கடந்த தீபாவளியன்று
(2017-10-18 ஆம் நாள்) காலை 9 மணிக்கும் மீண்டும் இரவு 8 மணிக்கும் பாலிமர் தொலைக்காட்சி ஒளிபரப்பிய பட்டிமன்றத்தைப் பார்க்காதோர் பார்வைக்கு:
தலைப்பு:
பிள்ளைகளை வளர்ப்பதில் பெரும்பங்காற்றுபவர் தாயா? தந்தையா?
நடுவர்:
திருமிகு பழ.கருப்பையா அவர்கள்
தாயே அணி:-
புதுக்கோட்டை
நா.முத்துநிலவன் (அணித்தலைவர்)
திருமிகு
“ரேடியோ மிர்ச்சி“ மிருதுளா, சென்னை
திருமிகு
மதுரை முத்து,
திருமிகு
சாரோன், சென்னை.
தந்தையே
அணி:-
மதுக்கூர்
இராமலிங்கம் (அணித்தலைவர்),
திருமிகு
பேரா.கல்யாணசுந்தரம், கோவை
திருமிகு
தேவகோட்டை மகாராஜன்,
திருமிகு
பர்வீன் சுல்தானா, சென்னை
மேற்காணும்
தகவல் பெற்ற இணைப்பு-
முதலில்
பட்டிமன்றம்; அடுத்து வாதாடலாம் வாங்க!
உலகத் தமிழர்
வீடுகளில் ஒவ்வொருவரும் பார்க்க வேண்டிய பட்டிமன்றம் இதுவென்பேன்.
மேற்காணும்
பட்டிமன்றத்தைப் பார்த்தாச்சா?
பிள்ளைகளை
வளர்ப்பதில் பெரும்பங்காற்றுபவர்
அம்மாவா
அப்பாவா எனக்கும் ஐயம் தான்...
ஆயினும்
பட்டிமன்ற
நடுவர் கூற்றுப்படி உணர்வீர்
சான்றுகள்
அதிகம் காட்டி நின்று
அம்மா பக்கம்
ஈர்த்து விட்டனர்
பாவலர் முத்துநிலவன்
குழுவினரே!
பட்டிமன்ற
நடுவரின் உறைப்பான தீர்ப்பை
நானும் உங்களுடன்
பகிர விரும்பினேன்
விளைவாக
இப்பதிவு உங்கள் பார்வைக்கு!
அம்மாவும்
தேவை அப்பாவும் தேவை
நானென்ற
குழந்தை நாடறிய...
அம்மாவின்
அன்பும்
அணைப்பும்
அறிவூட்டலும்
அப்பாவின்
அறிவூட்டலும்
நம்பிக்கையூட்டலும்
வழிகாட்டலும்
என்றவாறு
எண்ணிப்பார்த்த வேளை
இருவரது
பணியும் எனக்குத் தேவை தான்...
நானென்ற
மனிதனை உலகறிய...
உலகத் தமிழ்
வலைப்பதிவர்களே!
உங்களை வளர்த்தெடுத்ததில்
பெரும்பங்காற்றியவர்
அம்மாவா?
அப்பாவா? - உங்கள்
வாழ்வில்
நீங்கள் எண்ணிப்பார்த்ததை
அப்படியே
பகிருங்கள் - அவை
எப்படியாயினும்
பலருக்கு நிறைவைத் தருமே!
கீழ்வரும்
இணைப்புகளைச் சொடுக்கிப் பயன்பெறுக.
கருத்துகள் இல்லை :
கருத்துரையிடுக
வருக அறிஞர்களே! தருக தங்கள் கருத்துகளையே!