30 ஆண்டுகளுக்கு முன்
(இப்ப எனக்கு 50)
நான்
காதலிக்க நினைத்த எவரையும்
என்னால் காதலிக்க முடியவில்லை...
எவளோ
என்னைக் காதலிக்க நினைத்தாலும்
அவளால் காதலிக்க முடியவில்லை...
வாழ்வில்
நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால்
கடவுளை நினைப்பவர் எவர்?
சிலர்
ஒரு தலைக் காதலாக
சொல்லிக் கொள்ளாமல் இணைவதில்லை
சிலர்
காதலைச் சொல்லி இணைந்தாலும்
திருமணம் வரை செல்வதில்லை
சிலர்
திருமணமான பின்னர் காதலிப்பதும்
(நானும் என்னில்லாளும் போல)
வாழ்வில் நிகழ்ந்தே தீரும்
ஆதாலால்,
உள்ளங்கள் உரசுவதால்
ஊற்றெடுக்கும் அன்பால் (காதலால்)
உறவாடும் உறவுகள் எல்லோருக்கும்
காதலர் நாள் வாழ்த்துகள்!
அதுவும்
வலன்டைன் நினைவாய் - எல்லோருக்கும்
காதலர் நாள் வாழ்த்துகள்!
"கி.பி.207 இல் ரோம் நாட்டை ஆண்ட இரண்டாம் கிளாடியஸ், ரோமானிய
வீரர்கள் பிரம்மச்சாரிகளாக இருந்தால் சலனங்கள் எதுவும் இல்லாமல் முழு ஆவேசத்துடன் போர்
புரிவார்கள் எனக் கருதினார். ஆகவே படையில் சேரும் இளைஞர்களுக்கு‚ 'திருமணம் ஆகியிருக்கக்
கூடாது; காதலிக்கக்கூடாது' எனச் சட்டமிட்டார் மன்னர்.
காதலை எப்படி ஒதுக்கி வைக்க முடியும்? வீரர்கள் இரகசியமாகக்
காதலித்தார்கள். அவர்களை ஆதரித்த 'வலன்டைன்' என்னும் பாதிரியார் இளைஞர்களுக்கு இரகசியமாக
திருமணம் செய்து வைத்தார். விஷயம் தெரிந்து, பாதிரியார் சிறையில் தள்ளப்பட்டார்.
ஆனால், பாதிரியாராலேயே காதலிலிருந்து தப்ப முடியவில்லை. சிறை
அதிகாரியின் பார்வை இழந்த மகள் அவருக்கு பணிவிடை செய்ய, காதல் மலர்ந்து விட்டது. 'இறைவா!
இந்தப் பெண்ணுக்குப் பார்வை கொடு!' என்று வேண்டி சிறையில் தவம் இருந்தார் வலன்டைன்.
பெண்ணுக்குப் பார்வை கிடைத்தது.
இதையெல்லாம் கேள்விப்பட்ட மன்னர் கிளாடியஸ் கோபம் கொண்டு பாதிரியாரின்
தலையைச் சீவும்படி ஆணையிட்டார். அதே ஆண்டு பாதிரியார் வலன்டைன் கொல்லப்பட்ட நாள் பெப்ரவரி
14 ஆகும்." என்ற தகவலை http://www.tamilwin.com/articles/01/135413 வலைப்பக்கமொன்றில்
படித்தேன்.
அதாவது, அந்த 'வலன்டைன்' என்னும் பாதிரியார் சாவடைந்த நாளான
மாசி 14 ஐக் "காதலர் நாள் (வலன்டைன்ஸ் டே)" என்றழைப்பதாக நானறிந்தேன். உண்மைக்
காதல் எதுவென உலகிற்கு உரைத்த 'வலன்டைன்' என்னும் பாதிரியார் வாழ்வு பலருக்குப் பாடமாகட்டும்.
இதனைப் படித்த பின் காதலிக்கலாம் வாங்க. ஏனெனில், நீண்ட ஆயுளுக்கு அன்பு (காதல்) நல்மருந்தாம்.
கருத்துகள் இல்லை :
கருத்துரையிடுக
வருக அறிஞர்களே! தருக தங்கள் கருத்துகளையே!