டையே
பெத்தவர் பேச்சுப்படி
பணக்காரப்
பிஞ்சுப் பொடியனைப் பாரடி
சாகும் வரை
கொஞ்சிக் குலாவி வாழலாமடியென
நானும் எப்பன்
எட்டாத் தொலைவில விலகினேன்!
சொல்லுக் கேளாக்
குமரிப் பெட்டை
வில்லுப்
பாட்டுக்கு ஆமாப் போடுமாப் போல
தெருவழியே
சொல்லுறதை கேட்டுக்கொண்டு வந்தவள்
சாகப் போகிற
பழுத்த கிழத்தை
நாடாமல் ஓடித்
தொலையடி என்றால்
குமரிமாதிரி
ஒல்லிக் குச்சியாய் நானிருந்தாலும்
அகவை நாற்பத்
தெட்டாச்சுப் பாருங்கோ
கிழட்டுக்
காதலும் பழுத்தோர் மணமுடிப்பும்
ஆயுளைக் கொஞ்சம்
நீட்டுமென் றெல்லோ
உங்களை நாடி
வழிகிறேன் என்றாளே!
காதலர் நாளில்... 1
காதலர் நாள்
வந்தால்
"உன்ர மூஞ்சியைக் கொஞ்சம்
முகம் காட்டும்
கண்ணாடியில பார்...
உன்ர மூஞ்சி
அழகில - உனக்கு
என் மீது காதல்
வருகிறதோ?"
என
என்னைக் கழித்து
விட்டவர்கள்...
என்னை ஒதுக்கி
வைத்தவர்கள்...
எல்லோரும்
நினைவில் வருகிறார்களே!
காதலர் நாளில்... 2
நல்ல இல்லாள்
இருக்காள்
மெள்ளக் காதலி
என்றால்
சமையலுக்கு உதவு
என்கிறாளே!
இத்தால்
சகலருமறிய
என்னைக் காதலிக்க
எவரும்
முன்வராமையால்
காதலர் நாள் (பெப் 14)
எனக்குத் தான்
இல்லையே!
காதலும் குடும்பமும் நடைபேசிக்குப் பின்னாலே...
விழுந்த
காதலியைத் தானும் தூக்குவாரில்லை...
விழுந்த மனைவியைத்
தானும் தூக்குவாரில்லை...
விழுந்ததும்
நடைபேசியைத் தானே தூக்கிறாங்கள்...
விழுந்ததும்
நடைபேசியின் நிலையையே நோக்கிறாங்கள்...
உறவுக்கு ஏற்ற
உளவியல் இது!
ஒருவனை ஒருவள்
விரும்ப வைக்க
ஒருவளை ஒருவன்
விரும்ப வைக்க
உடலுக்கு அழகாகத்
தங்கநகை போட்டோ
உடலுக்கு அழகாக
ஆடைகள் அணிந்தோ
ஆளையாள் விரும்ப
வைக்க இயலாதே!
ஆளையாள்
ஈர்த்துக் கொள்ளத் தானே
அவரவர்
விருப்பங்களை ஏற்றால் தானே
அவரவர்
விருப்பங்களுக்கு இணங்கினால் தானே
அடுத்தவர்
எம்மில் அன்பைச் செலுத்தலாம்
அடுத்தவர்
எம்மில் விருப்பம் கொள்ளலாம்
ஒருவரை ஒருவர்
விரும்ப வைக்க
ஒருவரை ஒருவர்
உணர்ந்து உறவாடுவோமே!
விருப்பு
வெறுப்பு அறிந்து உறவாடு
விரும்பும்
உள்ளங்களை அணைத்துச் செல்
வாழ்வு சிறக்க
நல்லுறவே முதலீடு!
இரசித்தேன் நண்பரே
பதிலளிநீக்குஅருமை தோழர்...
பதிலளிநீக்கு