உலகத் தமிழ்
வலைப்பதிவர்கள் எல்லோருக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்.
2018 இல் எனது
வலைவழிப் பயணம் சோர்வடைந்து இருந்தாலும் வலைப்பதிவர்கள் தந்த ஊக்கம் என்னைச்
சோர்வடைய விடவில்லை. அதனைக் கருத்திற்கொண்டு 2019 இல் வலைவழியே மரபுக் கவிதைப் போட்டிகளும்
மின்நூல் வெளியீடும் பரிசில் வழங்கலும் திறம்பட நடாத்தவுள்ளேன். இன்றுவரை எனக்கு
ஒத்துழைப்பு வழங்கிய எல்லோருக்கும் நன்றியைத் தெரிவித்துக்கொண்டு 2019 இல் இணைந்து செயற்பட அன்புக்கரம்
நீட்டுகிறேன்.
2019 தைப்பொங்கலை
அடுத்து 'தமிழில்
பாப்புனைய விரும்புங்கள்' என்ற எனது
மின்நூலை வெளியிடவுள்ளேன். 2019 சித்திரைப்
புத்தாண்டையொட்டி "உலகெங்கும் நற்றமிழ் பேணுவோம்" என்ற தலைப்பில்
ஆசிரியப்பா எழுதும் போட்டி நடாத்தவுள்ளேன். 2019 தீபாவளிப் பெருநாளையொட்டி "தமிழருக்கு
ஒற்றுமையே பலம்" என்ற தலைப்பில் வெண்பா எழுதும் போட்டி நடாத்தவுள்ளேன்.
"யாப்பு இலக்கணம்
பற்றிய அறிமுகக் குறிப்புகள்" என்ற தலைப்பிலான மரபுக் கவிதை புனையத் தேவையான
குறிப்புகளைக் கீழே விரித்துப் படிக்கலாம். இனிவரும் மரபுக் கவிதைப் போட்டிகளில்
பங்கெடுக்க இக்குறிப்புகள் உதவுமென நம்புகிறேன்.
கீழ்வரும்
இணைப்பையும் சொடுக்கிப் படிக்கலாம்.
மதிப்புக்குரிய வலைப்பதிவர்களே!
https://plus.google.com/u/0/communities/110989462720435185590
என்ற இணைப்பைச் சொடுக்கி 'உலகத் தமிழ் வலைப்பதிவர்கள்' குழுவில் உங்கள் புதிய பதிவுகளின் இணைப்பைப்
பகிர்ந்து உதவுங்கள். 2019 உலகத் தமிழ்
வலைப்பதிவர்கள் எல்லோருக்கும் பெருவெற்றிகள் கிட்ட உதவுமென வாழ்த்துகிறேன்.
கருத்துகள் இல்லை :
கருத்துரையிடுக
வருக அறிஞர்களே! தருக தங்கள் கருத்துகளையே!